ஆன்டி இண்டியன் படத்தின் துவக்கத்திலிருந்தே மாறுபட்ட உத்திகளைக் (யதார்த்தம் எனும் உத்தி) கையாண்டிருக்கிறார் இயக்குநர் புளூ சட்டை C.இளமாறன். சின்ன சின்ன வார்த்தைகளுக்காகவும் பின்புறப் படங்களுக்காகவும் பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்ற இன்றைய சூழலில் இது மாதிரியான படம் வெளிவந்திருப்பது அதிர்ச்சி மிகுந்த வரவேற்புதான். ஆம், அந்த அளவிற்கு மதம் பேசப்பட்டிருக்கிறது. மதங்களின் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதத்திற்குள்ளான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. நிச்சயம் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இது இருக்கும். ஏனென்றால் இந்தப் படம் பேசிய துணிச்சலான வசனங்களை வேறு படங்கள் பேசவில்லை என்பதுதான் இதற்கான காரணம். தொழில்நுட்பம், இசை, ஒளிப்பதிவு என்று பல கோளாறுகள் இருப்பதாக அறிவு நிபுணர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பிற்கு இவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்தச் சமூகத்திற்குச் சொல்ல நினைத்தவொன்றைச் சமரசம் இல்லாமல் தனது மனத்திற்குப் பிடித்தபடி சொல்லியிருக்கிறோமா? என்பதுதான் பிரதானம். இந்தப் படத்...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்