முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பனையோலை - 3 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள்

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள் ஒருநாள் பொழுதில் கபிலரும் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்பொழுது மன்னன் கபிலரின் கையைப் பற்றிக்கொண்டு “புலவரே உமது கை மிகவும் மென்மையாக உள்ளதே” என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதுகேட்ட கபிலருக்குச் சொல்லவா வேண்டும் உதித்துவிட்டது பாடல்.   புதுக்கவிதை வடிவம் கணைய மரங்களின் காலுறிக்கும் வலிமை முதல் வேலையே எதிர்ப்போரை உதிர்த்தல்தான் இப்படிக் கடுங்கோபம் கொண்ட சிறுகண்ணுடைய யானையை வேலைப்பாடு பொருந்திய அங்குசம் கொண்டு அதன் அருகில் சென்று மதத்தை அடக்கி வீரத்தைக் காட்டி நிற்கின்ற கைகள் அது.. பாதாளக் கிணற்றைக் கவனமாய்க் கடப்பதற்கு குதிரையின் பிடிவாரை சுண்டி இழுக்கின்ற கைகள் அது.. நயமிக்க தேரில் நின்றுகொண்டு எதிரிகளை அன்பால் முடியாது என்று அம்பால் வீழ்த்த வில்லினை இழுத்து விடுகின்ற கைகள் அது.. இத்தனை வேலைகளைச் செய்யும் உன் கைகள் பஞ்சுபோல் இருக்க வாய்ப்பில்லை அதுதான் இறுகிப்போய் உள்ளன.. நாங்கள் அவ்வாறில்லை.. காய்களையும் கறிகளையும் உண்டு உடல் வருத்தி வேலை செய்ய...