பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்திற்குப் பின்னர் நான் எழுதுகின்ற விமர்சனம் அல்லது ஒரு படைப்பு மீதான மதிப்பீடுதான் இந்தப் பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். பருத்திவீரன் படத்திற்குப் பிறகு தமிழ்ச் சினிமா ஒரு மாற்றுச் சிந்தனையை இடைக்கொண்டு பயணித்து வந்திருப்பதைப் பலரும் அறியவியலும். சுப்பிரமணியபுரம், மைனா, கழுகு, நெடுஞ்சாலை, ஆரண்யகாண்டம், மதுபானக்கடை, தென்மேற்குப் பருவக்காற்று, வெண்ணிலா கபடிக் குழு, தங்கமீன்கள், ரேனிகுண்டா, பரதேசி, மூடர்கூடம், குக்கூ, ஜோக்கர், அட்டகத்தி, பீட்சா, டிமான்டி காலனி, மெட்ராஸ், அருவி, மேற்குத் தொடர்ச்சி மலை என்று அடுக்கிச் செல்லும் அளவிற்கு ஒரு மாற்றுச் சிந்தனையைத் தமிழ்ச் சினிமா தன்னுள் தகவமைத்துக் கொண்டு வந்துள்ளது. “பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். மேல ஒரு கோடு” விடுபட்டுப் போன கதைக்களத்தின் மிச்ச சொச்சம். ஆம் இது சாதிவெறி பிடித்தோரைத் தோலுரிக்கின்ற கதை. திருாநல்வேலி பகுதியைக் கதைக்களமாகக் கொண்ட இக்கதையின் டைட்டில் கார்டு இருட்டிலிருந்து வெளிச்சம், வெளிச்சத்திலிருந்து இருள் என்கிற முறையில் அமைத்துக்கொண்டு வறட...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்