முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜோக்கர் – தேசிய விருதும் ஜனாதிபதியும்

  ஜோக்கர் – தேசிய விருதும் ஜனாதிபதியும் 2016 ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான  தேசிய விருதை ஜோக்கர் பெற்றுள்ளது. இந்த தருணத்தில் இப்படம் குறித்து சில கருத்தாடல்களை நிகழ்த்துவது தேவையாகிறது. சொல்லப்போனால் கடமையாகிறது. இது விமர்சனம் அல்ல. படம் பார்த்து முடித்த நாளிலிருந்தே அனைவரையும் குறிப்பாக இளைய தலைமுறைகளைப் பார்க்கச் சொல்லி வருகிறேன். அதன் நீட்சியாகவே இப்பொழுது இந்தப் பதிவை இடுகிறேன். ஜோக்கரின் குரல் ஒரு சாமானியனுடையது. கையாளாகாத தன்மையின் உச்சத்தில் பிறக்கிறான் ஜோக்கர் ஜனாதிபதியாக. “ஓட்டுப்போட்டு பதவியில் அமர்த்த உரிமை இருக்கிறது. தவறு செய்தால் பதவியைவிட்டு நீக்க நமக்கு உரிமையில்லையா“ என்கிற கேள்வியில் பிறக்கிறான் ஜனாதிபதி. அநீதியைக் கண்டு எவனொருவன் ஆத்திரம் கொள்கிறானோ அவனும் என் தோழன் என்பது சே யின் பேச்சு. இக்கருவே விரிவடைந்து மன்னர் மன்னன் – பொன்னூஞ்சல் – இசை எனும் கதாப்பாத்திரங்களில் உயிர்ப்பெறுகின்றன. இந்தச் சமூகத்தின் மீது கோபம் கொள்ளுகின்ற நாமனைவரும் ஜனாதிபதியாக மாறித்தான் ஆக வேண்டும். இல்லையேல் இந்தச் சமூகம் நம்மை ஜோக்கராகத்தான் பார்க்கும். கழிப்பறையைப் பற...