ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

செங்கழனிக் கோழி

எழுத்தாணி  /  at  பிப்ரவரி 03, 2019  /  1 comment

ஆசையாய் வளர்த்த பெட்டைக்கோழி
திடீர் விருந்தால்
மயிர்பறித்து மசாலாவானது

வாசனை மூக்கைத் துளைத்தாலும்
கொதிப்புச் சததம் நெஞ்சை வெடிக்கச் செய்தது

சோற்றில் கிடந்த ஈரல்
இதயத்தைக் கனக்கச் செய்தது

தட்டின் ஓரத்தில் கிடந்த கழுத்துப்பகுதி
எனது குரல்வளையை நெருக்கியது

சதைக்கறி அத்தனையும்
எனது தசைநார்களைக் கிழித்துக் கொண்டிருந்தன

வந்த விருந்தினன் கைகழுவி வாய்துடைத்தார்
நான் இன்னும்
சோற்றின் இடுக்குகளில்
என் கோழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

Share
Posted in: Posted on: ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

1 கருத்து:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.