சனி, 4 மார்ச், 2017

பழமொழி ஐந்நூறு

எழுத்தாணி  /  at  மார்ச் 04, 2017  /  2 comments

                                             பழமொழி 500

அனைவருக்கும்  தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து உதவியவர். ஏ.மேனகா, கணினி-வணிகவியல் துறை மாணவி, கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவி, திருச்செங்கோடு.

1)அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
2)அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்
3)அடியாத மாடு படியாது
4)அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும்
5 )அத்திப் பூத்தாற் போல்
6)அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?
7)அரசனை நம்பி புருஷனைக் கைவிடலாமா?
8)அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
9)அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
10)அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்
11)அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
12)அறிவே சிறந்த ஆற்றல்
13)அனுபவமே சிறந்த  ஆசான்
14)அன்பே கடவுள்
15)ஆசைக்கு அளவில்லை
16)ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்
17)ஆணுக்கு ஒரு நீதி.. பெண்ணுக்கு ஒரு நீதியா.?
18)ஆபத்துக்காலத்தில் உதவுபவனு உற்ற நண்பன்
19)ஆழம் தெரியாமல் காலை விடாதே
20)ஆபத்துக்குப் பாவம் இல்லலை
21)ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
22)ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
23)ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
24)ஆனைக்கும் அடி சறுக்கும்
25)ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
26)இக்கரைக்கு அக்கரை பச்சை
27)இனம் இனத்தோடு தான் சேரும்
28)ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
29)உண்மை ஒரு மைல் தூரம் செல்வதற்குள் வதந்தி உலகைச் சுற்றிவிடும்
30)உண்மையான நண்பனை ஆபத்தில் அறி
31)உப்பிட்டவரை உள்ளளவும் நினை
32)உப்பத் திண்ணவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்
33)உருவத்தைப் பார்த்து எடை போடாதே
34)உழைப்பின்றி ஊதியமில்லை
35)ஊருடன் கூடி வாழ்
36)எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டாற் போல
37)எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்
38)எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே
39)எல்லாம் நன்மைக்காக பிறகு எதற்காக?
40)எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
41)ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
42)ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை
43)ஏழைச் சொல் எடுபடாது
44)ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு
45)ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
46)ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனாம்
47)ஒரு கல்லில் இரண்டு மாங்காய்
48)ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
49) ஒற்றுமையே பலம்.
            50) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
51) ஓட்டைச் சட்டியானாலும் கொலுக்கட்டை வெந்தால் சரி
52) கடந்த காலம் திரும்ப வராது
53) கடவுளுக்கு அடுத்தபடி பெற்றோர்
54) கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
55) கடனைக் கொடுத்துச் சண்டையை விலைக்கு வாங்காதே
56) கடுகு போன இடம் ஆராய்வர். பூசனிக்காய் போன இடம் தெரியாது
57) கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே
58) கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறியாதே
59) கத்தி முனையை விட பேனா முனையே சிறந்தது
60) கல்வி கரையில கற்பவர் நாள் சில
61) கல்வியே சிறந்த செல்வம்
62) கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை
63) காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
64) காதலுக்குக் கண்ணில்லை
65) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
66) குரைக்கின்ற நாய் கடிக்காது
67) சிறு துரும்பும் பல் குத்த உதவும்
68) சிறு துளி பெரு வெள்ளம்
69) சுருங்கச் சொல்லி விளங்க வை
70) சூடு கண்ட பூனை அடுப்பாண்டை செல்லாது
71) செத்த பாம்பு கடிக்காது
72) செய்யும் தொழிலே தெய்வம்
73) செல்வம் செல்வத்தோடு சேரும்
74) செவிடன் காதில் சங்கு ஊதினாற் போன்று
75) சொல்வது வேறு. செய்வது வேறு27) சோம்பேறியின் நாக்கு சும்மா இருக்காது
76) தங்கப் பொதி சுமந்தாலும் கழுதை கழுதைதான்
77) தடியெடுத்தவன் தண்டல்காரன்
78) தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
79) தருமம் தலைகாக்கும்
80) தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று
81) தனக்குப் போகத்தான் தானமும் தருமமும்
82) தனிமரம் தோப்பாகாது
83) தன் குற்றம் தனக்குத் தெரியாது
84) தன் கையே தனக்குதவி
85) தன் வினை தன்னைச் சுடும்
86) தாடி வைத்தவன் எல்லாம் தத்துவ ஞானியா?
87) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
88) தாரமும் குருவும் தலைவிதிப்படி
89) தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்க்காதே
90) தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
91) தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
92) திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
93) திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
94) தீமையிலும் நன்மை உண்டு
95) துஷ்டனைக் கண்டால் தூர விலகு
96) தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பாதே
97) தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
98) தோல்வியே வெற்றிக்கு அடிப்படை
99) தடுக்கிவிட்டால் துடைத்து எழு
100)தன்னைநம்பியவனேதரணியாளதகுதியுடையவன்                                                              101)நம்புவதற்கு முன் நண்பனையே சந்தேகப்படு
102)நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்
103)நாய் வாலை நிமிர்த்த முடியாது
104)நாய் விற்ற காசு குரைக்காது
105)நிழலின் அருமை வெயிலில் தெரியும்
106)நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்
107)நெருப்பின்றி புகையாது
108)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
109)பகலில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே
110)பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
111)பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்
112)பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும்
113)பணம் பத்தும் செய்யும்
114)பதறிய காரியம் சிதறும்
115)பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
116)பழகப் பழகப் பாலும் புளிக்கும்
117)பழிக்குப் பழி, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்
118)பள்ளிக் கணக்கு புள்ளிக்குதவாது
119)பாம்பின் கால் பாம்பறியும்
120)பார்த்தால் பசு பாய்ந்தால் புலி
121)பிஞ்சிலே பழுத்தது விரைவில் வெம்பிவிடும்
122)பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே
123)புத்திமான் பலவான்
124)புலிக்குப் பிறந்தது பூனையாகாது
125)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
126)பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா?
127)பெண்ணிடம் இரகசியம் நில்லாது
128)பேராசை பெருநஷ்டம்
129)பொறுத்தார் பூமி ஆள்வார்
130)போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
131)போலி நண்பனை விட நேரடி எதிரி மேல்
132)மடியிலே கனமிருந்தால் வழியிலே பயமிருக்காது
133)மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு
134)மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
135)மன்னிப்போம் மறப்போம்
136)மின்னுவதெல்லாம் பொன்னல்ல
137)முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
138)முட்டை பொறியும் முன் குஞ்சுகளை எண்ணாதே
139)முயற்சி திருவினையாக்கும்
140)முள்ளை முள்ளால் எடு
141)முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
142)மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரிது
143)மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி
144)யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
145)யானைக்கும் அடி சருக்கும்
146)யானைக்கும் பானைக்கும் சரி
147)வாய்மையே வெல்லும்
148)வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்
149)யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே
150)வாளால் வாழ்பவன் வாளாலே வீழ்வான்
 151)விதியை யாரால் வெல்ல முடியும்
152)விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்
153)விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு
154)வினை விதைத்தவன் வினையறுப்பான்
155)வீட்டிற்கு வீடு வாசற்படி
156)வீரனுக்குச் சாவு ஒரு முறை, கோழைக்குச் சாவு தினமும்
157)வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்
158)வெளுத்ததெல்லாம் பாலாகுமா? கருத்ததெல்லாம் தண்ணீராகுமா?
159)வெறுங்கை முழம் போடுமா?
160)வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும் மூலதனம்
161)வேண்டாப் பொண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால்                                            
   குற்றம்
162)வேலியே பயிரை மேயலாமா?
163)வெறுங்காதுக்கு ஓலைக்காது மேல்
164)வெறுவாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தது போல்
165)சப்பாணிக்கு நொண்டி சண்டப் பிரசண்டன்
166)முதல் கோணல் முற்றும் கோணல்
167)முயல் பிடிக்கிற நாயை முகத்தைப் பார்த்தால் தெரியும்
168)செல்லாக்காசு திரும்பியே தீரும்
169)நச்சு மரம் நற்கனி ஈனாது
170)ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
171)ஆண்மையற்ற வீரன்ஆயுதத்தைக் குறை சொல்லுவான்
172)அள்ளிக் கொடுத்தா சும்மா, அளந்து கொடுத்தா கடன்
173)கழுதை விட்டையானாலும் கைநிறைய வேண்டும்
174)வாய்ப்பில்லா திறமையும் சாதிக்காது
175)ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும்
   பாடிக்கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்
176)கோழி கறுப்பு என்றால் அதன் முட்டையும் கறுப்பா?
177)கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது
178)மனம் மலர்ந்தால் முகம் மலரும்
179)அற முறுக்கினால் அற்றுப் போகும்
180)நெருப்பிற்குக் காற்று போல அன்புக்கு பிரிவு
181)அகல இருந்தால் நிகள உறவு
182)கோழிக்குக் குஞ்சு பாரமா? கொடிக்குக் காய் பாரமா?
183)ஒருமுறை விழுந்தால் தெரியாதா?
184)சாது மிரண்டால் காடு கொள்ளாது
185)புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்
186)அச்சானி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
187)துப்பட்டியில் கிழிந்த துண்டு
188)ஆழம் தெரியாமல் காலை விடாதே
189)மருந்தும் விருந்தும் மூன்று பொழுது
190)உடைந்த சங்கு ஊது பரியுமா?
191)அழுத பிள்ளை பால் குடிக்கும்
192)பேச்சை விட செயலே ஓங்கி நிற்கும்
193)துன்பம் ஒழுக்கத்தின் உரைகல்
194)ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்திருக்கிறேன்
195)மலையைத் துளைக்க சிற்றுளி போதாதா?
196)கற்பில்லாத அழகு வாசமில்லாப் பூ
197)முகம் சந்தி பிம்பம் அகம் பாம்பின் விஷம்
198)செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு
199)ஓடம் விட்ட ஆற்றிலும் அடி சுடும்
200)பேச்சு கற்ற நாய் வேட்டை பிடிக்காது
201)நாயிடத்தில் முழுத் தேங்காய் தங்குமா?
202)மூடனுக்குக் கோபம் மூக்கின் மேல்
203)உண்ட கலைப்பு தொண்டனுக்கும் உண்டு
204)கடல் பெருகினால் கரை ஏது?
205)முதுமை ஆராய்கிறது இளமை துணிகிறது
206)முதுமை துயரத்தோடு சேர்ந்து பயணிக்கும் பயணி
207)முதுமை பக்குவத்தின் அடையாளம்
208)பணம் இல்லாதவன் பிணம்
209)உபசரியாதார் வீட்டிலே உண்ணாதிருப்பது கோடி தனம்
210)அழுதாலும் பிள்ளையை அவள் தான் பெற வேண்டும்
211)போதனை பெரிதோ, சாதனை பெரிதோ?
212)நெல்லுக்கு உமி உண்டு. நீருக்கும் நுரை உண்டு
213)நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. நல்ல பெண்ணிற்கு ஒரு சொல்
214)சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்
215)நற்குணமே நல்ல ஆஸ்தி
216)கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்
217)நா அசைய நாடு அசையும்
218)மலை இலக்கானால் குருடனும் எய்வான்
219)குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
220)ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
221)அவசரக் கோலம் அலங்கோலம்
222)உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
223)உதடு பழஞ்சொறிய உள்ளே வயிறெறிய
224)அடி நாக்கில் விஷம் நுனி நாக்கில் தேன்
225)பசியுள்ளவன் ருசி அறியான்
226)நடுத்தெரு பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?
227)விளையாட்டு வினையானது
228)திருடிக் கொடுத்தும் பைத்தியக்காரப் பட்டம்
229)அகல் வட்டம் பகல் மழை
230)பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது
231)சிறிய மனிதரிடத்தில் பெரிய உள்ளம் இருக்கலாம்
232)சிறு தீப்பொறி காட்டையும் எரிக்கும்
233)ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப் பூச்சி போதும்
234)சிறு துளை பெருங்கப்பலை மூழ்கடிக்கும்
235)நூற்றைக் கெடுத்தது குருணி
236)காய்ந்த முள்ளும் விறகுக்கு ஆகும்
237)மனத்திலே ஒன்று வாக்கினிலே ஒன்று
238)தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா? நாமம் போட்டவனெல்லாம் நாதனா?
239)வெளுத்ததெல்லாம் பாலா? கறுத்ததெல்லாம் தண்ணீரா?
240)வல்லான் வகுத்ததெ வாய்க்கால்
241)கோபத்தால் ஆகாதது குணத்தால் ஆகும்
242)குனியக் குனியக் கொட்டுப்படுவான்
243)கரும்பு ருசியென்று வேரொடு பிடுங்கலாமா?
244)கொல்கிறதும் சோறு. பிழைப்பிக்கிறதும் சோறு
245)அன்றைக்கே எவரும் ஆசானாக முடியாது
246)கோடி வித்தையும் கூழுக்கு்த்தான்
247)ஆறிலும் சாவு நூறிலும் சாவு
248)இறைச்சியெல்லாம் மானிறைச்சியாகுமா?
249)மனம் கொண்டது மாளிகை
250)சொன்னதைச்  சொல்லும் கிளிப்பிள்ளை
251)இட்டவன் இடாவிட்டால் சன்மப் பகை
252)ஐந்தும் மூன்றும் அடுக்காய் இருந்தால் அறியாப் பெண்ணும் கறி ஆக்குவாள்
253)அன்னமில்லாதவனுக்கு அனைத்தும் நியாயம்தான்
254)சுமந்தவன் தலையில் சும்மாடு
255)சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
256)செட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை
257)மின்னுவதெல்லாம் பொன்னல்ல
258)ஓயா வேலை தீராச் சோர்வு
259)தானம் கொடுப்பவனே தனவான் ஆகிறான்
260)தனக்கு மிஞ்சிய பிறகு தான் தானமும் தர்மமும்
261)ஏழை என்றால் எவர்க்கும் எளிது
262)குந்தித் தின்றால் குன்றும் மாளும்
263)கோபம் சண்டாளம்
264)தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்
265)முதுகு முறியும் வரைதான் மூட்டை சுமக்க முடியும்
266)தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
267)அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் மனைவி அமைவதில் தான்
268)தோழமையோடும் ஏழைமை பேசேல்
269)புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்
270)ஆஸ்தி உள்ளவன் ஆஸ்திக்கு அடிமை
271)ஆஸ்தி இல்லாதவன் மனிதன் அல்ல
272)குறிக்கோள் உடையோர் ஊக்கம் குன்றார்
273)பேராசைக்கு இல்லை இரக்க குணம்
274)ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
275)பட்டிக்காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டியே பீதாம்பரம்
276)மலையைக் கல்லி எலியைப் பிடிப்பது போல
277)சேற்றில் இருந்தாலும் செந்தாமரை அழகு
278)சொல் அம்போ? வில் அம்போ?
279)கழுதைக்குச் சேணம் காட்டினாலும் குதிரை ஆகுமா?
280)தன் ஊரில் புலி அயலூரில் எலி
281)கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
282)காலிக் கோணி நிமிர்ந்து நிற்காது
283)அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா?
284)கோபம் கொலைப்பழியிலும் கொண்டுவிடும்
285)கோபம் அரைப் பைத்தியம்
286)தன்னையே கொல்லும் சினம்
287)மானம் பெரிதோ?பிராணன் பெரிதோ?
288)அடுக்குகிற அருமை நாய்க்குத் தெரியுமா?
289)நாய் பெற்ற தேங்காய் போல
290)பலநாள் வெயில் ஒறுத்தாலும் ஒருநாள் மழை ஒறுக்காது
291)குரங்கின் கையில் கொள்ளியைக் கொடுத்தது போல
292)ஆடத் தெரியாத நாட்டியக்காரி மேடையைக் குறை சொல்லுவாள்
293)முரட்டு மாட்டுக்குக் குட்டைக் கொம்பு
294)விவேகிக்கு அடித்து விளக்க வேண்டுமா?
295)நரைத்தவன் எல்லாம் கிழவனா?
296)பால சோதிடம் விருத்த மருத்துவம்
297)சமயம் வந்தால் உத்தமனும் தப்புவான்
298)முதலில் தகுதிபெறு பின்னர் விரும்பு
299)ஒரு காசு பேணின் இரு காசு போல தேறும்
300)வளர்ந்த கடா மார்பிலே பாய்ந்தது போல
301)பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதா?
302)மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்
303)வெளித்தோற்றம் கண்ணை ஏமாற்றும்
304)கள்ள மனம் துள்ளும்
305)அறிவின் அழகு அடக்கமாய் இருக்கும்
306)கலைக்கு எதிரி அறியாமையே
307)கலை சோறூட்டாவிட்டாலும் சோர்வூட்டாது
308)காலம் கடிது கலையோ நெடிது
309)கல்வி கரையிலது வாழ்நாள் குறுகியது
310)கலை ஒரு பொருளல்ல, நெறி
311)ஆடு தலை திண்பது போல
312)ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி வி  ஷம்
313)கற்பில்லாத அழகு வாசமில்லாப் பூ
314)குளவிக் கூட்டைக் கோலால் கரைத்தது போல
315)உள்ளங்கை நெல்லிக்கனி போல
316)சோதி அழகு சோற்றுப்பானை நிறம்
317)குதிரையும் கழுதையும் ஒன்றா? புலியும் பூனையும் ஒன்றா?
318)முறத்தடி பட்டாலும் முகத்தடி படலாகாது
319)நடை பிறழ்ந்தாலும் நாக்கு பிறழலாமோ?
320)கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
321)கொஞ்சம் பெற விஞ்சிக் கேள்
322)தாய் அறியாச் சூல் உண்டோ?
323)நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
324)உறவு போல இருந்து குளவி போலக் கொட்டுவதா?
325)ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்
326)பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்
327)ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
328)கிட்ட இருந்தால் முட்டப் பகை
329)மலை இலக்கானால் குருடனும் எய்வான்
330)அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
331)கள்ளன் பிள்ளைக்குக் கள்ளப் புத்தி
332)நரி நாலு கால் திருடன் ஆசை இரண்டு கால் திருடன்
333)காளை போன வழியே கயிறும் போகும்
334)தான் திருடன் அசல் வீடு நம்பான்
335)காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே
336)குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு
337)ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு
338)அதிகாரமே ஆளை அடையாளம் காட்டும்
339)சேர சேர பணத்தாசை, பெறப் பெற பிள்ளையாசை
340)குரங்குக்குப் புத்தி சொன்ன தூக்கனாங்குருவி போல
341)கூனி வாயால் கெட்டாற் போல
342)பெண்ணுக்குச் சொல் அழகு
343)பொறுமையே பெருமை தரும்
344)உருத்திராட்சப் பூனை உபதேசம் பண்ணினது போல
345)அழகும் நேர்மையும் இசைத்திருப்பது அரிது
346)அழகு தப்பிக்கவும் ஆயுதமாய் பயன்படும்
347)அழகு ஒரு வசந்தகால மலர் போன்றது
348)அழகு என்றும் நிலைத்திருக்காது
349)அழகு மௌனமாயிருந்தாலும் பேசும்
350)அழகே ஆற்றல் ஒரு புன்னகையே அதன் வாள்
351)அழகு பூட்டிய கதவையும் திறக்கும்
352)அழகிருந்தால் உலை கொதிக்குமா?
353)கருணை இல்லா அழகு பயனற்றது
354)பணிவில்லா அழகிற்குப் புகழில்லை
355)பந்திக்கு முந்து படைக்குப் பிந்து
356)பசி ருசியறியாது
357)இரப்பவனுக்கு பழஞ்சோறு பஞ்சமா?
358)அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
359)இன்று தொடங்கு என்றும் முடிக்காதே
360)இளமையில் கல்வி பசுமரத்தாணி
361)ஆறின கஞ்சி பழங்கஞ்சி
362)தொன்மை மறவேல்
363)ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு
364)இரவல் சோறு பஞ்சம் தாங்குமா?
365)பிரியம் இல்லாத பெண்டாட்டிக்குப் பேய் நன்று
366)ஓர் உறைக்குள் இரண்டு கத்தி இருக்க முடியாது
367)சிறுகக் கட்டிப் பெருக வாழ்
368)வேளை அறிந்து பேசு.நாளை அறிந்து பயணம் செய்.
369)கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
370)தீயன சிந்திப்பினும் சிந்திக்காதிருத்தல் நல்லது
371)ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்
372)நுணலும் தன் வாயால் கெடும்
373)கடன் பட்டார் நெஞ்சம் போல்
374)சுருங்கக் கூறலே விவேகத்தின் ஆத்மா
375)வீட்டை கட்டிப்பார் கல்யாணம் செய்து பார்
376)உத்தியோகம் புருஷலட்சணம்
377)பசுத்தோல் போர்த்திய புலி
378)அவரை நட்டால் துவரை முளைக்குமா?
379)கிணறு வெட்டி தாகம் தீர்க்க முடியுமா?
380)அதிக அக்கறை அழிவில் முடியும்
381)வாழ்வும் சில காலம் தாழ்வும் சில காலம்
382)வெற்றியும் தோல்வியும் இருபக்கமும் உண்டு
383)கொடை எல்லா பாவங்களையும் மூடி மறைக்கும்
384)தருமம் தலை காக்கும்
385)ஆத்தாள் அம்மணம் கும்பகோணத்தில் கோதாணம்
386)வஞ்சகம் இதயத்தைப் பிளக்கும்
387)குறையச் சொல்லி நிறைய அள
388)நேற்றைய மகிழ்ச்சி நாளைய நம்பிக்கை
389)நொறுங்கத் தின்றவன் நூறு வயது வாழ்வான்
390)காணி ஆசை கோணி கேடு
391)நாயின் வாலை ஒட்ட வெட்டினாலும் நாய் நாய்தான்
392)மரணம் நாட்காட்டி பார்க்காது
393)சுடுகாட்டில் ஆண்டி என்ன?அரசன் என்ன?
394)தூர்ந்த கிணற்றைத் தூர் வாராதே
395)இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி
396)பெண் என்றால் பேயும் இறங்கும்
397)முகத்துக்கு முகம் கண்ணாடி
398)தெய்வம் காட்டும் எடுத்து ஊட்டுமா?
399)திக்கற்றோர்க்குத் தெய்வம் துணை
400)எல்லாம் கடவுளின் செயல்
401)ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கியது போல்
402)பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்
403)உனக்கும் பெப்பே உன் அப்பனுக்கும் பெப்பே
404)அறிவு பணிவைத்தரும் அறியாமை ஆணவத்தைத் தரும்
405)எல்லாத் துன்பங்களுக்கும் சோம்பலே அடிப்படைக் காரணமாகும்
406)நிதானம் பிரதானம்
407)ஒன்றின் மறைவு மற்றதன் துவக்கும்
408)அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல
409)மருந்துக்கு மீறினால் கத்தியில் முடியும்
410)தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்
411)ஆள் பாதி ஆடை பாதி
412)கூழைக்கும்பிடு போடுபவன் குழிபறிப்பான்
413)திறந்த கதவு துறவியையும் திருடனாக்கும்
414)புன்னகையே வியாபாரத்தின் மூலதனம்
415)குப்பையில் இருந்தாலும் குண்டுமணி குண்டுமணிதான்
416)மூழ்குபவனுக்கு துரும்பும் துடுப்பாகும்
417)அநீதிக்கு ஆயிரம் தூண்கள்
418)பிறவிக் குருடனுக்குப் பணம் நோட்டம் தெரியுமா?
419)ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டுமா?
420)கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
421)மனமிருந்தால் மார்க்கம் உண்டு
422)அக்கம் பக்கம் பார்த்துப் பேசு
423)கோழி மிதித்துக் குஞ்சு சாகாது
424)சென்மப் புத்தியைச் செருப்பால் அடித்தாலும் போகுமா?
425)குருடனுக்குக் குருடன் வழிகாட்ட முடியுமா?
426)அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
427)ஐயர் வரும் வரை அம்மாவாசை காத்திருக்காது
428)காமாலை கண்டவனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்
429)திருடிய கனி தித்திக்கும்
430)முள்ளை முள்ளால் எடு, சொல்லை அறிவால் எடு
431)பழைமை விலை மதிப்புமிக்கது
432)கரையை அடையும் முன் துடுப்பை எறியலாமா?
433)செய் அல்லது செத்து மடி
434)ஆணவத்தால் அழியாதே
435)இழந்த நேரம் திரும்ப வராது
436)மண்ணுயிரைத் தன்னுயிர் போல நினை
437)எறும்பு ஊரக் கல்லும் தேயும்
438)உண்டால் தீரும் பசி கண்டால் தீருமா?
439)வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
440)மடியே விதியின் திறவுகோல்
441)இலக்கணம் பரம ஔடதம்
442)சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
443)பசுவை விற்றால் கன்றுக்கு அடக்கமா?
444)தன்னைக் கட்ட தானே கயிறு கொடுத்தது போல
445)மனதின் இருளோ அறியாமை
446)தீய களைகளே விரைவில் விளையும்
447)ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்
448)தீமையால் வந்தது தீமையால் போகும்
449)பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
450)ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டாற் போல
451)மூத்தோர் சொல் அமிர்தம்
452)யார் ஆற்றுவார் காலம் ஆற்றும்
453)குயவனுக்குப் பல நாள் வேலை. உடைக்கிறவனுக்கு அரைநாழிகை வேலை
454)தன் முதுகின் அழுக்குத் தனக்குத் தெரியாது
455)வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை
456)துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்
457)இரும்பைப் பிடித்தக் கையும் சிரங்கு பிடித்தக் கையும் சும்மா இருக்காது
458)கோடாலிக் காம்பு குலத்தைக் கெடுக்கும்
459)அன்னம் இட்ட வீட்டில் கன்னம் வைக்கலாமா?
460)சந்தடி சாக்கிலே கந்தப்பொடி கால் பணம்
461)தலையணையைத் திருப்பிப் போட்டால் தலைவலி தீருமா?
462)மீனின் முள்ளும் சில நேரம் கொக்கைக் கொல்லும்
463)தொழுத கையுள்ளும் படையொடுங்கும்
464)ஊமை கனவு கண்டாற் போல
465)மந்திரம் கால் மதி முக்கால்
466)காஷாயம் அணிந்தவன் எல்லாம் சன்னியாசி அல்ல
467)மடையனுக்கு மறுமொழி இல்லை
468)நாயைக் கொஞ்சினால் முகவாயை நக்கும்
469)உலை கொதிக்க வேணும் பொருளீட்டு
470)அதிகம் வரும் வரை கொஞ்சமெனும் வைத்திரு
471)கண்டால் காமாட்சி காணாவிட்டால் காமாட்டி
472)ஆகுங்காலம் ஆகும் போகுங்காலம் போகும்
473)தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதி
474)அன்பு ஒரு போதும் வீணாவதில்லை
475)தட்டிய கதவே திறக்கும்
476)அறிவு ஒரு சுமையல்ல
477)பொய் அதிவேகத்தில் பரவும்
478)வாழ்க்கை ஒரு புனித யாத்திரை
479)மூக்கு உள்ளவரை சளி இருக்கும்
480)மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை
481)நகமும் சதையம் போல
482)கறக்கிறது நாழி உதைக்கிறது பல்லு போக
483)தானும் திண்ணான் தரையிலும் போடான்
484)வாழ்க்கை குறுகியதாக இருந்தாலும் இனிது
485)புத்தி கெட்ட ராசாவுக்கு மதி கெட்ட மந்திரி
486)சட்டி பாலுக்கு ஒரு துளி மோர் பிரை
487)அன்பை அடக்கியவர் உண்டோ?
488)அதிர்ஷ்டம் இருந்தால் அரசம்ம பண்ணலாம்
489)ஆழமறியாமல் காலை விடாதே
490)பேதைமை என்பது மாதர்க்கு அழகு
491)அலை மோதும் போதே தலை முழுகு
492)பருவத்தே கண்டு விதை செய்
493)முட்டையை உடைக்க சுத்தியல் வேண்டுமா?
494)கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா?
495)தன் குற்றம் தனக்குத் தெரியாது
496)கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்
497)கடுஞ்சினம் கடும் பகை
498)பகலில் தோன்றிய சந்திரன் போல
499)கெடுவது செய்தால் படுவது கருமம்
500)அடி நொச்சி நுனி ஆமணக்கா


Share
Posted in: Posted on: சனி, 4 மார்ச், 2017

2 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு. தொகுத்த கணினி-வணிகவியல் துறை மாணவி, ஏ.மேனகா, அவர்களுக்கும் வெளியிட்ட தம்பி லோகேசுவரன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.