சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல் பரத்தையும் பண்டைக் காலத்தில் ஆண் , பெண் உறவுமுறையினூடாக நம் முன்னோர்களின் குடும்பப் பின்னனியை ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடிகிறது . திணை அடிப்படையில் நிலத்தினைப் பிரித்து ஒவ்வொரு ( குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ) நிலத்திற்கும் ஒவ்வொரு வகையான ஒழுக்கங்களை ( பழக்கவழக்கங்கள் என்று ஊகித்துக்கொள்க ) சுட்டியுள்ளனர் . இவற்றுள் மருதத்திணை ஏனைய திணைகளைக் காட்டிலும் குடும்பப் பின்னனியைச் சார்ந்தது என்று குறிப்பிடலாம் . தலைவன் , தலைவி , தோழி மூவரும் முக்கியக் கதாபாத்திரங்கள் . இம்மூவருக்குமிடையேதான் பெரும்பாலும் உரையாடல் நிகழ்ந்திருக்கிறது . அப்படி உரையாடும் பொழுது வெறும் கருத்தை மட்டுமே கூறுவதாகப் புலவர்கள் பாடலைப் புனையவில்லை . இயற்கையை வருணித்து அதனூடாகத் மாந்தர்களது உணர்வுகளைப் பதிவு செய்துள்ளனர் . அப்படி ஒரு அருமையான குடும்பப் பின்னனியில் அமைந்துள்ள கருத்து வருமாறு : ...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்