முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குளத்தங்கரைப் பிள்ளையார்

                  குளத்தங்கரைப் பிள்ளையார் பொங்கல் வைத்தாகிவிட்டது . கொண்டக்கடலையும் நன்றாக வெந்து விட்டது .. அதனதற்குரிய பாத்திரங்க ளில் பரிமாறி மூடி வைக்கப்பட்டுள்ளன . ஏம்ப்பா பாலு அந்த மஞ்சப்பைல சூடம் , சாம்புராணி , ஊதுபத்திலாம் இருக்கானு பாருப்பா . அப்புறம் அய்யரு வந்து கேக்குறப்போ அத காணோம் இத காணோம்னு சொல்லாம … எல்லாம் இருக்கு சித்தி . நீங்க போய் ஆக வேண்டிய காரியங்களப் பாருங்க .. என்னப்பா இந்த அய்யர இன்னும் கானோம் … என்று முணுமுணுத்துக்கொண்டே பச்சக் கலர் சேலையை இடுப்பில் நன்றாகச் சொருகிக் கொண்டு தாங்கித் தாங்கி நடந்தாள் அமுதவல்லி .. அந்தப் பிள்ளையார் பெயர் பாரத விநாயகர் .. ஒருமுறை பிள்ளையார் பால் குடிக்கிறதாகக் கேள்விப்பட்டுப் பாரத விநாயகருக்குச் சொம்பு சொம்பாகப் பால ஊத்துனது நான்தான் .. சும்மா சொல்லக் கூடாது பாரத விநாயகரும் சொம்பு சொம்பா குடிச்சது நல்லா ஞாபகம் இருக்கு .. ஆறுமுகம் அண்ணாதான் அட லூசுப்பயலுகலா சாமி பால் குடிக்கலடா கல்லு தாண்டா ...

இளங்கன்று

  இளங்கன்று அந்தக் கன்றுக்குட்டி நிச்சயமாக நடிக்கவில்லை வெறுந்தரையை உற்றுநோக்குகிறது.. சுரக்காத காம்பினை முட்டிக் கொள்கிறது பசுவின் சிறுநீரில் நனைந்து கொள்கிறது சானமிட்டதும் வெறித்துப் பார்க்கிறது வைக்கோலைத் தானும் சாப்பிடுவதுபோல் பாசாங்கு காட்டுகிறது துள்ளிக் குதித்துப் பிறகு திரும்பி விடுகிறது பசுக்கயிற்றை அவிழ்க்க வரும் கிழவியைக் கெட்ட வார்த்தை பேசவைக்கிறது பசுவுடன் நடந்து சென்று வெறித்துப்போய் வீடு வருகிறது வாய்க்கூடு போட்டாலும் நாய்ப்பீயை மோந்து பார்க்கிறது வாலை ஆட்டியாட்டிக் கிண்டல் புரிகிறது கழுவ வைத்திருந்த பாத்திரங்களை உருட்டிச் செல்கிறது நிச்சயமாக அது நடிக்கவில்லை திண்ணையில் உட்கார்ந்திருக்கும் எனக்கும் தொழுவத்தில் நின்றுகொண்டிருக்கும் பசுவிற்கும் ஏதோ சொல்ல ஆசைப்படுகிறது அதுவரை நாங்கள் அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம்..

சங்க ஏடு : தேன்சுவையை விட இனிது

சங்க ஏடு : தேன்சுவையை விட இனிது ஒரு நல்ல நாளில் தலைவனுடன் சென்று இல்லறத்தைச் சீரும் சிறப்புமாக நடத்திவிட்டு பிறிதொரு நாளில் மீண்டும் தனது பிறந்த வீட்டிற்குத் தலைவி வருகின்றாள். அப்பொழுது தலைவியின் தோழி “ஏன்டியம்மா நீ வாழ்க்கைப்பட்டுப் போன உன் தலைவனது ஊரில் குடிப்பதற்கு ஒரு நல்ல தண்ணீர் கூட இல்லையாமே?” என்று தலைவியை நோக்கிக் கேட்கின்றாள். அதற்குத் தலைவி யார் சொன்னது என்று மறு வினா எழுப்பித் தனது தலைவனின் ஊர்ப்பெருமையை எடுத்துரைக்கிறாள். எப்படி என்கிறீர்களா? கவிதை வடிவம் உயிரினும் மேலான தோழியே நான் கூறுவதைச் சற்று செவிமடுத்துக் கேட்பாயா..? ஆம் கொஞ்சம் விரும்பித்தான் கேளேன் தோழி..! என் தலைவனது நாட்டில்  வறுமை இருக்கிறதா என்றெல்லாம் தெரியாது ஆனால் தண்ணீர் வற்றிய ஒரு கிணற்றின் அடிப்பகுதியை ஒருநாள் கண்டேன் கிணற்றின் தாழ்வாரப் பகுதியில் தழைகள் உதிர்ந்து மூடப்பட்ட நிலையில் சிறிதளவு தண்ணீருடன் அந்தக் குழி காணப்பட்டது அந்தச் சிறிதளவு தண்ணீரையும் அங்கு அலைந்து திரிந்த மானானது உண்டு கலக்கிவிட்டுச் சென்றது.. அந்தக் கலங்கள் நீரை எடுத்து நான் ...

செத்தான் சிதம்பரம்

அய்யோ சாகுற வயசா இது..? உன் தைரியத்த இனி யாருக்கிட்ட பாக்கப்போறேனோ..? சண்டாளன் எமனுக்கு அப்படி என்ன அவசரம்..? பாசக்கயிற வேற யாருக்காவது வீசியிருக்கக் கூடாதா..? மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து தெருவைச் சுத்திசுத்தி வந்து பெருங்கூட்டத்தையே கூட்டிவிட்டாள் சவுந்தியம்மா.. இந்தா எலவு வீட்டுல போய் அழுவாம ஊருக்குள்ள வந்து ஏன் ஒப்பாரி வைக்கிற..? கரகரத்த குரலில் பெரியகருப்பன் சத்தம் போட்டதும் சவுந்தியம்மா வாயை முந்தானையால் பொத்திக்கொண்டு அய்யோ ஒப்பாரி வைக்கக் கூட ஒசரம் இல்லாம போய்ட்டேனா என் ராசா… என்று புலம்பியபடி எலவு வீட்டை நோக்கிப் பறந்தாள் சவுந்தி.. யாருப்பா இந்தக் கெழவி ஒப்பாரி வச்சு ஊரையே கூட்டிப்புட்டா..? செத்துப்போயிருக்காரே சிதம்பரம,; அவரோட.. அவரோட..? அட சொல்லுப்பா அவரோட அத்த மவ ப்பா.. ப்ப்பூ அத்த மவதானா..? ஏன் நீ என்னனு நெனச்ச..? இப்படி பேச்சு வளந்து கொண்டே போனத முருகையாவால் பொறுத்திருந்து கேக்க இ~;டமில்ல.. வேகமாக நடயக் கட்டி வீட்டுக்காரங்களுட்ட பணம் வாங்கப் புறப்பட்டான்.. பாடை கட்ட மூங்கில், பானைமுட்டி, பாடை மாலை, அலங்காரப் பொருட்கள், வானவெடி, சுடுகாட்டுப் பொருட்கள் ...

சங்க ஏடு : உயிரும் மகளும்

சங்க ஏடு : உயிரும்  மகளும்             ஆணும் பெண்ணும் பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் கொள்ளுதல் என்பது உலகெங்கிலும் நடக்கின்ற ஒன்று. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ்ப் பாரம்பரியத்தில் தொடர்ந்து வருகின்றது. ஆனால் அன்று ஒரு நாகரிகம் இருந்தது, இன்பமும் துயரமும் கலந்து இருந்தது. எப்படியென்று அகநானூறு என்னும் பழந்தமிழ் நூல் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.    பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் தலைவி (பெண்). தலைவனும் தலைவியும் சந்தித்து உரையாடுவதற்கு ஏற்ற இடமில்லை. காரணம் பல இடையூறுகள் இருந்து கொண்டே வருகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்து அடைத்தும் விடுகின்றனர். இவ்வளவும் கண்டு பொறுக்க முடியாத பெண் தனது அன்பாளனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள். கடுமையான காடு வழியாக இருவரும் ஓடிவிட்டனர் என்ற செய்தி கிடைக்கிறது. இதைக் கேட்ட தாயின் மனது எப்படித் தாங்கும்? புலம்புகிறாள், அழுகிறாள். தாய் புலம்பிக்கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்து வீட்டார்கள். அழாதே! அழாதே! என்ற...

நானே பைத்தியம்,

முழுமனதாய் ஒப்புக்கொள்கிறேன் நான் கண்டிப்பாகப் பைத்தியம் தான்.. எப்படி சிந்தித்தாலும் நான் பைத்தியம் என்பதைவிட்டு   என்னால் மீள முடியவில்லை.. நிச்சயம் கனவல்ல பைத்தியத்திற்கான சாத்தியக்கூறுகள் என் கண்முன்னே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.. நடைபாதையில் கழிப்பறையில் பேருந்து பயணத்தில் மொட்டை மாடியில் கல்லூரி வளாகத்தில் சந்தையில் தியேட்டரில் மருத்துவமனையில் தியானக் கூடத்தில் எனக்கான அடையாளங்களை தொலைத்துவிட்டு எப்படி எப்படியோ திரிந்து கொண்டிருக்கிறேன் நிச்சயம் இது நானல்ல நானாகிப் போன நான்.. அவனைப் போல் ஆக வேண்டும் என்கிற என்னை முதலில் கொல்ல வேண்டும்.. அப்படியே என்னைப் போல் உருவாக்கத் துடிக்கும் எண்ணத்தையும்..

கொடூர வாழ்க்கை

           கொடூர வாழ்க்கை  கால் தவறி விழுந்தேன்  அம்மா என்று அழைக்க விடாமல்  தடுக்கிறது  பாலாய்ப் போன இந்த அரசியல்...  அடிபட்டுக் கிடக்கிறான்   உதவ முடியாமல் செய்கிறது  வெக்கங்கெட்ட இந்த சட்டம்...  கை இல்லாமல்  கை ஏந்துகிறான் காணாமல்  போகச்  சொல்கிறது  பொருளாதார நெருக்கடி... தெரியாமல் கை பட்டதற்கு  கேவலமாக திட்டுகிறான்  எதற்கு பிரச்சனை போ  என்கிறது மனசு... என்ன செய்வது? இதுபோல் கண்டும் காணாமலும்  சென்றால் தான்  குடும்பம் குடும்பமாக இருக்கிறது..!

சாயம் போன வீடு

சாயம் போன வீடு அ ந்த மஞ்சள் கலர் வீடு சாம்பல் நிறமாகச் சாயம்போயிருந்தது வெயிலுக்கு மனிதர்கள் கறுத்துப் போவார்களே அதைப்போல.. கரகரத்தக் குரலில் புறாக்கள் முணங்கிக்கொண்டிருந்தன.. வீட்டைச் சுற்றிலும் காய்ந்து கறுகிப்போன செடிகள்.. மொட்டைமாடியில் இடுப்பொடிந்த ஆண்டனா ஒன்று.. நூற்றுக்கணக்கான வௌவால்கள் எதனையோ கேட்டபடித் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தன.. தேனீக்கள் இல்லாத வெறும் தேன்கூடு மட்டும் வீட்டின் நிலைக்கதவு ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது.. வேறு எங்கோ புலம்பெயர்ந்துவிட்டன இந்த வீட்டு ஆட்களைப் போல தேனீக்களும்.. நிச்சயமாக வீட்டில் யாருமே இல்லை.. அதற்காக அது பேய்வீடும் இல்லை.. ஒரேயொரு பிச்சசைக்காரன் தினசரி தனது வசூலைச் சரிபார்த்துச் செல்கின்றான்.. அன்பு இல்லம் என்பது அவ்வீட்டின் பெயர்.. ஏழு குடும்பம் ஒன்றாக வாழ்ந்த சந்தோச வீடாம் இது என் அபத்தா சொல்லக் கேள்வி... என் வீட்டின் எதிர்ப்புறமாக அந்த வீடு இன்னும் சாயம் போய்க்கொண்டேயிருக்கிறது.. பெருமூச்செறிந்து கடந்துகொண்டிருக்கிறேன் வீடுகள் சாயம் போவது  விருப்பு வெறுப்புகளைச் சகிக்க முடியாத இருப்பின் கழிவுக்காட்சி..!