முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உரையாசிரியர்களின் எடுத்தாளுகையில் தொல்காப்பியம் - ஐங்குறுநூறு

                                                                                      இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளில் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் எடுத்தாளப்பெற்றுள்ள முறையியலை விளக்குவது இவ்ஆய்வுரையின் நோக்கமாகும். அகத்திணையியல்-ஐங்குறுநூறு    தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்; ஐங்குநுறூற்றுப் பாடல்களைப் பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை இனங்கண்டு விளக்குவது ஆய்வின் மிக முக்கிய நோக்கமாகும். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பாடல்களைச் சான்று காட்டுவதுடன் மட்டுமல்லாது பாடல்களுக்கான சிறுசிறு விளக்கங்களையும் அளித்துச் சென்றுள்ளனர். இம்முயற்சி ஐங்குறுநூற்று உரைமரபில் மிக முக்கியமானதாகும். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இளம்பூரணர் 78 இடங்களிலும் நச்சினார்;க்கினியர் 178 இடங்களிலும் ஐங்குறுநூற்றுப் பாடல்களை எடுத்தாண்டுள்ளனர். அகத்...

தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்

    தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள்  செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்               - முனைவர் ம.லோகேஸ்வரன்       கொங்குதேர் வாழ்க்கையுடைய அஞ்சிறைத்தும்பியைக் காமம் செப்பாமல் கண்டதைச் சொன்னதிலிருந்து தமிழாய்வு தொடங்கிவிட்டது என்பர். அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் ஒரு தமிழ்ப்படைப்பு வெளியிடப்பெற்றுச் சான்றோர் பலரின் முன்னிலையில் விவாதங்களுக்கு உட்பட்டு கருத்தறிந்து மேற்கொள்ளப்பெற்றுள்ளது. இதற்குத் தொல்காப்பியம் முதலான பண்டை இலக்கியங்கள் தக்கச் சான்றுகளாகும். சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம், உரைச்சிறப்புப் பாயிரம் என்ற வகைப்பாடுகளெல்லாம் பனுவல் மீதான  ◌ாவசிப்பு மரபினை வெளிப்படுத்துகின்றன. வகை தொகைப்படுத்துதல், துறைக்குறிப்பு, கூற்றுக்குறிப்பு, உரையாக்கம் என்கிற வகைப்பாடுகளும் வாசிப்புப் பின்னணியில் நேர்ந்தவைகளேயாகும். ஆகவே ஒரு பனுவலை வாசித்தல் என்கிற பாரம்பரிய முறைமை ககாலத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. அஃது இன்றளவில் வாசிப்பு, ஆய்வு என்கிற இருநிலைகளில் வெவ்வேறு பொருள்பட நிற்கின...

எட்டயபுரம் முண்டாசுக்காரன்

பாரதியின் வாசனை பரவும் எட்டயபுரம். பாதை நெடுகிலும் பாரதியின் பிம்பங்கள். வழி நெடுகிலும் பாரதி இழுத்துவிட்ட மூச்சுக்காற்று. துண்டைக் கண்டாலே முண்டாசு ஞாபகம்.    பாரதி பிறந்த இடம் என்று குறிக்கப்பட்டு பாரதியின் அரையுருவச் சிலையை வீட்டின் முகப்பில் நிறுவியுள்ளனர். அருகில் பழங்காலத்தைய சிறு கதவு ஒன்று இருக்கிறதே தெரிகிறதா..? எட்டயபுர பேருந்து நிலையத்தைக் கடந்து சிறிது தூரம் வந்தால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வருகின்ற பாரதி ஆவணக்காப்பகத்தைக் காணலாம் பாரதி ஆவணக்காப்பகத்தின் இடது புறமாக பாரதிக்காக கட்டப்பட்ட மணிமண்டபம் கம்பீரமாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. பாரதியின் அரிய நிழற்படம்.பாரதியின் தீவிரக் காதலன் தொ.மு.சி.ரகுநாதரின் அறக்கட்டளையும் இங்கு தான் இயங்கி வருகின்றது. அது குறித்துப் பிறிதொரு சூழலில் காணலாம்.

இந்துமதாபிமான சங்கம் - காரைக்குடி

காரைக்குடி ஹிந்துமதாபிமான சங்கம் மகாகவி பாரதியார் 1919 ஆம் ஆண்டு காரைக்குடிக்கு வந்திருந்து தங்கி  உரையாற்றிய இடம் காரைக்குடி நகரத்தார் சிவன் கோயிலுக்குப் பின்புறம் இவ்வழகான கட்டிடம் அமைந்திருக்கிறது. நிர்வாகி, பொறுப்பாளர், பணியாளர் என்கிற முறையில் சங்கக் கட்டிடம் பாதுகாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது. இன்றும் பழைமை மாறாமல் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். அதிகமான வாசகர்களைக் கொண்டு இயங்கி வந்த இக்கட்டிடத்தில் மிகச் சொர்ப்பமான வாசகர்களே வந்து செல்கின்றனர். அதுவும் தினசரி நாளிதழ்கள் என்றளவில் உள்ளது. இதன் மேல்தளத்தில் காந்தியடிகள் உட்பட மிக முக்கியமானவர்களின் அரிய புகைப்படங்கள் உள்ளன. ஹிந்துமதாபிமான சங்கத்தின் செயல்பாடு குறித்துப் பாரதி பாடியுள்ள பாடலின் கல்வெட்டுப் பிரதி இவைமட்டுமல்லாது  மிக மிக அரிய நூல்கள் பலவற்றை இச்சங்கத்தார் இன்றளவில் பராமரித்து வருகின்றனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பெற்ற செநதமிழ் இதழ்கள் பெரும்பான்மையாக இங்குக் கிடைக்கின்றன.

புறம்போக்கு - 2015

    புறம்போக்கு திரைவிமர்சனம்     எஸ்.பி.ஜனநாதனின் அடுத்த கம்யூனிச படைப்புதான் புறம்போக்கு. இதற்கு முன். இயற்கை,  ஈ, பேராண்மை என்று ஐந்நிலங்களை மையமிட்டு நகர்ந்த எஸ்.பி.ஜேயின் கதையம்சம் தற்போது நேரடியாக இந்திய அரசியலமைப்பைச் சற்று உரசிப்பார்த்துள்ளது. கம்யூனியச தோழர் பாலுவின் (ஆர்யா) தூக்குத்தண்டனையை மையமிட்டு நடத்துகின்ற பரபரப்பு மூமென்ட்தான் படம். இதனூடாக இந்திய அரசியல், போராளிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான கருத்து முரண்கள், சிறைவாசிகளின் நிராகரிக்கப்பட்ட உணர்வுகள், எமலிங்கத்தின் (விஜய் சேதுபதி) வழியாக மனித மென்மைகள், போராட்ட உணர்வுகள் என்று படம் முழுக்க பாடம் போதித்துச் செல்கிறார் இயக்குநர். உரிமைக்காகப் போராடிய பாலுவின் தூக்குத்தண்டனை நியாயமற்றது என்று அவரைத் தப்பிக்கச் செய்ய அவரது தோழர்கள் எடுக்கும் ஹைடெக் பிளான்களே (கிட்டத்தட்ட) திரைக்கதை. கம்யூனிச கொள்கைகளைப் பாலு மூலமாகவும் இந்திய அரசியல் சட்ட தர்க்கக் கேடுகளை மெக்காலே (சியாம்) மூலமாகவும் போராட்ட உணர்வுகளை குயிலி (கார்த்திகா) மூலமாகவும் சாமானியனின் உணர்வை எமலிங்கம் (விஜய் சேதுபதி)...

நீர்நிலை உருவாக்கப் பின்னணி

நீர்நிலை உருவாக்கப் பின்னணி      சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துக் கிராமங்கள் பற்றிய அடைவு முயற்சிதான் இந்நூல். அதாவது கல்லல் ஒன்றியம் பழைமையை நினைவுபடுத்துகின்ற வகையில் ஏராளமான ஊர்ப்பெயர்களையும் நீர்நிலைப் பெயர்களையும் கொண்டு விளங்குகிறது. ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வுகள் ஏராளமாக வந்துகொண்டிருக்கிற சூழலில் ஊர்களில் மிக முக்கியமானதாகப் போற்றப்படுகின்ற குளம், ஊரணி, கம்மாய், குட்டை, குண்டு,தம்மம் என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வது தேவையாகின்றது. அவ்வகையில்  இந்நூல் குளப்பெயர்கள் குறித்த காரண காரியங்களை இயன்றளவில் ஆராய்கிறது வெளியீடு : காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை.