புறம்போக்கு திரைவிமர்சனம் எஸ்.பி.ஜனநாதனின் அடுத்த கம்யூனிச படைப்புதான் புறம்போக்கு. இதற்கு முன். இயற்கை, ஈ, பேராண்மை என்று ஐந்நிலங்களை மையமிட்டு நகர்ந்த எஸ்.பி.ஜேயின் கதையம்சம் தற்போது நேரடியாக இந்திய அரசியலமைப்பைச் சற்று உரசிப்பார்த்துள்ளது. கம்யூனியச தோழர் பாலுவின் (ஆர்யா) தூக்குத்தண்டனையை மையமிட்டு நடத்துகின்ற பரபரப்பு மூமென்ட்தான் படம். இதனூடாக இந்திய அரசியல், போராளிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான கருத்து முரண்கள், சிறைவாசிகளின் நிராகரிக்கப்பட்ட உணர்வுகள், எமலிங்கத்தின் (விஜய் சேதுபதி) வழியாக மனித மென்மைகள், போராட்ட உணர்வுகள் என்று படம் முழுக்க பாடம் போதித்துச் செல்கிறார் இயக்குநர். உரிமைக்காகப் போராடிய பாலுவின் தூக்குத்தண்டனை நியாயமற்றது என்று அவரைத் தப்பிக்கச் செய்ய அவரது தோழர்கள் எடுக்கும் ஹைடெக் பிளான்களே (கிட்டத்தட்ட) திரைக்கதை. கம்யூனிச கொள்கைகளைப் பாலு மூலமாகவும் இந்திய அரசியல் சட்ட தர்க்கக் கேடுகளை மெக்காலே (சியாம்) மூலமாகவும் போராட்ட உணர்வுகளை குயிலி (கார்த்திகா) மூலமாகவும் சாமானியனின் உணர்வை எமலிங்கம் (விஜய் சேதுபதி)...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்