செவ்வாய், 11 ஜூலை, 2023

மனோன்மணியம்- தமிழ்த் தெய்வ வணக்கம் பெ.சுந்தரனார்

                                                       தமிழ்த் தெய்வ வணக்கம்

                                             மனோன்மணியம் - பெ.சுந்தரனார்

1) நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே 

விளக்கம்

     நீர் நிறைந்த கடல் எனும் ஆடையை உடுத்திய நிலம் எனும் பெண்ணுக்கு, அழகு ஒழுகக்கூடிய சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கின்ற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! 
பாடல்-2

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!

விளக்கம்

    பல வகையான உயிர்களும் ஏழேழ் உலகமும் படைக்கப்பெற்ற பின்னர் நீங்கிச் சென்றாலும், உலக எல்லைகளைக் கடந்தும் இருக்கின்ற பரம்பொருள் (இறையானது) என்றென்றும் நிலையாக இருப்பது போல் தமிழ்ப் பெண்ணே நீயும் இருக்கின்றாய். உன் குருதியிலிருந்து தான் கன்னடமும் மகிழ்வுடைய தெலுங்கும் அழகு பொருந்திய மலையாளமும் துளு என்கிற மொழியும்  ஒன்று மற்றொன்றாக விரிவடைந்து பலவாறு திகழ்ந்திருக்கிறது. ஆரியமொழி (வடமொழி) போல் பேசுவாரின்றி உலக வழக்கு அற்றுப் போகாமலும் சிதையாமலும் உள்ள இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! 

எழுத்தாணி  /  at  ஜூலை 11, 2023  /  No comments

Posted in: Read Complete Article»

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.