முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எட்டயபுரம் முண்டாசுக்காரன்

பாரதியின் வாசனை பரவும் எட்டயபுரம். பாதை நெடுகிலும் பாரதியின் பிம்பங்கள். வழி நெடுகிலும் பாரதி இழுத்துவிட்ட மூச்சுக்காற்று. துண்டைக் கண்டாலே முண்டாசு ஞாபகம்.    பாரதி பிறந்த இடம் என்று குறிக்கப்பட்டு பாரதியின் அரையுருவச் சிலையை வீட்டின் முகப்பில் நிறுவியுள்ளனர். அருகில் பழங்காலத்தைய சிறு கதவு ஒன்று இருக்கிறதே தெரிகிறதா..? எட்டயபுர பேருந்து நிலையத்தைக் கடந்து சிறிது தூரம் வந்தால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வருகின்ற பாரதி ஆவணக்காப்பகத்தைக் காணலாம் பாரதி ஆவணக்காப்பகத்தின் இடது புறமாக பாரதிக்காக கட்டப்பட்ட மணிமண்டபம் கம்பீரமாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. பாரதியின் அரிய நிழற்படம்.பாரதியின் தீவிரக் காதலன் தொ.மு.சி.ரகுநாதரின் அறக்கட்டளையும் இங்கு தான் இயங்கி வருகின்றது. அது குறித்துப் பிறிதொரு சூழலில் காணலாம்.

இந்துமதாபிமான சங்கம் - காரைக்குடி

காரைக்குடி ஹிந்துமதாபிமான சங்கம் மகாகவி பாரதியார் 1919 ஆம் ஆண்டு காரைக்குடிக்கு வந்திருந்து தங்கி  உரையாற்றிய இடம் காரைக்குடி நகரத்தார் சிவன் கோயிலுக்குப் பின்புறம் இவ்வழகான கட்டிடம் அமைந்திருக்கிறது. நிர்வாகி, பொறுப்பாளர், பணியாளர் என்கிற முறையில் சங்கக் கட்டிடம் பாதுகாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது. இன்றும் பழைமை மாறாமல் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். அதிகமான வாசகர்களைக் கொண்டு இயங்கி வந்த இக்கட்டிடத்தில் மிகச் சொர்ப்பமான வாசகர்களே வந்து செல்கின்றனர். அதுவும் தினசரி நாளிதழ்கள் என்றளவில் உள்ளது. இதன் மேல்தளத்தில் காந்தியடிகள் உட்பட மிக முக்கியமானவர்களின் அரிய புகைப்படங்கள் உள்ளன. ஹிந்துமதாபிமான சங்கத்தின் செயல்பாடு குறித்துப் பாரதி பாடியுள்ள பாடலின் கல்வெட்டுப் பிரதி இவைமட்டுமல்லாது  மிக மிக அரிய நூல்கள் பலவற்றை இச்சங்கத்தார் இன்றளவில் பராமரித்து வருகின்றனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பெற்ற செநதமிழ் இதழ்கள் பெரும்பான்மையாக இங்குக் கிடைக்கின்றன.