முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குளத்தங்கரைப் பிள்ளையார்

                  குளத்தங்கரைப் பிள்ளையார்

பொங்கல் வைத்தாகிவிட்டது. கொண்டக்கடலையும் நன்றாக வெந்து விட்டது.. அதனதற்குரிய பாத்திரங்க
ளில் பரிமாறி மூடி வைக்கப்பட்டுள்ளன.
ஏம்ப்பா பாலு அந்த மஞ்சப்பைல சூடம், சாம்புராணி, ஊதுபத்திலாம் இருக்கானு பாருப்பா. அப்புறம் அய்யரு வந்து கேக்குறப்போ அத காணோம் இத காணோம்னு சொல்லாம
எல்லாம் இருக்கு சித்தி. நீங்க போய் ஆக வேண்டிய காரியங்களப் பாருங்க..
என்னப்பா இந்த அய்யர இன்னும் கானோம்
என்று முணுமுணுத்துக்கொண்டே பச்சக் கலர் சேலையை இடுப்பில் நன்றாகச் சொருகிக் கொண்டு தாங்கித் தாங்கி நடந்தாள் அமுதவல்லி..
அந்தப் பிள்ளையார் பெயர் பாரத விநாயகர்.. ஒருமுறை பிள்ளையார் பால் குடிக்கிறதாகக் கேள்விப்பட்டுப் பாரத விநாயகருக்குச் சொம்பு சொம்பாகப் பால ஊத்துனது நான்தான்.. சும்மா சொல்லக் கூடாது பாரத விநாயகரும் சொம்பு சொம்பா குடிச்சது நல்லா ஞாபகம் இருக்கு.. ஆறுமுகம் அண்ணாதான் அட லூசுப்பயலுகலா சாமி பால் குடிக்கலடா கல்லு தாண்டா குடிக்குதுனு நாத்திகம் பேசிக்கிட்டு இருந்தாரு.. ஆனா அது உண்மைதானு ரொம்ப நாள் கழிச்சுதான் புரிஞ்சது. கல்லு இறுகிப் போயிருந்ததால பால் உள்ள போயிட்டே இருக்குமாம்.. பால ஊத்தாம வெறும் தண்ணிய ஊத்துனாலும் பிள்ளையாரு குடிச்சுக்கிட்டே தான் இருப்பாருனு ஆறுமுகம் கிண்டல் பண்ணிட்டே இருந்தாரு.. அப்போ அவர புடிக்கவே இல்ல சாமிய கிண்டல் பண்ற இவரு நல்லாவே இருக்க மாட்டாருனு திட்டிட்டே இருந்தேன்..
இப்பவும் சாமிதான் எல்லாமேனு வாழ்ற சாமானியன்தான். ஆனால் சாமியே கதினு இருக்குறவன் இல்ல..
இந்தப் பாரத விநாயகருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ஏழாவது படிக்குற காலத்துல இருந்து காலேஜ் படிக்குற காலம் வரைக்கும் பாரதவிநாயகர் பக்கத்துல உக்காந்துதான் படிப்பேன்.. கோயில் அவ்வளவு பெரிது கிடையாது. சிலை மட்டுமே ஒரு பெரிய திண்ணையில் இருக்கும். வெட்ட வெளியில் கம்பீரமாக கருத்த உருவத்துடன் அமர்ந்திருப்பார். தனிமை சூழ்ந்து அமைதியாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் படிப்பதற்கு இதுதான் சரியான இடம் என்று எப்போதோ என் மனம் தெரிவுசெய்து கொண்;டுவிட்டது.
பிள்ளையாருடைய வயிறு மீது எனக்கு எப்போதும் பிரியம்.. சில நாட்களில் வயிறு மீது iலையை வைத்துக் கொண்டு அசந்து தூங்கிய அனுபவமும் உண்டு..
துதிக்கையும் காதும் எப்போதும் பிரமிப்பாகவே எனக்குத் தெரியும்..
நாளாக நாளாகப் பாரத விநாயகருடன் நான் பேச ஆரம்பித்துவிட்டேன்.. கல், சாமி என்பதையும் தாண்டி சக நண்பனிடம் பேசுவது போலாயிற்று..
டேய் என்னத்தடா பாத்துக்குட்டு இருக்க..? என்னமோ புதுசா பாக்குறவன் மாதிரி..? என்று சித்தி அதட்டியதும் தான் பிள்ளையாரிடமிருந்து நினைவு திரும்பியது..
அய்யரு எப்ப வருவாராம் சித்தி..?
பெரிய ஆளுங்க கோயிலு அம்பலகாரர் கோயிலு செட்டி ஊரணி கோயிலுக்குலாம் முடிச்சுட்டுதான் நம்ம கோயிலுக்கு வருவாராம். அய்யரு இன்னிக்கு ரொம்ப பிஸியாம்.. பிள்ளையார் சதுர்த்தில..
சிறுசுகள் எல்லாம் களிமண்ணுல பிள்ளையார்  செஞ்சு அதுக்குல நெறைய காசுகள அமுக்கி வச்சுருக்கானுங்க.. அய்யரு அபிN~கம் பண்ணதும் இந்தக் களிமண் பிள்ளையார தண்ணிக்குள்ள அமுக்கி காசுகள எடுக்க ரெடியா இருக்கானுங்க..
யாரோ ஒருத்தனோட பிள்ளையாருக்குள 30 ரூவாக்கிட்ட அமுக்கி வச்சுருக்குறதா பொரளிய கௌப்பிவிட்டாய்ங்க..
எனக்கும் ஆசதான் யாரோட பிள்ளையார இருக்கும்னு தெரிஞ்சுக்க..
இந்த அய்யரு எப்பத்தான் வருவாராம்..? என்று சோனமுத்து அய்யா கோபத்தோட சத்தம் போட ஆரம்பிச்சாரு..
நானும் அந்தக் களிமண் பிள்ளையார பாக்குறத விட்டுட்டு பாரத விநாயகர் பக்கமா வந்து நின்னுட்டேன்..
நல்ல கூட்டம். போன வருசம் கூட இவ்ளோ பேர் வரல.. நாளுக்கு நாள் சாமி பக்தி மக்கள்ட கூடிட்டே போகுதுனு மனசுக்குல நினைக்காம இருக்க முடியல..
அய்யரு வந்துட்டாருப்பா..
அய்யரு வந்துட்டாரா..?
அய்யரு வர்றாராம் சித்தி.
என்று எல்லாரும் முணுமுணுத்தபடி அய்யரு வரவ நோக்கி நின்னுட்டு இருந்தோம்.
அய்யர் பேரு சிவசங்கரனாம். புதுசாட்டாம் இருக்காரு. ஆனா வயதானவர். தண்ணீர்ல பாரத விநாயகர நல்லா குளிப்பாட்டிவிட்டு முறைப்படி பூசைகளைச் செய்து கொண்டிருந்தார். மாலைய கொண்டாங்கோ.. பால் இருக்கா..? சந்தனம்..? அருகம் புல்லைக் கடைசியா கொடுங்கோ.. பரபரப்பாக பேசிக்கொண்டே கணநேரத்தில் பூசையை முடித்துவிட்டார்..
கும்புட்டுக்கோங்கோ
ஓம் கணபதி நமக..
ஓம்…………………….. நமக..
எல்லோரும் கையை உயர்த்திக் கும்பிட சூடத்தட்டும் மணியோசையும் ஒலிக்க வெற்றிகரமாக பூசையை முடித்துக்கொண்டார் அய்யர்..
பொங்கலும் சுண்டலும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணவில்லை..
பூசையை முடிப்பதற்குள் களிமண் பிள்ளையாரும் காணவில்லை.. தண்ணீருக்குள் களிமண் பிள்ளையார் சிறுசுகளால்  கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்..
அய்யர் சத்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்டுக்கொண்டே இருந்தது..
சித்தியிடம் ஏதோ காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.. பக்கத்தில் சென்று கேட்டபோது பூசைக்குரிய தொகை போதவில்லையென்று சித்தியிடம் வம்பு பண்ணிக்கொண்டிருந்தார்..
இதுக்குத்தான் உங்க பக்கம் நாங்க பூசை பண்ண வர்றதே இல்ல..
என்று சொலிலிவிட்டு அய்யர் மோட்டார் வண்டியை முருக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

பாரத விநாயகர் முற்றிலுமாகக் காணவில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழமொழி ஐந்நூறு

                                             பழமொழி 500 அனைவருக்கும்  தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து உதவியவர். ஏ.மேனகா, கணினி-வணிகவியல் துறை மாணவி, கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவி, திருச்செங்கோடு. 1)அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் 2)அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் 3)அடியாத மாடு படியாது 4)அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் 5 )அத்திப் பூத்தாற் போல் 6)அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா? 7)அரசனை நம்பி புருஷனைக் கைவிடலாமா? 8)அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் 9)அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் 10)அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும் 11)அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 12)அறிவே சிறந்த ஆற்றல் 13)அனுபவமே சிறந்த  ஆசான் 14)அன்பே கடவுள் 15)ஆசைக்கு அளவில்லை 16)ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம் 17)ஆணுக்கு ஒரு நீதி.. பெண்...

தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்

    தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள்  செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்               - முனைவர் ம.லோகேஸ்வரன்       கொங்குதேர் வாழ்க்கையுடைய அஞ்சிறைத்தும்பியைக் காமம் செப்பாமல் கண்டதைச் சொன்னதிலிருந்து தமிழாய்வு தொடங்கிவிட்டது என்பர். அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் ஒரு தமிழ்ப்படைப்பு வெளியிடப்பெற்றுச் சான்றோர் பலரின் முன்னிலையில் விவாதங்களுக்கு உட்பட்டு கருத்தறிந்து மேற்கொள்ளப்பெற்றுள்ளது. இதற்குத் தொல்காப்பியம் முதலான பண்டை இலக்கியங்கள் தக்கச் சான்றுகளாகும். சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம், உரைச்சிறப்புப் பாயிரம் என்ற வகைப்பாடுகளெல்லாம் பனுவல் மீதான  ◌ாவசிப்பு மரபினை வெளிப்படுத்துகின்றன. வகை தொகைப்படுத்துதல், துறைக்குறிப்பு, கூற்றுக்குறிப்பு, உரையாக்கம் என்கிற வகைப்பாடுகளும் வாசிப்புப் பின்னணியில் நேர்ந்தவைகளேயாகும். ஆகவே ஒரு பனுவலை வாசித்தல் என்கிற பாரம்பரிய முறைமை ககாலத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. அஃது இன்றளவில் வாசிப்பு, ஆய்வு என்கிற இருநிலைகளில் வெவ்வேறு பொருள்பட நிற்கின...

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்லூரியில் நிகழ்த்தப்பெற்ற பேராசிரியரின் நூல்கள் முன்னெடுக்கும் ஆய்வு முறையியல் பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் கட்டுரை அளிக்க  வாய்ப்பமைந்தது. வாழ்க்கையில் உண்டான வரலாற்றுத் தருணம்.         நன்றி பேரா சு.தமிழ்வேலு, பேரா.இரா.அறவேந்தன், பேரா.சிலம்பு நா.செல்வராசு)  கட்டுரை கீழ்வருமாறு     தமிழியல் ஆய்வு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்தேறியுள்ளன. அவை காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அமைந்தவை. அவ்வகையில் இக்காலத் தமிழியல் ஆய்வு வரலாற்றில் தவிர்க்கவியலா ஆளுமையாகத் திகழ்பவர் சிலம்பு நா.செல்வராசு. இவரது ஆய்வுப் போக்குகள் தனித்தன்மை வாய்ந்தவை. அத்தகைய தன்மைகள் வழியாகத் தமிழியல் ஆய்வு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதும் அடுத்தத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய ஆய்வியல் சிந்தனைகளை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். 1.தமிழாய்வுத்தடம் 1887 ஆம் ஆண்டு சி.வை.தா.வ...