செவ்வாய், 11 ஜூலை, 2023

மனோன்மணியம்- தமிழ்த் தெய்வ வணக்கம் பெ.சுந்தரனார்

                                                       தமிழ்த் தெய்வ வணக்கம்

                                             மனோன்மணியம் - பெ.சுந்தரனார்

1) நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே 

விளக்கம்

     நீர் நிறைந்த கடல் எனும் ஆடையை உடுத்திய நிலம் எனும் பெண்ணுக்கு, அழகு ஒழுகக்கூடிய சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கின்ற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! 
பாடல்-2

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!

விளக்கம்

    பல வகையான உயிர்களும் ஏழேழ் உலகமும் படைக்கப்பெற்ற பின்னர் நீங்கிச் சென்றாலும், உலக எல்லைகளைக் கடந்தும் இருக்கின்ற பரம்பொருள் (இறையானது) என்றென்றும் நிலையாக இருப்பது போல் தமிழ்ப் பெண்ணே நீயும் இருக்கின்றாய். உன் குருதியிலிருந்து தான் கன்னடமும் மகிழ்வுடைய தெலுங்கும் அழகு பொருந்திய மலையாளமும் துளு என்கிற மொழியும்  ஒன்று மற்றொன்றாக விரிவடைந்து பலவாறு திகழ்ந்திருக்கிறது. ஆரியமொழி (வடமொழி) போல் பேசுவாரின்றி உலக வழக்கு அற்றுப் போகாமலும் சிதையாமலும் உள்ள இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! 

எழுத்தாணி  /  at  ஜூலை 11, 2023  /  No comments

Posted in: Read Complete Article»

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

ஆன்டி இண்டியன் - விமர்சனம்

ஆன்டி இண்டியன்

படத்தின் துவக்கத்திலிருந்தே மாறுபட்ட உத்திகளைக் (யதார்த்தம் எனும் உத்தி) கையாண்டிருக்கிறார் இயக்குநர் புளூ சட்டை C.இளமாறன். சின்ன சின்ன வார்த்தைகளுக்காகவும் பின்புறப் படங்களுக்காகவும் பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்ற இன்றைய சூழலில் இது மாதிரியான படம் வெளிவந்திருப்பது அதிர்ச்சி மிகுந்த வரவேற்புதான். ஆம், அந்த அளவிற்கு மதம் பேசப்பட்டிருக்கிறது. மதங்களின் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதத்திற்குள்ளான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. நிச்சயம் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இது இருக்கும். ஏனென்றால் இந்தப் படம் பேசிய துணிச்சலான வசனங்களை வேறு படங்கள் பேசவில்லை என்பதுதான் இதற்கான காரணம். தொழில்நுட்பம், இசை, ஒளிப்பதிவு என்று பல கோளாறுகள் இருப்பதாக அறிவு நிபுணர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பிற்கு இவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.  இந்தச் சமூகத்திற்குச் சொல்ல நினைத்தவொன்றைச் சமரசம் இல்லாமல் தனது மனத்திற்குப் பிடித்தபடி சொல்லியிருக்கிறோமா? என்பதுதான் பிரதானம்.

   இந்தப் படத்தின் கதையைப் பலரும் பொணத்த வச்சு அரசியல் பண்றத சொல்லியிருக்கார்னு மிகச் சாதாரணமாகச் சுருக்கிவிடுகிறார்கள். ஆனால் இப்படத்தின் கதை  தனியொருவனின்  புறக்கணிக்கப்பட்ட வாழ்வியலைப் பேசுகிறது. அந்த மனிதன் விட்டுச்சென்ற எச்சங்களைச் சேகரித்துப் பரப்புகிறது. ஒருவன் இறந்த பின்னர் உயிருள்ள பிணங்களின் கோர முகங்களைச் சுட்டுகிறது. புறக்கணிக்கப்படும் வட்டாரக் கலைஞர்களின் முகங்களைத் திரையிலிடுகின்றது. 

இப்படம் ஒரு கொலையில் தொடங்கிப் பல  கொலைகளில் முடிகின்ற படம். செதுக்கப்பட்ட வசனங்கள், இயல்பான எள்ளல், நகைச்சுவை, அழுகை என்று படம் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளது. இறுதியில் பிணத்தை இந்துவிடமோ கிறிஸ்தவர்களிடமோ இஸ்லாமியர்களிடமோ ஒப்படைக்க வேண்டும். யாரிடமும் ஒப்படைக்காமல் தெருவில் கிடப்பதாகப் படத்தை நிறைவு செய்திருக்கலாம். அல்லது ஒரு கதாப்பாத்திரம் சொல்வது போல் மெடிக்கல் காலேஜ்ஜிற்குக் கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் யதார்த்தத்திலிருந்து விலகி இப்படம் சராசரி ரகமாகியிருக்கும். ஆனால் இயக்குநர் தனது தீர்வை முன்வைக்கிறார். கிட்டத்தட்ட ஒரு சிறுகதை போல. ஆனித்தரமைான, மிகச் சரியான, எல்லோரும் ஏற்கும்படியான தீர்ப்பை வழங்குகிறார் இயக்குநர். 

கடனுக்கு ஒரு படத்தைச் செய்யாமல் கடமையுணர்வோடு செய்த இயக்குநரையும் அவரது குழுவையும் பொருளுதவி செய்துள்ள தயாரிப்பாளரையும் மனதார பாராட்டலாம்.

எழுத்தாணி  /  at  டிசம்பர் 12, 2021  /  No comments

சனி, 4 ஜூலை, 2020

சிலப்பதிகாரம் மனையறம்படுத்தகாதை இரண்டு மதிப்பெண் வினாக்கள்

எழுத்தாணி  /  at  ஜூலை 04, 2020  /  No comments

Posted in: Read Complete Article»

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

செங்கழனிக் கோழி

ஆசையாய் வளர்த்த பெட்டைக்கோழி
திடீர் விருந்தால்
மயிர்பறித்து மசாலாவானது

வாசனை மூக்கைத் துளைத்தாலும்
கொதிப்புச் சததம் நெஞ்சை வெடிக்கச் செய்தது

சோற்றில் கிடந்த ஈரல்
இதயத்தைக் கனக்கச் செய்தது

தட்டின் ஓரத்தில் கிடந்த கழுத்துப்பகுதி
எனது குரல்வளையை நெருக்கியது

சதைக்கறி அத்தனையும்
எனது தசைநார்களைக் கிழித்துக் கொண்டிருந்தன

வந்த விருந்தினன் கைகழுவி வாய்துடைத்தார்
நான் இன்னும்
சோற்றின் இடுக்குகளில்
என் கோழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
எழுத்தாணி  /  at  பிப்ரவரி 03, 2019  /  1 comment

செவ்வாய், 2 அக்டோபர், 2018

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்.

தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்திற்குப் பின்னர் நான் எழுதுகின்ற விமர்சனம் அல்லது ஒரு படைப்பு மீதான  மதிப்பீடுதான் இந்தப் பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். பருத்திவீரன் படத்திற்குப் பிறகு தமிழ்ச் சினிமா ஒரு மாற்றுச் சிந்தனையை இடைக்கொண்டு பயணித்து வந்திருப்பதைப் பலரும் அறியவியலும். சுப்பிரமணியபுரம், மைனா, கழுகு, நெடுஞ்சாலை, ஆரண்யகாண்டம், மதுபானக்கடை, தென்மேற்குப் பருவக்காற்று, வெண்ணிலா கபடிக் குழு, தங்கமீன்கள், ரேனிகுண்டா, பரதேசி, மூடர்கூடம், குக்கூ, ஜோக்கர், அட்டகத்தி, பீட்சா, டிமான்டி காலனி, மெட்ராஸ், அருவி, மேற்குத் தொடர்ச்சி மலை என்று அடுக்கிச் செல்லும் அளவிற்கு ஒரு மாற்றுச் சிந்தனையைத் தமிழ்ச் சினிமா தன்னுள் தகவமைத்துக் கொண்டு வந்துள்ளது.
“பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். மேல ஒரு கோடு” விடுபட்டுப் போன கதைக்களத்தின் மிச்ச சொச்சம். ஆம் இது சாதிவெறி பிடித்தோரைத் தோலுரிக்கின்ற கதை. திருாநல்வேலி பகுதியைக் கதைக்களமாகக் கொண்ட இக்கதையின் டைட்டில் கார்டு இருட்டிலிருந்து வெளிச்சம், வெளிச்சத்திலிருந்து இருள் என்கிற முறையில் அமைத்துக்கொண்டு வறட்சியான நிலப்பரப்பைக் காட்டியபடி துவங்குகிறது. ஒடுக்கப்பட்டோர் குளிக்கும் சிறு குட்டையில் உயர்த்தப்பட்டோர் ஒன்னுக்கடிப்பதாக அடுத்த காட்சி,  கருப்பி என்கிற நாய் கொல்லப்படுவதாக மூன்றாவது காட்சி. இந்த மூன்று காட்சிக்குள் படத்தின் வேகம் கட்டுப்பாடோடும் எச்சரிக்கை மணியை அடித்தபடியும் தாறுமாறாகப் பயணிக்கிறது.
சங்ககிரி ராச்குமார் இயக்கிய வெங்காயம் எனும் திரைப்படம் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தது. அதில் தனது ஊர் மக்களையே கதாப்பாத்தரங்களாக்கி நடிக்க வைத்திருப்பார். ப.பே.பி.ஏ.பி.எல். கதையிலும் முதன்மைக் கதாப்பாத்திரங்கள் சிலரைத் தவிர அனைவரும் ஒருவூர் மக்களே. கல்லூரி சூழலை வைத்துச் சாதியம் பேசியுள்ளார். படிக்காத பெரியோர்கள் சாதியக் கொடி வைத்துள்ளனர். ஆனால் படித்த இளைஞர்களே அந்தக் கொடியை உயர்த்திப் பிடிக்கின்றனர் என்கிற இயல்பைச் சுட்ட இப்படி தெரிவு செய்துள்ளார் போலும்.
அவனுங்களுக்கிட்ட பணமும் வசதியும் இருக்குடா நமக்கிட்ட வாயும் வயிறும்தானடா இருக்கு என்கிற முதல் காட்சி வசனத்தைக் கேட்டவுடன் இது தலித்திய சிந்தனை என்று முடிவுகட்ட தோன்றும். ஆனால் கதையின் பல இடங்களில் இருதரப்பு நியாய அநியாய தர்மங்கள் பேசப்பட்டுள்ளன. அதுவும் தருக்கமுறைப்படி பேசப்பட்டுள்ளன. பரியின் உண்மையான அப்பாவை அறிமுகப்படுத்திய காட்சி தமிழ்ச் சினிமாவில் புதியது. ஆனால் இன்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் தெருக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலும் ஆடவர்களே பெண் வேடமிட்டு நிகழ்த்துவர். பரியின் அப்பா அத்தகைய நிகழ்த்துக் கலைஞர். அக்கலைஞனை அவமானப்படுத்துகின்ற ஒரு காட்சியில் பார்வையாளர்களைக் கண்கலங்க வைத்து பரிசுத்தமான நேயத்தை உண்டாக்கி இயக்குனர் வெற்றியடைகின்றார். ஆனால் அக்காட்சியில் உயர்த்தப்பட்டோர் அவ்வளவு வன்மம் மிக்கவர்களாகக் காட்டப்பட வேண்டுமா? இஸ்லாமியர்களைத் தீவரவாதிகளாகக் காட்சிப்படுத்தப்படுவதைப் போன்று இக்காட்சி இருந்தது. நட்ட நடுரோட்டில், பகைவனின் அப்பாவை இவ்வாறு வேட்டியை அவிழ்த்து ஓடவிட்டிருப்பதை எந்த நிலையில் நின்று பார்ப்பது? இதேபோன்று ஒன்னுக்கடிக்கின்ற காட்சிகளையும் வசனங்களையும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். இது சாதிய வன்மத்தின் வெளிப்பாட்டுக்கான உத்தி என்றாலும் ஒடுக்கப்பட்டோரின் மீதான தொடர் ஒன்னுக்கு  அடித்தல் ஒருவித கோபக்கனலை உண்டு பண்ணுகிறது.
 படிச்சு என்னவாகப் போற என்று பிரின்சுபால் கேக்க, அதற்குப் பரி டாக்டர் ஆகப்போறேன்னு சொல்வார். தம்பி Law காலேஜ்ல  டாக்டர் ஆகப் போறேனு சொல்லக் கூடாது அட்வகேட் னு சொல்லனும் என்பார். சார் நான் டாக்டர்னு சொன்னது ஊசி போடுறவர இல்ல டாக்டர் அம்பேத்கர் ஆகப் போறேனு சொல்வார். திரையரங்கமே கைதட்டுகிறது. அதே கைதட்டல்கள் பரி மீது ஒன்னுக்கடிக்கும் போதும், லேடிஸ் டாய்லெட்டுக்குள் தள்ளப்படும் போதும் அடங்கி ஒடுங்கிக்கொள்கிறது. இ்ந்தச் சப்த நிசப்தங்களை நோக்கும் பொழுது சாதிய ஒளி பார்வையாளர்களை நெருக்கமாக்கிக் கொண்டுள்ளதை அறிய முடிகின்றது. அது நிஜத்தைவிட பயமுறுத்துவதாய் உள்ளது.
            கொளரவக்கொலைகள் தொடர்ந்து ஒரு கிழவனால் நிகழ்த்தப்படுவதை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர். கொடூரக்கொலைகளையும் கொளரவக் கொலைகளையும் செய்வோர் மிகச் சாதாரணமாக நடமாடுவதைச் சுட்டியிருப்பார். ஆனந்தி நாயகி, கதிர் நாயகன் இருவருக்கம் சினிமாவில் ஒரு இடம் உண்டு. தேர்ந்த நடிப்பு. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த கல்லூரி எனும் படத்தைச் சில இடங்கள் நினைவூட்டிச் சென்றாலும் பிற்பகுதிக் கதையை ஒடுக்கப்பட்டோரின் அழுகுரலாகப் பதிவு செய்து இறுதியில் தீர்வு தராமல் நம்மைச் சாதியக் கட்டவிழ்ப்போடு இருக்கையைவிட்டுச் செல்லச் செய்கிறார்.
ஒடுக்கப்பட்டவனின் கோபத்தை நீல வண்ணமாக்கி எழுவதாக வடிவமைத்திருப்பார். அந்த இடங்களில் தொல்.திருமாவளவனின் கட்சிக் கொடியும் ரஞ்சித்தின் நீலம் அமைப்பும் பார்வையார் மத்தியில் வந்து செல்வதைத் தவிர்க்கவியலவில்லை. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு புகுந்து விளையாண்டுள்ளது. கருப்பி என்கிற நாய்க்கு நடக்கும் இழவுப் பாடலுக்குச் சந்தோஷ் நாராயணன் இசைக்கோப்பு புதுரகம்.  கலை இயக்குனரும் தேவையுணர்ந்து வேலை செய்துள்ளார்.
சாதியத்திற்கு எதிரான சிந்தனைகள் இன்றைய எழுத்தாளர்கள் மத்தியில் விரவி வந்தாலும் தமிழ்ச் சூழலில் அதற்கான வாசகர் வட்டமும் ஆசிரியருக்கான அங்கீகாரமும் இன்னும் கிடைத்தபாடில்லை. இந்த நேரத்தில் அதிக வாசகர்கள் அல்லது பார்வையாளர்களைக் கொண்ட தமிழ்ச்சினிமாவில் இத்தகைய சாதியப் செறிவுடைய ப.பே.பி.ஏ.பி.எல்.கதை மிகுந்த கவனத்திற்குரியது.
   
எழுத்தாணி  /  at  அக்டோபர் 02, 2018  /  No comments

புதன், 30 ஆகஸ்ட், 2017

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்

(பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்லூரியில் நிகழ்த்தப்பெற்ற பேராசிரியரின் நூல்கள் முன்னெடுக்கும் ஆய்வு முறையியல் பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் கட்டுரை அளிக்க  வாய்ப்பமைந்தது. வாழ்க்கையில் உண்டான வரலாற்றுத் தருணம்.         நன்றி பேரா சு.தமிழ்வேலு, பேரா.இரா.அறவேந்தன், பேரா.சிலம்பு நா.செல்வராசு)  கட்டுரை கீழ்வருமாறு
   
தமிழியல் ஆய்வு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்தேறியுள்ளன. அவை காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அமைந்தவை. அவ்வகையில் இக்காலத் தமிழியல் ஆய்வு வரலாற்றில் தவிர்க்கவியலா ஆளுமையாகத் திகழ்பவர் சிலம்பு நா.செல்வராசு. இவரது ஆய்வுப் போக்குகள் தனித்தன்மை வாய்ந்தவை. அத்தகைய தன்மைகள் வழியாகத் தமிழியல் ஆய்வு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதும் அடுத்தத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய ஆய்வியல் சிந்தனைகளை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
1.தமிழாய்வுத்தடம்
1887 ஆம் ஆண்டு சி.வை.தா.வால் கலித்தொகை பதிப்பிக்கப்பெற்றதிலிருந்து சங்க இலக்கியங்கள் அச்சாக்கம் பெறத் துவங்கின. இக்காலக்கட்டத்திலிருந்து (ஏறக்குறைய) 1900 முதல் 1950 வரையிலான ஆண்டுகள் சங்க இலக்கியப் பதிப்பாக்கக் காலமாகக் கருத வேண்டியுள்ளது. இக்காலக்கட்டத்தில் ஒப்பீடுகள், மறுவாசிப்பு, பெயர்த்தெழுதல், வேறுபாடுகளைச் சுட்டுதல் என்கிற நிலைகளில் சங்க இலக்கிய வாசிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கடுத்ததாக 1950 முதல் 2000 வரையிலான இலக்கிய வாசிப்பு ஆராய்ச்சி என்கிற தளத்தில் தீவிரமாக இயங்கியுள்ளது. இ;க்காலக்கட்டத்தில் முதற்கட்ட ஆய்வுகள் ஏறக்குறைய சுட்டிக்காட்டப் பெற்றுவிட்டன. இவ்ஆய்வுகள் தமிழர் மரபைச் சுட்டுதல் அல்லது மீட்டெடுத்தல் என்கிற நிலையில் பயணம் கொண்டன. இரண்டாயிரத்திற்குப் பின்னரத்; தமிழாய்வு என்பது  பல்வேறு ஏற்ற இறக்கங்களைப் பெறத் துவங்கியது எனலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நல்லாய்வுகள் சில வெளிவந்து கொண்டிருந்தாலும் புதிய ஆய்வுக் களங்களைத் தொடாமை, முன்னர் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளைப் பிசகாமல் தமது ஆய்வாக வெளியிடல், தலைப்புகளை மட்டும் மாற்றி மாற்றி ஆய்வுரை வழங்கல், இணையத்திலிருந்து இறக்குமதி செய்து வெட்டி ஒட்டுதல் என்று பிறிதொரு கோரமுகத்தையும் தமிழாய்வில் காணவியலுகிறது. தமிழாய்வின் போக்கு குறித்துச் சி.நா.செ.(சிலம்பு நா.செல்வராசு) குறிப்பிடும் கருத்து மனங்கொள்ளத்தக்கது,
…வளர்ந்து வரும் உலக ஆய்வுச் சூழலைக் கருத்தில்கொண்டு தமிழிலக்கண இலக்கிய ஆய்வுப் போக்குகள், புதிய ஆய்வு முறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இன்றைய மொழிச் சூழலில் இலக்கியப் படைப்பாளி ஒருவரது உணர்வுகளை அவரது சமகாலத்தில் வாழும் வாசகரே முழுமையாக உணர இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் பழங்காலத்து இலக்கண, இலக்கிய வரலாற்றை ஆராய்வது அந்தந்த இலக்கண இலக்கிய ஆய்வு மெய்ம்மையை நோக்கிய பயணமே; முழு உண்மையை அறிவதாக அமைந்துவிடாது; இது இதுவரை நிகழ்ந்த, நிகழ இருக்கிற அனைத்து ஆய்வுகளுக்குமே பொருந்தும் (2004:22)
சி.நா.செ. தேடல், திட்டமிடல், ஆய்வுச்சிக்கல், தீர்வு என்று தமிழாய்வுத்தடத்தில் தமக்கென்று தனித்தன்மைகளை வகுத்துக் கொண்டு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர். மேற்குறிப்பிடப்பெற்ற கருத்துகளைக் கீழ்வருமாறு வரைகோடிட்டுக் காட்டலாம். 
                                                      தமிழாய்வுக் காலக்கட்டம்

                    முதல் காலக்கட்டம்      - 1900 முதல் 1950 வரை
                  இரண்டாம் காலக்கட்டம்   - 1950 முதல் 2000 வரை
                   மூன்றாம் காலக்கட்டம்    - இரண்டாயிரத்திற்குப் பின்னர்

கடமையாகச் செய்தல்                                                                    கடனுக்குச் செய்தல் 
(ஆய்வு நெறிமுறைகள் பின்பற்றப்படுதல்)         (ஆய்வு நெறிமுறைகள் பின்பற்றப்படாமை)

சிலம்பு நா.செல்வராசு                                                                          ஏனையோர்

2.ஆய்வு முறையியல்
 தேவையற்ற பொருண்மைகளை எடுத்துக் கொண்டு ஆய்வுகள் நகர்த்தப்படுவதும் பின்னர்ச் சிக்கலை ஏற்படுத்திக் கொள்வதுமாக இன்றைய பல ஆய்வுகள் அமைந்து விடுகின்றன. 
ஒரு ஆய்வின் வெற்றி ஆய்வுப் பொருளையும் ஆய்வுச் சிக்கலையும் இனங்காணுவதில் இருக்கிறது (எல்.ராமமூர்த்தி,2005:16) 
சி.நா.செ.இவ்விடயத்தில் மிகத் தெளிவாகத் திட்டமிடுபவர். நல்லூர்ப் பெருமணம்(2016:46) குறித்த களஆய்வு இதற்கு ஆகச் சிறந்த உதாரணம். ஆய்வுச் சிந்தனை குறித்துச் சி.நா.செ. ‘வரலாற்றின் யதார்த்தம் ஒன்றாக இருந்தபோதும் கூட அது பற்றிய புரிதல்கள் பலவாகத்தான் இருக்கும். இதுவே ஆய்வியல் யதார்த்தமான நிலையும்’(2016:48) என்று பொதுநிலையிலான வரையறைகளையும் அளித்துச் செல்வதைக் காணவியலும்.
தேடுதலை ஒரு முறையியலுடன் செய்யப்படுவதே ஆய்வாகும் (பக்தவச்சல பாரதி,2005:133)
சமூகவியல், மானுடவியல், வரலாற்றியல், மார்க்சியம் என்று தமது ஆய்வில் ஒரு முறையியலை வகுத்துக்கொண்டு அதனை நோக்கிய பார்வையாகக் களத்தை விரிவு செய்கின்ற போக்கினைச் சி.நா.செ.கையாண்டிருக்கிறார். நந்தியினைச் சைவ அடையாளமாகப் பலரும் கருத்திற் கொண்டிருப்பது புராண, தொன்மத்தின் தொடர்ச்சியாகும். அதனையே சி.நா.செ. சமண, பௌத்த அடையாளமாக நிறுவி அதிலொரு சமூகவியல் சிந்தனையை முன்வைப்பது எடுத்துரைப்பியலின் உச்சம் எனலாம்.
இச்சான்றுகள் யாவும் நந்திக்கும் சமண சமயத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன. நந்தி பற்றிய சமயத் தத்துவங்கள் யாவும் ஆநிரை உடைமைக் காலச் சமூகத்தில் முகிழ்த்துப் பின்னாளில் உலக சமயங்கள் பலவற்றில் இடம் பெற்றிருப்பதை அறிய முடியும். இந்தியச் சமயங்கள் பலவற்றிலும் நந்தி இடம் பெற்றிருப்பது அதன் சமூகத் தொன்மையைக் காட்டுகிறது………..தவிரவும் சிவன் மூலத்தானத்து எதிரே நந்தி அமர்ந்திருப்பது சைவம் சமணத்தை வெற்றி கொண்டதன் அடையாளமாகவே சமூகவியலார் கொள்ளுதல் வேண்டும் (2016:58-59)
ஒரு பொருளைக் குறித்த முறையான படிப்பே முறை எனப்படும் (கு.வெ.பா,2007:36) தனது ஆய்வில் முறையற்ற படிப்பை எங்கும் திணித்ததில்லை சி.நா.செ. தனக்கான ஆய்வு எல்லைக்குள் எவ்வளவு சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்றுவார் உதாரணத்திற்குக் கண்ணகி குறித்த ஆய்வுரை சுட்டத்தக்கது(கண்ணகி மரபு,2016).
ஆராய்ச்சியின் மிக முக்கிய பண்பு தனித்தன்மையாகும். உண்மைகளை வெளிப்படுத்துவதிலோ கோட்பாடுகளை நிறுவுவதிலோ ஆய்வாளரின் தனித்தன்மை மிக முக்கியமானதாகும். அனைவருக்கும் தெரிந்த பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் தனக்கே உரிய முறையில் பிறர் பெற முடியாத உண்மைகளை வெளிப்படுத்துவதே ஆய்வின் தனித்தன்மை (எல்.ராமமூர்த்தி,2005:11)
மேற்கண்ட கருத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடியவர் சி.நா.செ. ஆய்வினைத் திட்டமிடல், பகுத்துக் கொள்ளுதல், ஆய்வுக்கான எல்லையைவிட்டு மீறாத தன்மை, வினாக்களை முன்னிறுத்திப் பதிலுரை அளித்தல், முடிவுரைத்தல் என்று சி.நா.செ.வின் ஆய்வு அமையும். இவையனைத்தும் ஓர் ஆய்வுக்கான இயல்பான தன்மைகள் என்றாலும் அவை பலராலும் பின்பற்றப்படாதவை என்பதும் சி.நா.செ.வால் அனைத்து ஆய்வுகளிலும் கவனமாகக் கையாளப்படுபவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சி.நா.செ.வின் கீழ்க்கண்ட கூறுகள் அவரது ஆய்வின் தனித்தன்மைகளாகக் கொள்ளத்தக்கன.
3.0.சி.நா.செ.வின் ஆய்வுத் தன்மைகள்
1.கட்டமைப்பு
2.எடுத்துரைப்பியல்
3.நேர்த்தியான திட்டமிடல்
4.முன்னுரைக்கு முக்கியத்துவம்
5.உட்தலைப்பில் புதுமை
6.முடிவுரைத்தல்
7.மெய்ப்புத் திருத்தம்
8.மொழிநடை
9.அணுகுமுறை
10.பிற்பகுதி
11.ஆய்வுக்களம்
3.1கட்டமைப்பு
சி.நா.செ.வின் ஆய்வுரை முதற்பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி என்றமையும். முதற்பகுதியில் கருத்திற்கொள்ளப்பட்ட ஆய்வுக்களம் தொடர்பான சான்றுகள் எடுத்துரைக்கப்பட்டு அடிக்கட்டுமானம் உறுதியாக்கிக் கொள்ளப்பெறும். இரண்டாம் பகுதியில் முதற்பகுதியின் சான்றாதாரங்கள் கூர்மையாக்கப்பட்டுக் கட்டுமானம் உயர்த்தப்பெறும். மூன்றாம் பகுதி தீர்க்கமான முடிவை அளித்துக் கட்டிடத்தை முழுமையாக்கலாக அமையும். இப்பணி சிறுநூலாயினும், ஆய்வுத்திட்டமாயினும், ஆய்வுக்கட்டுரையாயினும் தவறாது இடம்பெறும். சான்றிற்குப் பரிபாடலில் திருமால்:கடவுளும் காமமும்(2009:128) எனும் கட்டுரையைக் கொள்ளலாம். 
முதற்பகுதி பரிபாடலில் திருமால் பற்றிய பாடற்கருத்துகள் தொகுக்கப்பெற்றும் மாயோன் பற்றிய தொல்தமிழர் வழிபாடு விளக்கப்பெற்றும் அமைந்துள்ளது. இரண்டாம்பகுதி இந்தியப் பூர்விக வழிபாட்டில் மாயோனின் நிலைப்பாடு தொல்தமிழர் வழிபாட்டில் மாயோனின் நிலைப்பாடு விளக்கப்பெறுகிறது. அதாவது தொல்தமிழர் வழிபாட்டில் கடவுளும் காமமும் பிணைந்துள்ள நிலைப்பாடு பின்னர் பெருஞ்சமய வழிபாடாக மடைமாற்றம் அடைந்தமை குறித்துச் சான்றாதாரங்களுடன் விளக்கப்பெறுகிறது. இறுதியில் “இவ்வாறான மேனிலையாக்கம் நிகழும்போதுதான் பூர்வீக தமிழரின் ஆயர்குலக் கடவுளான மாயோன் திருமாலாகவும் வி~;ணுவாகவும் ஆக்கம் பெற்றும் வடமொழி புராண மரபு சார்ந்த தத்துவங்களைப் பெற்றும் பரிபாடலில் திருமாலாகக் காட்சிப்படுத்தப் பெறும் நிலையை உணர முடிகின்றது. இக்காட்சிப்படுத்தலில் வி~;ணு மரபு முன்னிலை பெறவே, மாயோன் மரபு பின்னிலை பெற்றிருக்க வேண்டும்.” என்கிற முடிவினை அளிக்கின்றார். இக்கட்டுரையின் சாரத்தைக் கீழ்வருமாறு சுட்டலாம்.
முருகனைப் போன்று மாயோன் காமப்பொருண்மையுடன் புனையப்பெறாதது ஏன்?
புராதன தமிழ்ச் சமூகத்து மாயோனுக்கும் காமத்துக்கும் (குரவைக்கூத்து ஆய்ச்சியர்)இடையே உள்ள உறவே பின்னாளில் ஆழ்வார் பாடல்களுக்கு அடித்தளம் இட்டிருக்க வேண்டும்.
பரிபாடலில் முருகன், வையைப் பாடல்களில் உள்ளதைப் போன்ற காமப்புனைவினைத் திருமால் பாடல்களில் காணவியலவில்லை ஏன்?
வைணவ சமயம் இந்தியப் பூர்வீகக் குடிகளின் கடவுளர் பண்புகளில் இருந்து உருவாகிய பின் பெருஞ்சமய நிலையை எய்தியிருக்க வேண்டும்.
இத்தகு கட்டமைப்புதான் சி.நா.செ.யின் ஆய்வுத்திறமாக அமைந்திருக்கிறது.
3.2.எடுத்துரைப்பியல்
சி.நா.செ.யின் எடுத்துரைப்பியல் பல்வேறு தனித்தன்மைகளுடன் திகழ்கின்றது அவரது ஆய்வுரைகள் செழுமை பெறக் காரணமாக இத்தன்மையைச் சுட்டலாம்.  மேலும் புதியதோர் ஆய்வாளனைச் செழுமை பெறச் செய்வதுவும் அத்தகைய எடுத்துரைப்பியல்தான். அவற்றைக் 
கீழ்வருமாறு குறிப்பிடலாம.;
1.சொற்செட்டுகளைக் கட்டமைத்தல்
2.முன்னோர் வழிநின்று ஆய்வுகளை நகர்த்துதல்
3.அகச்சான்றுகளை முதன்மையாகக் கருதுதல்
4.தமது கருத்தினை நினைவுகூர்தல்
5.வினாக்களின் வழி ஆய்வை நகர்த்துதல்
6.வரைகோடும் வரிசைமுறையும்
3.2.1.சொற்செட்டுகளைக் கட்டமைத்தல்
ஓர் ஆய்வுரையில் தேவையற்ற சொற்கள் இடம்பெறுதல் கூடாது. அது ஆய்வின் செறிவுத்தன்மையைச் சீர்குலைக்கும். சி.நா.செ ஆய்வுரைகளில் சொற்சிக்கனம் கடைபிடிக்கப்பட்டுக் கருத்திற்கு முதன்மையளிக்கும் தன்மை அடங்கியிருக்கும். 
வள்ளி முருக இணைப்புப் பற்றியும் வள்ளி வழிபாடு பற்றியும் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம். (2016:24)
விளக்குமுறையில் இத்தகு எடுத்துரைப்பு மிக முக்கியமானதாகும். வாசிப்பிற்கேற்ற அல்லது வாசகரை மனத்துட் கொண்ட ஆய்வுரையே காலங்கடந்து நிற்கிறது. சமூகவியல் கொள்கைகளை உள்வாங்கி அதனைத் தமிழ்ப்படுத்திச் சில கோட்பாடுகளாக வரையறுத்துள்ளமையைச் சி.நா.செ. சுட்டுகின்றார். அது வருமாறு:
இலக்கியப் பரிணாமவியல் நிலை, கால உரை நிலை, செங்கோட்டு நிலையும் கிடைக்கோட்டு நிலையும், பிரதிபலிப்பு நிலை, ஏற்புடைமை நிலை, மீட்டுருவாக்க நிலை என்பனவாகும். இவற்றை வேறுவிதமாகக் கூறும் வழி இருந்தாலும் சொற்சிக்கனத்துடனான ஆளுகையைக் காணவியலுகிறது.
3.2.2.முன்னோர் வழிநின்று ஆய்வுகளை நகர்த்துதல்
வள்ளி முருக வழிபாட்டு இணைப்பு:தொன்மைக் குறிப்புகளும் தொன்மக் குறிப்புகளும் எனும்
ஆய்வுரையானது முருக வழிபாடு தொன்மையானது என்பதையும் தொன்மம் கலந்தது என்பதையும் நிறுவுகிறது. பின்னர்  வள்ளி வழிபாடு முருகனுடன் தொடர்புற்றிருந்தமையையும்  காலப்போக்கில் கொற்றவை முருகனின் தாய் ஆனது போன்று வள்ளி மனைவியானதன் பின்னணியையும் விளக்குகிறது. இதனை நிறுவுதற்கு அஹமத் ஹசன் டானி, டி.ஆர்.ஆராவமுதன், ஈராஸ், அய்ராவதம் மகாதேவன், பி.எல்.சாமி ஆகியோரின் சான்றுகளைச் சி.நா.செ.  முதன்மையாகக் கொண்டுள்ளார். முன்னாய்வுகளைச் சுட்டிக்காட்டி நயமாக ஏற்றும் மறுத்தும் தமது ஆய்வுரையை நகர்த்துவதை இவ்வாய்வுரையில் உற்றுநோக்கலாம்.
3.2.3.அகச்சான்றுகளை முதன்மையாகக் கருதுதல்
தொல்லியல், நிலவியல் கருத்துகளைத் தமது ஆய்விற்குத் துணைமைகளாகக் கொண்டிருந்தாலும் இலக்கியச் சான்றுகளையே சி.நா.செ. முதன்மையாகக் கொண்டுள்ளார். அகச்சான்றுகள் வழி தமது கருத்தை நிறுவ முயல்வார். ஆழங்கால்பட்ட வாசிப்பு இருத்தலாலேயே இது நிகழும்.
எவ்வித வழுக்கள்  அற்ற கறாரான வரையறைகள் கொண்ட தூய்மை நிறைந்த ஆண்மைத் தன்மைக்கான இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் சிறிது மாற்றம் நிகழினும் அது ஆண்மை எனப்படாது பெண்மையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இக்கருத்தினை முன்வைப்பதற்கு ஏராளமான அகச்சான்றுகள் அளிக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
3.2.4.தமது கருத்தினை நினைவுகூர்தல்
தம்மால் முன்னர் நிறுவப்பெற்ற கருத்துகளைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்ற தன்மையினை இவரது ஆய்வுரைகளில் காணலாம். இதன் பொருள் முன்னர்க் கூறப்பெற்ற கருத்துத் தொடர்பான மேலாய்வுகள் நிகழ்த்தப்பெறவில்லை என்பதாகும். இன்றைய சூழலில் சமூகவியல், மானுடவியல் தொடர்;பான ஆய்வுகளை ஆய்வாளர்கள் தெரிவு செய்வதில்லை. அதுதொடர்பான படிப்புகளையும் மேற்கொள்ளுவதில்லை. முன்னர்  செய்த ஆய்வுரைகளையே மீண்டும் மீண்டும் வேறுவேறாக அளித்துக்கொண்டிருக்கின்றனர். ஆகையால் நா.வா.,சி.நா.செ., பக்தவச்சல பாரதி இன்னும் சில அறிஞர்களால் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பெற்று அவர்களாலேயே வேறொரு களம் கட்டமைக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது.
3.2.5.வினாக்களின் வழி ஆய்வை நகர்த்துதல்
சி.நா.செ.வின் ஆய்வு நகர்த்தலில் மிக முக்கியமான பண்பு வினாக்களை எழுப்புதலாகும். எந்தவொரு ஆய்வானாலும் வாசகர் நிலை நின்று அடிப்படையான அல்லது முக்கியமான வினாக்களை முன்வைத்து ஆய்வில் ஒரு நாவலோட்டத்தைப் புகுத்தியிருப்பார். ஓர் ஆய்வில் வினாக்களை எழுப்புவது எளிது. அதற்கான விடையை இறுக்குவது கடினம். ஆனால் இவையிரண்டையும் சி.நா.செ. மிக எளிதாகச் செய்து காட்டியுள்ளார்.

3.2.6.வரைகோடும் வரிசைமுறையும்
ஆய்வு தொடர்பான கருத்துகளை முதலில் விரிவாக விளக்கிப் பின்னர் வரைகோடிட்டு விளக்குகின்ற தன்மை வாசகர் நிலைப்பட்டதாகும். இதே போன்று கருத்துகளை வரிசைப்படுத்தி அதிலும் ஒரு தொடர்ச்சி முறையைப் பின்பற்றியிருத்தலும் வாசகர் நிலைப்பட்டதாகும். அதற்கான உதாரணங்களைச் சி.நா.செ.யின் பெரும்பாலான ஆய்வுரைகளில் காணலாம்.
3.3.நேர்த்தியான திட்டமிடல்
ஓர் ஆய்வினை நகர்த்துதலுக்கு இயல்பகுப்பு என்பது மிக முக்கியமானதாகும். இவ்வியல்;பகுப்பு முறை ஆய்வுக்கான எல்லையைக் கட்டமைப்பதாகும். இயல்பகுப்பும் ஆய்வு எல்லையும் ஒன்றோடொன்று தொடர்புடையன. சான்றாக,
“இந்த ஆய்வேடு பாயிரக் கூறுகள் பதினொன்றில் ஐந்து கூறுகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆய்வை மேற்கொண்டுள்ளது. அவை வருமாறு
1. எல்லை
2. வழி
3. ஆக்கியோன்
4. களம்
5. கேட்போர்(2004:24)”
எனும் குறிப்பு வாசகரை நேர்கோட்டுப் பாதையில் பயணிக்க வழிவகுக்கிறது. விளக்கவுள்ள களம் எக்காரணம் கொண்டும் வெளித்தளத்தில் இயங்க அனுமதிக்காதவர். அப்படி வேறொரு விடயத்தை விளக்க முற்படின் அதற்கான காரணத்தையும் முன்வைத்திருப்பார் சி.நா.செ. 
மேலே கூறப்பெற்ற இரு வினாக்களையும் புரிந்து கொள்வதற்கு முன்பு ஞான சம்பந்தர் காலத்துச் சமயநிலைகளை அறிய வேண்டியது இக்கட்டுரைப் போக்கிற்குத் துணை செய்யும்(2016:52)
இவ்வாறு திட்டமிடலிலும் ஒரு தெளிவினை ஏற்படுத்துவது சி.நா.செ.யின் ஆய்வுத்தன்மையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
3.4.முன்னுரைக்கு முக்கியத்துவம் அளித்தல்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் காரணம், எதிர்கொள்ளப்பட்ட சவால்கள்,  உதவியோரை நினைவுகூர்தல், இயல் பகுப்புமுறைகள், அவற்றிற்கான சிறு விளக்கம் இவற்றுடன் நூலைப் படிப்போருக்கான முன்னறிவிப்புகள் என்று முன்னுரையை ஒரு சடங்கு முறையாகக் கருதாமல் அதனையும் ஆய்வு நெறிமுறைப்படி அமைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

3.5.உட்தலைப்பில் புதுமை
பெரும்பாலான ஆய்வுரைகளில்(தனிநூல், ஆய்வுக்கட்டுரை,) உட்தலைப்புகள் இடுவதைச் சி.நா.செ. தவிர்த்திருப்பதைக் கவனிக்கவியலுகிறது. பதிலாக பகுதி – ஒன்று, பகுதி - இரண்டு, பகுதி - மூன்று என்று கையாள்வதும் அ, ஆ, இ, என்று தமிழ் எழுத்துகளைத் தலைப்பாக்குவதும் ரோமன் எழுத்துருக்களைப் பயன்படுத்துவதும் சி.நா.செ.யின் எழுத்துரை வழக்கமாக இருப்பதை கவனிக்கவியலும்.
3.6.முடிவுரைத்தல்
சி.நா.செ.யின் ஆய்வுரைகள் ஒவ்வொன்றும் புதிது புதிதான ஆய்வு முடிவுகளை அளிக்கவல்லன. ஆய்வு முடிவிலிருந்து அடுத்த ஆய்வுக் களனை ஆய்வாளர்கள் தொடர்வதற்கான களமும் சுட்டிக்காட்டப்பெற்றிருக்கும். இயன்றவரை காரண,காரியத்துடன் ஆய்வுரையை விளக்கி இறுதியாக முடிவுரைத்தலில் ஓர் உறுதித்தன்மையைப் பின்பற்றுகின்ற முறையியலைச் சி.நா.செ.யிடம் காணவியலும். 
பல்லவர் காலப் பக்தி இயக்கத்திற்கான வித்தைப் பரிபாடல் கலித்தொகையிலிருந்தே அறிய முடிகிறது. வித்து தோன்றிய காலமாகிய நீதி இலக்கியக் காலமே பரிபாடல் கலித்தொகை தோன்றிய காலமாகக் கொள்ள முடியும்(2009:82)     
இந்தவொரு முடிவை அளிப்பதற்கு எடுத்தாளப்பெற்றுள்ள சமூகவியல் சிந்தனை, வரலாற்றியல் சிந்தனை ஆகியன சி.நா.செ.யின் ஆய்வுத்திறத்தை எடுத்தியம்புகிறது. சி.நா.செ.ஒரு முடிவை வழங்குதற்கு முன்னெடுத்துள்ள படிமுறைகள் ஏற்கத்தக்க முடிவுகளை அளித்திருக்கிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது. மேலும் ஆய்வு முடிவினைத் தொடர்ந்து பின்னுரை எனும் பகுதியை அமைத்து அதில் தமது ஆய்வுக்கான வித்து குறித்துப் பேசுவதைப் பல ஆய்வுரைகளில் பின்பற்றியிருக்கிறார். 
3.7.மெய்ப்புத்திருத்தம்
ஆய்வின் ஒரு பகுதி மெய்ப்புத்திருத்தம் ஆகும். இதில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதைச் சி.நா.செ.யின் அனைத்து ஆய்வுரைகளும் எடுத்தியம்புகின்றன. இதன் தொடர்ச்சியாகவே சி.நா.செ.யின் ஒற்று:வல்லெழுத்து மிகும் இடம் மிகா இடம் (2012) எனும் சிறு நூலைக் கருத வேண்டியுள்ளது.
3.8.மொழிநடை
சி.நா.செ.யின் மொழிநடை வாசகர்பாற்பட்டது என்பதில் ஐயமில்லை. ஒரு ஆய்வானது அனைவரையும் சென்றடைந்து மேலாய்வுக்கு வழிவகுக்குமேயானால் அவ்வாய்வாளர் தேர்ந்த மொழிநடையைப் பின்பற்றியுள்ளார் என்றுதான் பொருள். சி.நா.செ. ஆய்வுகள் இன்றைய ஆய்வாளர் பலருக்கு முன்னுதாரணமாகவும் இவரது மொழிநடை பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது என்பது மறுத்தற்கன்று. சமைத்துக் கொள்ளப்படுகிறது, காலநீட்சிமை, அமைவு பெற்றுள்ளது, படிமலர்ச்சி, பரிணாமம் பெறுதல், மறுவாசிப்பு, மீள்வாசிப்பு என்பன போன்ற பல சொற்கள் இவரது ஆய்வுரையில் இடம்பெற்றிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக எக்காரணம் கொண்டு ‘ஆய்வுநடை’யிலிருந்து சிறிதும் மாற்றிக்கொள்ளாத தன்மை சி.நா.செ.விற்குரியதாகும்.
3.9.அணுகுமுறை
சமூகவியல், மானுடவியல் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ள சி.நா.செ. இவ்விரண்டு அணுகுமுறைகளின் ஊடே வரலாற்றியல், தொல்லியல், நிலவியல், மார்க்சியம், விளக்கமுறை அணுகுமுறைகளையும் பின்பற்றியுள்ளார். இருப்பினும் சமூகவியல், மானுடவியல் அணுகுமுறைகளில் தேர்ந்தவராகச் சி.நா.செ அடையாளம் காணப்பெறுகிறார்.
3.10.பிற்பகுதி
ஓர் ஆய்வின் தரத்தை அதன் பின்னிணைப்புகள் வழி அறியலாம் என்பார்கள். சி.நா.செ. தமது ஆய்வின் பிற்பகுதியைப் பின்னுரை, பின்னிணைப்புகள், குறிப்புகள், துணைநூல்கள், தகவலாளர்கள்(கள ஆய்வு) என அழுத்தமாக அமைத்திருக்கின்ற தன்மையைக் காணவியலுகிறது.
3.11.ஆய்வுக்களம்
வருங்கால ஆய்வுக்கும் வருங்கால ஆய்வாளர்களுக்கும் ஏராளமான ஆய்வுக் களங்களைச் சி.நா.செ. சுட்டிச் செல்வது வழக்கம். 
அகத்தியத்தை ஏற்காத இதே இயக்கப் பின்னணி ஐந்திரத்தையும் நான்மறை முற்றிய அதங்கோட்டாரையும் எவ்வாறு ஏற்றது என்பது இக்கட்டுரையின் இறுதியில் எஞ்சி நிற்கிறது. இவ்வாறு ஏற்றமைக்குப் பின்னணியில் இயங்கிய மொழி அரசியலை வேறொரு கட்டுரையில் ஆராய முடியும்(2016:167) 
என்று தமது அடுத்தக்கட்ட நகர்த்தலைத் திட்டமிடுகிறார்,
பின்னாளில் கொற்றவை முருகனுக்குத் தாய் ஆனது போன்று வள்ளி மனைவி ஆனாள். இக்கருத்து இனிவரும் காலங்களில் விரிவாக ஆராயப்பெற வேண்டும்(2016:35)
என்று பின்னோர்க்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றார். இவ்விரு தன்மைகளையும் சி.நா.செ.யிடம் காணவியலுகிறது. 
தொகுப்புரை
சி.நா.செ.எதிர்காலத் தமிழாய்வியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருபவர் எனின் அது மிகையன்று. தமது மொழிநடையாலும் ஆழ்ந்த வாசிப்பினாலும், தீராத் தேடலினாலும் தமக்குரிய இடத்தை தமிழாய்வில் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்.இதனைப் புகழ்ச்சி என்று கருதற்கியலாது காரணம் அவரது ஆய்வுரைகள் ஒவ்வொன்றும் இதனையே எடுத்துரைக்கின்றன. மேலே விவரிக்கப்பட்ட ஆய்வுத்தன்மைகள் பொதுமையானதுதான் என்றாலும் அவற்றைச் சி.நா.செ. முறையாகத் தமது ஆய்வில் பின்பற்றி வருகின்றார் என்பதை இத்தனித்தன்மைகள் வழி அறியவியலுகின்றது. அவை மட்டுமன்றி
கருத்துகளை வரிசைப்படுத்தித் தருதல்
குறிப்பிட்ட கருத்து நிறைவுற்ற பின்னர் அதுகுறித்த சிறு விளக்கத்தை அளித்தல்
மூன்று நிலைகள், நான்கு நிலைகள் எனப் பகுத்தளித்தல்
என்று இன்னும் ஏராளமான கூறுகளைப் பிரித்தெடுக்கவியலும். எதுவாயினும் சி.நா.செ..யின் ஆய்வுரைகள் ஆய்வியல் முறையியலோடு தொடர்ந்து தமிழாய்விற்குப் பெரும்பங்காற்றி வருகின்றன என்பது மனத்துட்கொள்ளத்தக்கது.
துணைநூல்கள்
அறவேந்தன் இரா.,தாயம்மாள் அறவாணன்,மைதிலி வளவன்(ப.ஆ)2005, கணிப்பு, தாயறம், பதிப்பகம் புதுவை, திருச்சி
பாலசுப்பிரமணியன் கு.வெ., ஆய்வியல் நெறிகள்(ஆ.ப.),2007, உமா வெளியீட்டகம், தஞ்சாவூர்.
சுண்முகம் ஆ,,சித்திரபுத்திரன் எச்.,(ப.ஆ.)2005,ஆய்வு முறையியல்,அன்னம், தஞ்சாவூர்
செல்வராசு,சிலம்பு.நா., 2004,தொல்காப்பியப் பாயிரம்: சமூகவியல் ஆய்வு,காவ்யா பதிப்பகம், சென்னை.
--------------,2009, சங்க இலக்கிய மறுவாசிப்பு(இ.ப), காவ்யா பதிப்பகம், சென்னை.
--------------,2010, தொல்காப்பியத்தில் மணமுறைகள், காவ்யா பதிப்பகம், சென்னை
--------------,2016, கண்ணகி மரபு, காவ்யா பதிப்பகம், சென்னை.
-------------,,2016 பண்டைத் தமிழர் திருமண வாழ்க்கை(இ.ப), காவ்யா பதிப்பகம், சென்னை.
-------------,2016,தொல்தமிழர் சமயம் (இ.ப), காவ்யா பதிப்பகம், சென்னை.

எழுத்தாணி  /  at  ஆகஸ்ட் 30, 2017  /  No comments

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

ஜோக்கர் – தேசிய விருதும் ஜனாதிபதியும்

  ஜோக்கர் – தேசிய விருதும் ஜனாதிபதியும்

2016 ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான  தேசிய விருதை ஜோக்கர் பெற்றுள்ளது. இந்த தருணத்தில் இப்படம் குறித்து சில கருத்தாடல்களை நிகழ்த்துவது தேவையாகிறது. சொல்லப்போனால் கடமையாகிறது. இது விமர்சனம் அல்ல. படம் பார்த்து முடித்த நாளிலிருந்தே அனைவரையும் குறிப்பாக இளைய தலைமுறைகளைப் பார்க்கச் சொல்லி வருகிறேன். அதன் நீட்சியாகவே இப்பொழுது இந்தப் பதிவை இடுகிறேன்.
ஜோக்கரின் குரல் ஒரு சாமானியனுடையது. கையாளாகாத தன்மையின் உச்சத்தில் பிறக்கிறான் ஜோக்கர் ஜனாதிபதியாக. “ஓட்டுப்போட்டு பதவியில் அமர்த்த உரிமை இருக்கிறது. தவறு செய்தால் பதவியைவிட்டு நீக்க நமக்கு உரிமையில்லையா“ என்கிற கேள்வியில் பிறக்கிறான் ஜனாதிபதி. அநீதியைக் கண்டு எவனொருவன் ஆத்திரம் கொள்கிறானோ அவனும் என் தோழன் என்பது சே யின் பேச்சு. இக்கருவே விரிவடைந்து மன்னர் மன்னன் – பொன்னூஞ்சல் – இசை எனும் கதாப்பாத்திரங்களில் உயிர்ப்பெறுகின்றன.
இந்தச் சமூகத்தின் மீது கோபம் கொள்ளுகின்ற நாமனைவரும் ஜனாதிபதியாக மாறித்தான் ஆக வேண்டும். இல்லையேல் இந்தச் சமூகம் நம்மை ஜோக்கராகத்தான் பார்க்கும்.
கழிப்பறையைப் பற்றிய படம் என்று படம் பார்க்கும் முன்னால் சில அறிவு ஜீவிகள் அள்ளித்தெளித்துக் கொண்டிருந்தனர். படத்தின் முதல் காட்சியிலிருந்தே புரியத் தொடங்கின. கண்டிப்பாக இது வேற தளத்துப்(லெவல்) படம் என்று. துடைப்பம் விற்றுக்கொண்டு இரண்டு வியாபாரிகள் மிதிவண்டியை மிதித்து வருகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் சிறுவர்கள் மலம் கழித்துக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது வியாபாரிகளின் கூவல் துடைப்பம் என்பது தொடைப்போம் தொடைப்போம் என்பதாக மாறுகிறது. இயக்குநர் ராஜிமுருகன் வந்து செல்கிறார். இதுதான் முதல்காட்சி. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வோம் எனும் டியுசன் காட்சியில் குடிப்பது, சாக்கடை ஓடுவது காட்சியாக வருகின்றன. மரம் நடுவோம் மண் வளம் காப்போம் வசனத்தில் குழாய்த்தண்ணீரில் மண் கலந்து வருவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுமாதிரி ஏராளமான படிமங்களையும் காட்சிப் பின்னணிகளையும் வேறு படத்திற்கு என்று ஒதுக்கிக் கொள்ளாமல் இந்தப் படத்திற்காகவே செதுக்கிக் கொண்டே சென்றுள்ளார் இயக்குநர்.ஷான் ரோல்டனின் இசை தேசியக்கொடியை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது. அது ஏன் என்பது படத்தின் ஓட்டத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. மன்னர் மன்னன் முதல்காட்சியில் குளித்துக் கொண்டிருக்கின்ற போது கலை இயக்குநர் சதீஸ்குமாரை உங்களால் பாராட்டாமல் இருக்க முடியாது அவ்வளவு கவனம். சந்து பொந்துகளுக்கும் புகுந்து வரும் செழியனின் ஒளிப்பதிவு படத்தின் பலம்.
  சரி படத்திற்குள் சற்றுப் போகலாம், காந்தி ஒரு கண்ணுனா பகத்சிங் இன்னொரு கண்ணு என்று தேசத்தின் அடையாளம் ஒற்றை வசனத்தில் முடிந்து விடுகிறது. எத்தனையோ போராட்ட முறைகளையும் எதற்கெல்லாம் போராடலாம் என்பதையும் எல்லாவற்றிற்கும் மேலாக எதற்கு போராட வேண்டும் என்பதையும் மிகத் துணிச்சலாக கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் எடுத்துரைக்கிறது. ஆளுக்கொரு நீதி ஆட்டுக்கொரு நீதி காட்சிகளில் நீதியைக் கொஞ்சம் தலைகாட்ட வைத்து உசேன் போல்ட்டை (ஆட்டின் பெயர்) நடக்க வைத்து விடுகிறார்.
படத்தின் இறுதிக்காட்சி பொன்னூஞ்சல் (மு,ராமசாமி-நாடகப் பேராசிரியர் ) பேசுவதாக நிறைவுபெறுகிறது அவ்வசனம் வருமாறு,

சொசைட்டில நடக்குறதலாம் பாத்துட்டு என்னால சும்மாலாம் போகமுடியல. கோபம், ஆத்தாமை எதாவது பண்ணுனாதான் தூங்க முடியும்னு வந்துட்டேன். ரொம்ப கொடுமை என்னன்னா, நாம யாருக்காக போராடுறோமோ யாருக்காக செத்துப் போறோமோ அவங்களே நம்மள காமெடியனா பாக்குறதுதான்…… நீள்கிறது வசனம்… இறுதியில் எல்லாத்தயும் வேடிக்க பாத்துட்டு மந்தை மந்தையா சாகுறீங்க??? நீங்க  பைத்தியமில்ல. நாங்க பைத்தியம் தான் என்று கும்பிடும் காட்சியோடு படத்தின் அரை ஒவ்வொன்றும் என் (நம்) கண்ணத்தில் விழுகிறது.

எழுத்தாணி  /  at  ஏப்ரல் 07, 2017  /  No comments

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.