முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மௌனம் சரணம் - அதிஷா

  உலகிலிருந்து தற்காலிக விடுவிப்பு மௌனம் சரணம் - அதிஷா      மனித ஓட்டத்தின் நடுவே சிறு இளைப்பாறல் தேவைப்படுகிறது. அயர்ச்சிகள் மனிதனை ஆற்றாமை இருளுக்குள் தள்ளிவிடுகின்றன. யாருமற்ற வெட்டவெளிகளைத் தேடி ஓடுகிறான். மலையில் நடக்க வேண்டும், பைக்கை எடுத்துக்கொண்டு நெடும்பயணம் செல்ல வேண்டும். leave me alone என்று ஒருமுறையேனும் சொல்லிவிடத் தோன்றுகிறது. கல்விச்சுமை, பணிச்சுமை, குடும்பச்சுமை, உடற்சுமை, மனச்சுமை என்று மனிதன் பிறந்ததிலிருந்து எண்ணற்ற சுமைகளைக் கூடவே வைத்திருக்கிறான். இவற்றைச் சற்று இறக்கிவைக்க வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் இந்த ஓட்டம்? சரியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோமா? இறுதியாக எங்கு, எப்படி நிற்போம்? முதலான கேள்விகளைக் கேட்க சிறு நிழல்  தேவைப்படுகிறது. அந்த நிழல் அரவமற்றதாகவும் அடர்த்தியான அமைதிகொண்டதாகவும் இருந்தால் மனது நெருக்கமாகத் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு தன்னைச் சார்ந்தவைகளையும் சுற்றி வரத் தொடங்குகிறது. சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்பும் ஒருவர் செய்ய வேண்டியதுதான் இந்த விபாசனா. விபாசனா தியான முறையைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ...
சமீபத்திய இடுகைகள்

கவிதை

மனோன்மணியம்- தமிழ்த் தெய்வ வணக்கம் பெ.சுந்தரனார்

                                                        தமிழ்த் தெய்வ வணக்கம்                                              மனோன்மணியம் - பெ.சுந்தரனார் 1) நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே  விளக்கம்        நீர் நிறைந்த கடல் எனும் ஆடையை உடுத்திய நிலம் எனும் பெண்ணுக்கு, அழகு ஒழுகக்கூடிய சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கின்ற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்த...

ஆன்டி இண்டியன் - விமர்சனம்

ஆன்டி இண்டியன் படத்தின் துவக்கத்திலிருந்தே மாறுபட்ட உத்திகளைக் (யதார்த்தம் எனும் உத்தி) கையாண்டிருக்கிறார் இயக்குநர் புளூ சட்டை C.இளமாறன். சின்ன சின்ன வார்த்தைகளுக்காகவும் பின்புறப் படங்களுக்காகவும் பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்ற இன்றைய சூழலில் இது மாதிரியான படம் வெளிவந்திருப்பது அதிர்ச்சி மிகுந்த வரவேற்புதான். ஆம், அந்த அளவிற்கு மதம் பேசப்பட்டிருக்கிறது. மதங்களின் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதத்திற்குள்ளான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. நிச்சயம் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இது இருக்கும். ஏனென்றால் இந்தப் படம் பேசிய துணிச்சலான வசனங்களை வேறு படங்கள் பேசவில்லை என்பதுதான் இதற்கான காரணம். தொழில்நுட்பம், இசை, ஒளிப்பதிவு என்று பல கோளாறுகள் இருப்பதாக அறிவு நிபுணர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பிற்கு இவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.  இந்தச் சமூகத்திற்குச் சொல்ல நினைத்தவொன்றைச் சமரசம் இல்லாமல் தனது மனத்திற்குப் பிடித்தபடி சொல்லியிருக்கிறோமா? என்பதுதான் பிரதானம்.    இந்தப் படத்...

சிலப்பதிகாரம் மனையறம்படுத்தகாதை இரண்டு மதிப்பெண் வினாக்கள்

மனையறம்படுத்த காதை சிலப்பதிகாரம்

செங்கழனிக் கோழி

ஆசையாய் வளர்த்த பெட்டைக்கோழி திடீர் விருந்தால் மயிர்பறித்து மசாலாவானது வாசனை மூக்கைத் துளைத்தாலும் கொதிப்புச் சததம் நெஞ்சை வெடிக்கச் செய்தது சோற்றில் கிடந்த ஈரல் இதயத்தைக் கனக்கச் செய்தது தட்டின் ஓரத்தில் கிடந்த கழுத்துப்பகுதி எனது குரல்வளையை நெருக்கியது சதைக்கறி அத்தனையும் எனது தசைநார்களைக் கிழித்துக் கொண்டிருந்தன வந்த விருந்தினன் கைகழுவி வாய்துடைத்தார் நான் இன்னும் சோற்றின் இடுக்குகளில் என் கோழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்திற்குப் பின்னர் நான் எழுதுகின்ற விமர்சனம் அல்லது ஒரு படைப்பு மீதான   மதிப்பீடுதான் இந்தப் பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். பருத்திவீரன் படத்திற்குப் பிறகு தமிழ்ச் சினிமா ஒரு மாற்றுச் சிந்தனையை இடைக்கொண்டு பயணித்து வந்திருப்பதைப் பலரும் அறியவியலும். சுப்பிரமணியபுரம், மைனா, கழுகு, நெடுஞ்சாலை, ஆரண்யகாண்டம், மதுபானக்கடை, தென்மேற்குப் பருவக்காற்று, வெண்ணிலா கபடிக் குழு, தங்கமீன்கள், ரேனிகுண்டா, பரதேசி, மூடர்கூடம், குக்கூ, ஜோக்கர், அட்டகத்தி, பீட்சா, டிமான்டி காலனி, மெட்ராஸ், அருவி, மேற்குத் தொடர்ச்சி மலை என்று அடுக்கிச் செல்லும் அளவிற்கு ஒரு மாற்றுச் சிந்தனையைத் தமிழ்ச் சினிமா தன்னுள் தகவமைத்துக் கொண்டு வந்துள்ளது. “பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். மேல ஒரு கோடு” விடுபட்டுப் போன கதைக்களத்தின் மிச்ச சொச்சம். ஆம் இது சாதிவெறி பிடித்தோரைத் தோலுரிக்கின்ற கதை. திருாநல்வேலி பகுதியைக் கதைக்களமாகக் கொண்ட இக்கதையின் டைட்டில் கார்டு இருட்டிலிருந்து வெளிச்சம், வெளிச்சத்திலிருந்து இருள் என்கிற முறையில் அமைத்துக்கொண்டு வறட...

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்லூரியில் நிகழ்த்தப்பெற்ற பேராசிரியரின் நூல்கள் முன்னெடுக்கும் ஆய்வு முறையியல் பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் கட்டுரை அளிக்க  வாய்ப்பமைந்தது. வாழ்க்கையில் உண்டான வரலாற்றுத் தருணம்.         நன்றி பேரா சு.தமிழ்வேலு, பேரா.இரா.அறவேந்தன், பேரா.சிலம்பு நா.செல்வராசு)  கட்டுரை கீழ்வருமாறு     தமிழியல் ஆய்வு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்தேறியுள்ளன. அவை காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அமைந்தவை. அவ்வகையில் இக்காலத் தமிழியல் ஆய்வு வரலாற்றில் தவிர்க்கவியலா ஆளுமையாகத் திகழ்பவர் சிலம்பு நா.செல்வராசு. இவரது ஆய்வுப் போக்குகள் தனித்தன்மை வாய்ந்தவை. அத்தகைய தன்மைகள் வழியாகத் தமிழியல் ஆய்வு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதும் அடுத்தத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய ஆய்வியல் சிந்தனைகளை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். 1.தமிழாய்வுத்தடம் 1887 ஆம் ஆண்டு சி.வை.தா.வ...