குளத்தங்கரைப் பிள்ளையார் பொங்கல் வைத்தாகிவிட்டது . கொண்டக்கடலையும் நன்றாக வெந்து விட்டது .. அதனதற்குரிய பாத்திரங்க ளில் பரிமாறி மூடி வைக்கப்பட்டுள்ளன . ஏம்ப்பா பாலு அந்த மஞ்சப்பைல சூடம் , சாம்புராணி , ஊதுபத்திலாம் இருக்கானு பாருப்பா . அப்புறம் அய்யரு வந்து கேக்குறப்போ அத காணோம் இத காணோம்னு சொல்லாம … எல்லாம் இருக்கு சித்தி . நீங்க போய் ஆக வேண்டிய காரியங்களப் பாருங்க .. என்னப்பா இந்த அய்யர இன்னும் கானோம் … என்று முணுமுணுத்துக்கொண்டே பச்சக் கலர் சேலையை இடுப்பில் நன்றாகச் சொருகிக் கொண்டு தாங்கித் தாங்கி நடந்தாள் அமுதவல்லி .. அந்தப் பிள்ளையார் பெயர் பாரத விநாயகர் .. ஒருமுறை பிள்ளையார் பால் குடிக்கிறதாகக் கேள்விப்பட்டுப் பாரத விநாயகருக்குச் சொம்பு சொம்பாகப் பால ஊத்துனது நான்தான் .. சும்மா சொல்லக் கூடாது பாரத விநாயகரும் சொம்பு சொம்பா குடிச்சது நல்லா ஞாபகம் இருக்கு .. ஆறுமுகம் அண்ணாதான் அட லூசுப்பயலுகலா சாமி பால் குடிக்கலடா கல்லு தாண்டா ...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்