முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பக்கோட்டி

பக்கோட்டி “மஞ்சுவிரட்டும் மாட்டுவண்டிப்பந்தயமும் நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இத்தடை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது” என்ற செய்தியறிக்கையைக் கேட்டுவிட்டுப் பலருக்கு பதபதைப்பு ஏற்பட்டது உண்மைதான். அதில் பெரும்பாலானோர் மஞ்சுவிரட்டிற்குத் தடை என்பதை எதிர்த்துப் போராடவும் தொடங்கிவிட்டனர்.  தங்கவேலு எந்த ஊரில் தட்டுவண்டிப் பந்தயம் நடந்தாலும் நடந்தே போய்ச்சேந்துடுவான். கைக்குத் துணையா அவன் மச்சினன் முருகரத்தினமும் கூடவே திரிவான். ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து குடிக்கிறதும் ஊர்நாயம் பேசுறதும் முக்கியமான இடங்கள்ல முக்கியமான ஆள்மாதிரி காட்டிக்கிறதும் இவனுகளுக்குக் கைவந்த கலை. இவய்ங்க நடந்து போன பிறகு பின்னாடி நின்னு புரணி பேசுற ஆள்தான் நிறைய பேர். நேருக்கு நேராக யாரும் பேசுறதில்ல. பேசுனா அன்னைக்கு முழுசும் இவய்ங்க அலப்பறதான். ஊரக்கூட்டி ரெண்டாக்கிப்புடுவாய்ங்க.. அரண்மனைப்பட்டி மாகாணத்தில் தட்டுவண்டிப்பந்தயம் காலங்காலமாக நடத்தி வருகின்ற கோயில் நிகழ்ச்சி. அதிலும் அரிச்சானூர் பந்தயம் என்றால் சிறுசு பெருசு அத்தனையும் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு காலையிலேயே கெளம்பிவிடும். ...

பழைய பேருந்து நிலையம்

           பழைய பேருந்து நிலையம் பலாப்பலோய் .. பலாப்பலோய் .. பாக்கெட்டு பத்துருவா .. தேன்சொலை தேன்சொலை இப்படி அந்த வியாபாரி கத்துனது பல பேருக்கு எரிச்சல உண்டாக்கி இருக்கனும் . யார்ரா இவன் காதுக்குள்ள வந்து கத்திக்கிட்டு ? னு தூக்கத்துல திட்டிக்கிட்டே மறுபடியும் ஒரு பெரியவர் தூங்குனத என்னைத் தவிர அநேகம் யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை .   காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வர அதிகபட்சம் இரண்டரை மணிநேரம் என்பது பழக்கப்பட்ட பயணிகளுக்குத் தெரியும் . என்னமோ தெரியல அந்த டிரைவர் இழு இழுனு 3 மணி நேரத்திற்கு இழுத்துட்டார் .. திருச்சிக்கு வருவதென்றால் பெரும்பாலும் சென்னை போகிற பேருந்து நின்றால் நடத்துனர் அனுமதியோடு ஏறிவிடுவேன் . விழாக் காலங்களில் ஏறுவது சிரமம் . அப்பொழுது ஒன் டு ஒன் பேருந்து நின்றால் ஏறுவது வழக்கம் . இந்த மாதிரியான பழக்கத்திற்குக் காரணம் காரைக்குடி – திருச்சி வழிப்பாதையில் ஏராளமான நிறுத்தங்களும் , கூட்ட நெரிசலும் தான் . எது எப்படியோ சாதாரண பேருந்திலோ எக்ஸ்...