சங்க ஏடு : தேன்சுவையை விட இனிது ஒரு நல்ல நாளில் தலைவனுடன் சென்று இல்லறத்தைச் சீரும் சிறப்புமாக நடத்திவிட்டு பிறிதொரு நாளில் மீண்டும் தனது பிறந்த வீட்டிற்குத் தலைவி வருகின்றாள். அப்பொழுது தலைவியின் தோழி “ஏன்டியம்மா நீ வாழ்க்கைப்பட்டுப் போன உன் தலைவனது ஊரில் குடிப்பதற்கு ஒரு நல்ல தண்ணீர் கூட இல்லையாமே?” என்று தலைவியை நோக்கிக் கேட்கின்றாள். அதற்குத் தலைவி யார் சொன்னது என்று மறு வினா எழுப்பித் தனது தலைவனின் ஊர்ப்பெருமையை எடுத்துரைக்கிறாள். எப்படி என்கிறீர்களா? கவிதை வடிவம் உயிரினும் மேலான தோழியே நான் கூறுவதைச் சற்று செவிமடுத்துக் கேட்பாயா..? ஆம் கொஞ்சம் விரும்பித்தான் கேளேன் தோழி..! என் தலைவனது நாட்டில் வறுமை இருக்கிறதா என்றெல்லாம் தெரியாது ஆனால் தண்ணீர் வற்றிய ஒரு கிணற்றின் அடிப்பகுதியை ஒருநாள் கண்டேன் கிணற்றின் தாழ்வாரப் பகுதியில் தழைகள் உதிர்ந்து மூடப்பட்ட நிலையில் சிறிதளவு தண்ணீருடன் அந்தக் குழி காணப்பட்டது அந்தச் சிறிதளவு தண்ணீரையும் அங்கு அலைந்து திரிந்த மானானது உண்டு கலக்கிவிட்டுச் சென்றது.. அந்தக் கலங்கள் நீரை எடுத்து நான் ...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்