திங்கள், 30 மே, 2016

நானே பைத்தியம்,

Ulagasivan Sivan  /  at  மே 30, 2016  /  No comments

முழுமனதாய் ஒப்புக்கொள்கிறேன்
நான் கண்டிப்பாகப் பைத்தியம் தான்..
எப்படி சிந்தித்தாலும்
நான் பைத்தியம் என்பதைவிட்டு  
என்னால் மீள முடியவில்லை..
நிச்சயம் கனவல்ல
பைத்தியத்திற்கான சாத்தியக்கூறுகள்
என் கண்முன்னே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன..
நடைபாதையில்
கழிப்பறையில்
பேருந்து பயணத்தில்
மொட்டை மாடியில்
கல்லூரி வளாகத்தில்
சந்தையில்
தியேட்டரில்
மருத்துவமனையில்
தியானக் கூடத்தில்
எனக்கான அடையாளங்களை தொலைத்துவிட்டு
எப்படி எப்படியோ திரிந்து கொண்டிருக்கிறேன்
நிச்சயம் இது நானல்ல

நானாகிப் போன நான்..
அவனைப் போல் ஆக வேண்டும்
என்கிற என்னை முதலில் கொல்ல வேண்டும்..
அப்படியே
என்னைப் போல் உருவாக்கத் துடிக்கும்
எண்ணத்தையும்..

Share
Posted in: Posted on: திங்கள், 30 மே, 2016

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.