சங்க ஏடு : உயிரும் மகளும் ஆணும் பெண்ணும் பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் கொள்ளுதல் என்பது உலகெங்கிலும் நடக்கின்ற ஒன்று. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ்ப் பாரம்பரியத்தில் தொடர்ந்து வருகின்றது. ஆனால் அன்று ஒரு நாகரிகம் இருந்தது, இன்பமும் துயரமும் கலந்து இருந்தது. எப்படியென்று அகநானூறு என்னும் பழந்தமிழ் நூல் எடுத்தியம்புவதைப் பாருங்கள். பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் தலைவி (பெண்). தலைவனும் தலைவியும் சந்தித்து உரையாடுவதற்கு ஏற்ற இடமில்லை. காரணம் பல இடையூறுகள் இருந்து கொண்டே வருகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்து அடைத்தும் விடுகின்றனர். இவ்வளவும் கண்டு பொறுக்க முடியாத பெண் தனது அன்பாளனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள். கடுமையான காடு வழியாக இருவரும் ஓடிவிட்டனர் என்ற செய்தி கிடைக்கிறது. இதைக் கேட்ட தாயின் மனது எப்படித் தாங்கும்? புலம்புகிறாள், அழுகிறாள். தாய் புலம்பிக்கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்து வீட்டார்கள். அழாதே! அழாதே! என்ற...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்