சனி, 4 ஜூன், 2016

செத்தான் சிதம்பரம்

அய்யோ சாகுற வயசா இது..? உன் தைரியத்த இனி யாருக்கிட்ட பாக்கப்போறேனோ..? சண்டாளன் எமனுக்கு அப்படி என்ன அவசரம்..? பாசக்கயிற வேற யாருக்காவது வீசியிருக்கக் கூடாதா..? மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து தெருவைச் சுத்திசுத்தி வந்து பெருங்கூட்டத்தையே கூட்டிவிட்டாள் சவுந்தியம்மா..
இந்தா எலவு வீட்டுல போய் அழுவாம ஊருக்குள்ள வந்து ஏன் ஒப்பாரி வைக்கிற..? கரகரத்த குரலில் பெரியகருப்பன் சத்தம் போட்டதும் சவுந்தியம்மா வாயை முந்தானையால் பொத்திக்கொண்டு அய்யோ ஒப்பாரி வைக்கக் கூட ஒசரம் இல்லாம போய்ட்டேனா என் ராசா… என்று புலம்பியபடி எலவு வீட்டை நோக்கிப் பறந்தாள் சவுந்தி..
யாருப்பா இந்தக் கெழவி ஒப்பாரி வச்சு ஊரையே கூட்டிப்புட்டா..?
செத்துப்போயிருக்காரே சிதம்பரம,; அவரோட..
அவரோட..? அட சொல்லுப்பா
அவரோட அத்த மவ ப்பா..
ப்ப்பூ அத்த மவதானா..?
ஏன் நீ என்னனு நெனச்ச..? இப்படி பேச்சு வளந்து கொண்டே போனத முருகையாவால் பொறுத்திருந்து கேக்க இ~;டமில்ல.. வேகமாக நடயக் கட்டி வீட்டுக்காரங்களுட்ட பணம் வாங்கப் புறப்பட்டான்..
பாடை கட்ட மூங்கில், பானைமுட்டி, பாடை மாலை, அலங்காரப் பொருட்கள், வானவெடி, சுடுகாட்டுப் பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டும். இந்த வீட்டு எலவுக்கு மட்டுமல்ல ஊர்ல யாரு செத்தாலும் முருகையாதான் எல்லா பொருளும் வாங்கிட்டு வருவான்..
இத ஊர்ல பல பேரு சேவைனு நெனச்சுட்டு இருக்காய்ங்க.. ஆனா முருகையாவோட திருட்டு வேலைகள்ல இதுவும் ஒன்னு. எலவு வீட்ல எப்படியும் ஐயாயிரமாவது வாங்கிட்டுப் போய் நாலாயிரத்து ஐந்நூறுக்கு கணக்கும் காண்பிச்சுடுவான். ஆனா அவன் சட்டப் பையில கொறஞ்சது ஆயிரத்து ஐந்நூறாவது எட்டிப்பாத்துட்டு இருக்கும்.. எலவு விழுந்தா சந்தோசப்படுற ஒரே ஆளு முருகையா மட்டும் தான்.
அண்ணே டைம் ஆயிடுச்சு.. செய்ய வேண்டிய காரியம்லாம் அப்படியே கெடக்கு. பணம் கொடுத்திட்டீங்கனா ஆக வேண்டிய காரியங்கள வெரசா பாத்துறுவேன்..
எப்ப? எங்க? எப்படி  பணம் கேக்கணுங்ற அத்தனை விவரமும் முருகையாவுக்கு அத்துப்படி. நெனச்ச பணத்த வாங்கிட்டுத்தான் வீட்ட விட்டு வெளிய வருவான். பயலுக்கு புத்தி படும்பயங்கரமா வேல செய்யும். இந்த சூதனம் ஊர்ல ஒரு பயலுக்கும் இல்லங்றது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்..
சிதம்பரம் வீட்டுலயும் நெனச்சபடியே ஐயாயிரத்த வாங்கிட்டு பரபரப்பா வெளிக்கௌம்பிட்டான். பணம் வாங்கிட்டா ஒரு நிமிசத்துக்கு மேல நிக்கக் கூடாதுங்றது முருகையாவோட தொழில் தர்மம். பெருசா ஒரு காரணமும் இல்ல. வேற யாராவது பங்குக்கு வந்துடக்கூடாதுங்ற பயம்தான்..
பொணத்த குளிப்பாட்டி,  நீர்மாலை எடுக்க வச்சு, பாடைய கட்டி குழிக்குள்ள செம்முற வரைக்கும் முருகையா பக்குவமா பாத்துருவான்.. வெத்தலயோட  பான்பராக்கயும் சேத்து வச்சு போதையோட தான் வேலைய பார்ப்பான். யாருக்கிட்டயும் பேசமாட்டான். யாரு புத்தி சொன்னாலும் பொருட்படுத்தவே மாட்டான்.. அது அவனுக்குப் புடிக்காது. யாருக்கோ சொல்ற மாதிரி வேலைய மட்டும் பாத்துக்கிட்டே இருப்பான்.
ஏம்ப்பா இந்த முருகையா எங்க போய்த் தொலஞ்சான்..? காலைல ஐயா மகனுட்ட ஐயாயிரம் வாங்கிட்டுப் போனவன் அப்பிடியே போயிட்டானா? இந்தா இருக்குற கீழக்கோட்டைக்குப் போய் வர இன்னேரமா? னு மனோகரன் கோபப்பட ஆரம்பிச்சுட்டாரு. இப்படியொரு சத்தம் வந்துட்டா இப்பத்தான் யாரோ மனோகரனுக்கு ஊத்திவிட்டுருக்கானுங்கனு அர்த்தம். மனோகரனும் லேசுப்பட்ட ஆளு இல்ல. ஒரு காலத்துல மனோகரனும் செத்துப்போயிருக்குற சிதம்பரமும் ஒன்னா சேந்து போடாத ஆட்டமே இல்லயாம்.
அரசாங்கத்துல இருந்து வர்ற திட்டங்கள் எல்லாம் இந்த ரெண்டு பேர தாண்டித்தான் ஊருக்குள்ள வரும். அதுல நிறைய லாபம் பாத்துருக்காங்க. பிராடுத்தனம் பண்ணாலும் அதுல ஒரு மனுசத்தன்மையோடுதான் செஞ்சிருக்காங்க. காலனி வீடு கட்டுனதுல தான் ரெண்டு பேரும் பங்கு போட்டு கொள்ளையடிச்சுருக்காங்க. பங்கு சரியா வரலைங்ற கோபத்துல மனோகரன் சிதம்பரத்த கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுனதோடு  முன்னாடி செஞ்ச தில்லாலங்கடிகளையும் போட்டு உடச்சுட்டாரு. அதுல இருந்து ரெண்டு பேரும் பேசிக்குறதில்லங்றது பழைய கதை.
ஆனா மக்களுக்கு சிதம்பரம் மேல ஒரு மரியாத இருந்துச்சு. கொள்ளையடிச்சாலும் மனுசன் எல்லாருக்கும் நல்லா செஞ்சாம்ப்பா.. இதுதான் சிதம்பரம் சேமிச்சு வச்சுருந்த பேரு.
பிரிஞ்சு போன மனோகரன,; சிதம்பரத்தோட சாவுக்குத்தான் வந்துருக்காரு.
முருகையாவும் வந்துட்டான். ஏ முருகையா நீர் மாலை எடுக்க நேரமாச்சு. நீ இன்னும் பாடை கட்டாம இருக்குற? மூங்கில் தான் கெடக்கு. வாவரசம் குச்சியக் காணம்? வாவரசம் இல்லாம எப்படி நடுவ வளைப்ப?
பரபரப்பா மனோகரன் பேசி முடிச்சதும் எல்லாம் எங்களுக்குத் தெரியும் அவுகவுக சோலிகள மட்டும் பாருங்கனு ஒத்த வார்த்தைல முடிச்சுட்டு வெத்தலைய துப்பிப்புட்டு போயிட்டான். அது என்னவோ மனோகரன் மூஞ்சியில் துப்புன மாதிரியே இருந்துச்சுனு அந்த இடத்துல பேச்சு.
மனோகரன் நிதானம் இல்லாம, என் பங்காளி செத்துப் போயிட்டான்னு வர்றவங்க போறவங்களுக்கிட்டலாம் போதைல பொலம்ப ஆரம்பிச்சுட்டாரு. டேலேய் இன்னக்கி இன்னொரு பொணம் விழப்போகுதுடோய்.. னு சின்னப் பசங்க மனோகரன பாத்து  நக்கலாக பேசிக்கிட்டுப் போனத பாத்து சில பெருசுகளாலயும் சிரிக்காம இருக்க முடியல.
பாடைய கட்டிட்டு முருகையா விறுவிறுனு வீட்டுக்குள்ள புகுந்து, அண்ணே வேல முடிஞ்சிடுச்சு. தூக்குற நேரம் பாத்துட்டு வந்தேன். 2 ஆம் பாதத்துல செத்துருக்காறாம். ஊருக்கு நல்லது இல்லயாம். நாளக்கி பளிங்குப் பாறைக்குப் போய் தோசம் கழிக்கனுமாம். அத நாளைக்கு நானே பாத்துக்குறேன். இப்ப 2.30 ல இருந்து 4.15 க்குள்ள எடுக்கணுமாம் சோசியரு குறிச்சுக் குடத்துருக்காரு. இந்தாங்க னு துண்டு சீட்ட சிதம்பரத்தோட மூத்த மகன்கிட்ட காண்பிச்சான்..
சரி முருகையா எல்லாத்தயும் பொறுப்பா பாத்துக்க. இந்த டைம்லயே தூக்கிடலாம்.
சம்மந்தப்புரம் மூணும் வந்துடுச்சா.. வந்ததும் உள்@ர் பச்சை எடுக்கணும்பா.. ஏம்ப்பா முருகையா நீர்மாலை எடுக்க நாடா துணி வாங்கிட்டு வந்துட்டியா..? நீர்மாலை சொம்பு, நூல்கண்டு, முட்டி எல்லாத்தயும் எடுத்து வைய்ங்கப்பா. பிரேதத்த குளிப்பாட்டுன உடனே காரியத்த பாக்கணும். உலைல போட்ட அரிசி மாதிரி கொதிக்க ஆரம்பிச்சுட்டாரு லெட்சுமணன். ஏம்ப்பா மொட்டயடிக்க ஆள் சொல்லியாச்சா..? அப்பறம் சோணயன் சாவுல வெறும் பிளேட வச்சு சீவுன கதையா போயிடப் போகுது.
மனோகரண்ணே.! போய்ட்டு உள்@ர் பச்சைய வரச் சொல்லுங்க. கால தாமதம் காரியத்துக்குக் கேடுனு தெரியாதா உனக்கு? போன்ணே ஊருக்குப் பெரிய மனுசன் கூட்டிக்கிட்டு வான்ணே…? னு ஏதோ ஒரு குரல் சொன்னவுடனே மனோகரன்  வேட்டி நுனிய தூக்கி ஏத்திக்கட்டிக்கிட்டு மனுசன் விறுவிறுனு கொண்டு வந்து சேத்துட்டாரு..
வடக்கு தெற்கா வச்சு குளிப்பாட்டுங்கப்பா. இது கூடவா தெரியாது? போட்டுறாம தூக்கனும். டேய் சின்னப் பயலுகலாம் இங்கிட்டுப் போங்கடா. ஐஸ் பெட்டிக்குள்ள இருந்த உடம்பு. ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கும். தண்ணிய தொளிச்சுட்டு எடுங்கப்பா. ஏம்ப்பா ஐஸ்ல இருந்தத ஏம்ப்பா குளிப்பாட்டுறீங்க..?
சும்மா தெளிச்சுட்டு காரியத்த பாருங்கப்பா..
சும்மா ஆளாளுக்கு பேசாதீங்க. உள்@ர்காரங்கனு நாங்க எதுக்கு இருக்குறோம்? னு குணசேகரன் கோபப்பட்டு கத்துனதுல எல்லாரும் ஆப்பாயிட்டானுங்க..
அந்த உரல எடுத்துட்டு வாங்க.. தலமாட்டுக்கிட்ட வைங்க.. முருகையா சொல்ல சொல்ல செய்ய எல்லாரும் அவன் முகத்தய பாத்துக்கிட்டு நின்னது நல்லா தெரியுது. உரல தலமாட்டுலயா வய்ப்பாங்க கால்மாட்டுலதான் வய்க்கனும் னு யாரோ வார்த்தய விட பெரிய கைகலப்பே வர இருந்துச்சு. குணசேகரன்தான் வெலக்கிவிட்டாரு.
தாலிய அறுக்கணும் நாச்சம்ம ஆத்தாவ கூட்டியாங்க. முருகையா எதஎதயோ எடுத்து வச்சுக்கிட்டு இருந்தான். இந்த உரல்ல ஆத்தாவ உக்கார வய்யுங்க.
முகத்துல நல்லா மஞ்சள பூசி, பெரிய பொட்டு வச்சு, தாலிய அறுத்த போது அய்யோ தாலிய அறுக்குறாங்களே னு நாச்சம்ம கத்தி தீத்துப்புடுச்சு. அதப் பாத்து பெரிய பெரிய ஆம்பளயாளுங்க கூட கண் கலங்கிப் போனத அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துட முடியாது.
ம்ம்ம்  சரிசரி சீயக்காய் எண்ணெய் தொட்டு வைக்க வாங்க னு முருகையா கல் நெஞ்சக்காரன் மாதிரி சத்தம் போடத் தொடங்கினான். வரிசையா எல்லாரும் வெத்து உடம்ப பாத்து அம்புட்டு சனமும் அழுதுகிட்டே போனுச்சு..
பாடைய தூக்கி வடக்குத் தெற்கா வைய்ங்கப்பா..
அட பொறுங்கப்பா.. சடங்கெல்லாம் முடியட்டும்.. இன்னும் என்னய்யா இருக்கு உங்க சடங்கு..? யாரோ வெளியூர்காரன் சவுண்டு கூட்டத்துக்குள்ள வந்த வேகத்துல அமுங்கிவிட்டது..
பொம்பளைங்க மாரடிக்கணும், சம்பந்தப்புரம் எல்லாம் சடங்கு செய்யணும்………
யோவ் முருகையா! நீ பாடைய தூக்கிட்டு வாயா.! அதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சிரும். கடுப்பாகி போன முருகையா. அவன்அவன் சோலிகளப் பாருங்கய்யா எனக்குத் தெரியும். இப்பத்தான் ஆளாளுக்கு வேலை வைக்கிறீகளோ..? னு ரொம்ப கோபப்பட்டுட்டான் முருகையா.
சடங்கு எல்லாம் ஒரு வழியா முடிஞ்சது.
ஏம்ப்பா தலைமாட்ட ஒருத்தர் வாங்கி வைக்கப்புடாதா? தொங்குனபடியா தூக்குறது? என்ன ஆம்பளங்க? னு ஒரு கௌவி வாய்..
ஏம்ப்பா! எரிக்கிறதா? பொதைக்கிறதா? இதுவும் வெளியூர் காரனத்தான் இருக்கும். சொகமில்லாம கடந்த உடம்ப பொதக்கிறதுங்கிறது கட்டானிப்பட்டி ஊர்க்காரங்க வழக்கம்.
பாடைய தூக்கும் போது ஒரே ஓலம், ஒப்பாரி….
இளைஞர் பட்டாளம்தான் பாடைய தூக்குறது.. சின்னப் பசங்க கோவிந்தா கோவிந்தா னு கத்திக்கிட்டு அலப்பறய கூட்டிப்புட்டாய்ங்க.. ஆயிரம் சரம் சீனி வெடிய வேற போட்டுவிட்டாய்ங்க.. அது ரொம்ப நேரம் கழிச்சு மனோகரன் காலுக்குள்ள வெடிச்சதுல,  வெக்காலி யாருடா அவன் வெடிய காலுக்குள்ள போட்டவன்னு பொலம்ப ஆரம்பிச்சுட்டாரு.. பயலுக சிரிச்சுக்கிட்டே செதறிட்டானுங்க.
இந்த இடத்துல நாம கொடம் ஒடைக்கக் கூடாதுப்பா.. தள்ளி வைய்ங்க தள்ளி வைய்ங்க.. முகம் வீட்ட பாத்து இருக்கனும்ப்பா…
வாங்கம்மா வந்து முட்டிய தூக்குங்க.. பொத்து விடுறா முருகையா.. வாக்கரிசி போடுறவுக போட்டுவிடுங்க.
அவ்வளவுதாம்ப்பா தூக்கு தூக்கு.. மறுபடியும் கோவிந்தா கோவிந்தா சத்தம்..
ஒரே ஆளு தூக்காம கை மாத்திக்கிருங்க பசங்களா.. ஒரு அக்கறை குரல். சுடுகாட்டை நோக்கி பாடை வேக வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது..
ஸ்ஸ்ஸப்ப்ப்பாhhh.. வை வை வை வை… வடக்குத் தெற்குதான்.
இனி விடுங்கப்பா முருகையா பாத்துக்குவான்…
பாடைய மூனு ஆத்து ஆத்திட்டு தூக்கிப்போடுங்கப்பா. எத்தன காரியம் பாத்துருக்கீங்க. இன்னமுமா தெரியல.
பாடைய தூக்கிப் போட்ட உடனே போய்ட்டு மூனு வெட்டு வெட்டனும் மறந்துறாதீக..
மூனு மகன்களுக்கும் மொட்டையடிச்சாச்சு. வெரசா காரியத்த முடிப்பா முருகையா.
யாருப்பா குளிக்குள்ள எறங்குறது..?
ஒரு பெருசும் வாய தொறக்காது பாருவே னு எவனோ ஒருத்தன் மொணங்கிக்கிட்டு இருந்தான்.
எளந்தாரிக எறங்காதீகப்பா.. ஏம்ப்பா பெரிய ஆளுக எறங்கக் கூடாதா..?
ஒரு வழியா மன்னனும் மாணிக்கமும் எறங்க ரெடியாயிட்டாங்க..
மெல்ல மெல்ல சொல்லி வச்சு தான் ஏறனும். சொல்லி வச்சு தான் எறங்கனும்.
வாக்கரிசி போட்டுவிடுங்கப்பா..
மண்ண தள்ளிவிடுப்பா முருகையா. சொன்னவுடன் ஆளுக்காளு சொம்மிட்டானுங்க.
பொண மேட்டு மேல பால் , எலனி, எள்ளு, தண்ணீர்விட்டு குச்சிய நட்டு வச்சுட்டு எல்லாம் கௌம்ப ஆரம்பிச்சுட்டாங்க..
நல்ல மனுசன். தானும் திண்ணாரு. ஊருக்கும் கொடுத்தாருப்பா..
அவ்வளவு தான் இனி யாரு சிதம்பரத்தபத்தி பேசப்போறது..?

Ulagasivan Sivan  /  at  ஜூன் 04, 2016  /  2 comments

Posted in: Read Complete Article»

2 கருத்துகள்:

சங்க ஏடு : உயிரும் மகளும்

சங்க ஏடு : உயிரும்  மகளும்  

    ஆணும் பெண்ணும் பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் கொள்ளுதல் என்பது உலகெங்கிலும் நடக்கின்ற ஒன்று. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ்ப் பாரம்பரியத்தில் தொடர்ந்து வருகின்றது. ஆனால் அன்று ஒரு நாகரிகம் இருந்தது, இன்பமும் துயரமும் கலந்து இருந்தது. எப்படியென்று அகநானூறு என்னும் பழந்தமிழ் நூல் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.   
பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் தலைவி (பெண்). தலைவனும் தலைவியும் சந்தித்து உரையாடுவதற்கு ஏற்ற இடமில்லை. காரணம் பல இடையூறுகள் இருந்து கொண்டே வருகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்து அடைத்தும் விடுகின்றனர். இவ்வளவும் கண்டு பொறுக்க முடியாத பெண் தனது அன்பாளனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள். கடுமையான காடு வழியாக இருவரும் ஓடிவிட்டனர் என்ற செய்தி கிடைக்கிறது. இதைக் கேட்ட தாயின் மனது எப்படித் தாங்கும்? புலம்புகிறாள், அழுகிறாள். தாய் புலம்பிக்கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்து வீட்டார்கள். அழாதே! அழாதே! என்று ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால் பொறுக்க முடியாமல் ஆறுதல் கூறியவர்களைப் பார்த்துக் கீழ்வருமாறு புலம்பித் தீர்க்கிறாள் தாய்.
கவிதை வடிவம்
வெயில்! வெயில்! 
கடுமையான வெயில்!
மலையே பிளக்கும்படி
சூரியன் 
சுட்டெரித்துக் கொண்டிருக்கிறான்..
ஈந்து மரத்தில் 
சுகமாய் வாழ்ந்து வந்த
பறவையினங்கள் 
சுடு வெயிலால் சோர்வடைந்தன..
உளி போன்ற கற்கள்
உறுத்திக் கொண்டு நிற்கின்றன..
நடந்தால் கால்களைப் 
பதம் பார்த்துவிடும் 
கொடிய பாதை அது..
எப்போது என்ன நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாத மூங ;கில் காடு..
திடீரென தீப்பிடிக்கும் 
பாதகமும் உண்டு..
இந்த அடர்ந்;த காட்டில்
கருப்பு யானை போன்று 
வீரம் கொண்ட ஆண்மகனைப்
பற்றிக் கொண்டு சென்று விட்டாள் என் அன்பு மகள்..
அதற்காக நான் வருந்தவில்லை..
ஆனால்
என்னை 
நினைத்துப் பார்த்தாளா அவள்..?
எனக்கு ஆறுதலே 
அவள் ஒருத்தி தானே..?
உலையில் ஊதும்
ஊதுகுழாய் போல
மெலிந்து போகிறேன்..
என் கவலை அவளுக்கு
ஏன் புரியவில்லை..?
தீயில் வெந்து சாகின்றேன்..
உறக்கம் இன்றி உளறுகிறேன்..
இப்படி புலம்பவிட்டுச் சென்றுவிட்டாள்
என் அன்பு மகள்..
ஐயோ என்ன செய்வேன்..?
அன்றொரு நாள்
வெண்ணி என்னும் போர்க்களத்தில்
கரிகால் சோழனொடு போர் செய்து
வீழ்ந்தான் பெருஞ்சேரலாதன்..
எப்படித் தெரியுமா..?
நெஞ்சில் குத்திய அம்பு
புறமுதுகு வரை சென்று 
புண்ணாகிப்போனதால் 
வெக்கப்பட்டு வாளால் 
வடக்கிருந்து வீழ்ந்தான்..
துன்பம் தரக்கூடியது தான்
என்றாலும் 
பெருஞ்சேரலாதன் செயலில்
இன்பமும் இருந்தது..
செய்தி கேட்ட மக்களும்
மன்னன் வழியில் 
உயிர் துறந்தனர்…
ஆனால் 
என் மகள் என்னைப் பிரிந்தும்
எனது உடம்பில்
உயிர் ஒட்டிக்கொண்டு 
இருக்கிறதே
இந்த 
உயிரைத்தான் நான் வெறுக்கின்றேன்..
என் மகளை அல்ல..!
இந்த செய்தியைத் தருகின்ற பழம்பெரும் பாடலை எழுதியவர் மாமூலனார். இதோ அந்தப் பாடல்..

காய்ந்து செலற் கனலி கல்பகத் தெறுதலின்
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
உளி முக வெம்பரல் அடி வருந்துறாலின்
விளி முறை அறியா வேய் கரி கானம்
வயக் களிற்று அன்ன காளையோடு என் மகள்
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனேஒழிந்து யாம்
ஊது உலைக்குருகின் உள்உயிர்த்து அசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன் கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன் 
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் 
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
காதல் வேண்டி எற் துறந்து
போதல் செல்லா  என் உயிரோடு புலந்தே
                 (அகநானூறு : 55)
உரைவடிவம்
மனிதர்களுக்குத் துன்பம் விளைவிக்கின்ற கொடுமையான காட்டின் வழியாக என் மகள் வீரன் ஒருவனுடன் சென்றுவிட்டாள். நான் இப்பொழுது புலம்புவது அவளின் பிரிவை நினைத்து அல்ல.
ஒருகாலத்தில் வெண்ணி என்கின்ற இடத்தில் கரிகால் வளவனோடு போர் செய்த பெருஞ்சேரலாதன் போரில் அம்பு பட்டு வீழ்ந்தான். வீரமரணமே அடைந்தாலும் அம்பு புறமுதுகில் பட்டதால் இழுக்கு என்று நினைத்து வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்தச் செய்தியைக் கேட்ட அவன் நாட்டு மக்கள் துன்பத்திலும் ஓர் இன்பச் செய்தியெனக் கருதித் தாங்களும் உயிர் துறந்தனர்.
 இவ்வளவு துன்பம் அடைந்தும் எனது உயிர் இன்னும் போகாமல் இருக்கிறதே. இதை நினைத்துத்தான் நான் அதிகம் வருந்துகின்றேன். என் மகளை நினைத்து அல்ல என்பது இதன் பொருள்.
பழந்தமிழ்ச்சொற்கள்
கனலி - சூரியன், தெறுதல் - சுடுதல், ஈந்து – பழங்காலத்து மரம், குருகு – கொக்கு போன்ற ஒரு பறவை, கனவ – வாய் புலம்புதல், பறந்தலை – போர்க்களம்
குறிப்பு
உயிரை விட, பெற்ற மகளை அதிகம் நேசித்த பெற்றோர் வாழ்ந்த பரம்பரை, நம் தமிழ்ப்பரம்பரை.

Ulagasivan Sivan  /  at  ஜூன் 04, 2016  /  No comments

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.