வெள்ளி, 16 செப்டம்பர், 2016

நடந்தாய் வாழி காவேரி

                 நடந்தாய் வாழி காவேரி

ஒத்துமையா சேந்து நின்னு
தேசத்தையே நிமித்துப்புட்டோம்
தனித்தனியே பிரிஞ்சு நின்னு
மானத்தயே இழந்துபுட்டோம்
வெட்கங்கெட்ட தமிழன்னு
ஏசிப் போரான் வே…ப் பையன்
கொஞ்சம் கூட சொரணையின்றி
மக்கிப் போனோம் மரக்கட்டையாய்.
வந்தாரை வாழ வச்சு
என்னத்த நீ சாதிச்சுப்புட்ட
எல்லையெல்லாம் சுருங்கிப் போய்
மானங்கெட்டு வாழ்ந்துபுட்ட..
ஆத்தாவுக்கு நிகரான ஆத்துமணல தொட்டாச்சு
மஞ்சுவிரட்டு பண்பாட்ட தொழுவுக்குள் அடச்சாச்சு
மீத்தேன் வாயுக்கு வாசற்படி வச்சாச்சு
பதனீரும் இளநீரும் மரமேறிப் போயாச்சு
மதுபானக் கடைக்குச் சிவப்புக் கம்பளம் விரிச்சாச்சு
அலைக்கற்றையில் ஊழல் செஞ்சு நாடே நாறிப்போச்சு
தண்ணிக்குப் பிச்சையெடுக்கும் கேவலம் வந்திடுச்சு
நம்முடைய வளமைகளை கூறுபோட்டு வித்தாச்சு
காற்றைக் குடித்து உயிர்வாழும் வித்தையைக் கண்டுபிடி
காற்று தமிழனுக்கே என பக்கத்துநிலத்தில் உரக்கப்படி
வெள்ளாமைக்குத் தண்ணி கேட்டு இப்போ நின்னோம்
இனிக் குளிக்கவும் கழுவவும் ஏந்தி நிப்போம்
வெற்றுப்பீத்தல்களை விலக்கிவிடு
விவேகத்துடன் கொஞ்சம் நடைபோடு
நீயா நானா என்று ஒரு கை பாரு

விடை கிடைக்கும் வரை தொடர்ந்து நீ போராடு
Ulagasivan Sivan  /  at  செப்டம்பர் 16, 2016  /  No comments

Posted in: Read Complete Article»

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.