முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்துமதாபிமான சங்கம் - காரைக்குடி

காரைக்குடி ஹிந்துமதாபிமான சங்கம்

மகாகவி பாரதியார் 1919 ஆம் ஆண்டு காரைக்குடிக்கு வந்திருந்து தங்கி
 உரையாற்றிய இடம்



காரைக்குடி நகரத்தார் சிவன் கோயிலுக்குப் பின்புறம் இவ்வழகான கட்டிடம் அமைந்திருக்கிறது.



நிர்வாகி, பொறுப்பாளர், பணியாளர் என்கிற முறையில் சங்கக் கட்டிடம் பாதுகாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது.



இன்றும் பழைமை மாறாமல் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். அதிகமான வாசகர்களைக் கொண்டு இயங்கி வந்த இக்கட்டிடத்தில் மிகச் சொர்ப்பமான வாசகர்களே வந்து செல்கின்றனர். அதுவும் தினசரி நாளிதழ்கள் என்றளவில் உள்ளது.

இதன் மேல்தளத்தில் காந்தியடிகள் உட்பட மிக முக்கியமானவர்களின் அரிய புகைப்படங்கள் உள்ளன.


ஹிந்துமதாபிமான சங்கத்தின் செயல்பாடு குறித்துப் பாரதி பாடியுள்ள பாடலின் கல்வெட்டுப் பிரதி
இவைமட்டுமல்லாது  மிக மிக அரிய நூல்கள் பலவற்றை இச்சங்கத்தார் இன்றளவில் பராமரித்து வருகின்றனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பெற்ற செநதமிழ் இதழ்கள் பெரும்பான்மையாக இங்குக் கிடைக்கின்றன.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழமொழி ஐந்நூறு

                                             பழமொழி 500 அனைவருக்கும்  தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து உதவியவர். ஏ.மேனகா, கணினி-வணிகவியல் துறை மாணவி, கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவி, திருச்செங்கோடு. 1)அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் 2)அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் 3)அடியாத மாடு படியாது 4)அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் 5 )அத்திப் பூத்தாற் போல் 6)அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா? 7)அரசனை நம்பி புருஷனைக் கைவிடலாமா? 8)அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் 9)அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் 10)அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும் 11)அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 12)அறிவே சிறந்த ஆற்றல் 13)அனுபவமே சிறந்த  ஆசான் 14)அன்பே கடவுள் 15)ஆசைக்கு அளவில்லை 16)ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம் 17)ஆணுக்கு ஒரு நீதி.. பெண்...

தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்

    தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள்  செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்               - முனைவர் ம.லோகேஸ்வரன்       கொங்குதேர் வாழ்க்கையுடைய அஞ்சிறைத்தும்பியைக் காமம் செப்பாமல் கண்டதைச் சொன்னதிலிருந்து தமிழாய்வு தொடங்கிவிட்டது என்பர். அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் ஒரு தமிழ்ப்படைப்பு வெளியிடப்பெற்றுச் சான்றோர் பலரின் முன்னிலையில் விவாதங்களுக்கு உட்பட்டு கருத்தறிந்து மேற்கொள்ளப்பெற்றுள்ளது. இதற்குத் தொல்காப்பியம் முதலான பண்டை இலக்கியங்கள் தக்கச் சான்றுகளாகும். சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம், உரைச்சிறப்புப் பாயிரம் என்ற வகைப்பாடுகளெல்லாம் பனுவல் மீதான  ◌ாவசிப்பு மரபினை வெளிப்படுத்துகின்றன. வகை தொகைப்படுத்துதல், துறைக்குறிப்பு, கூற்றுக்குறிப்பு, உரையாக்கம் என்கிற வகைப்பாடுகளும் வாசிப்புப் பின்னணியில் நேர்ந்தவைகளேயாகும். ஆகவே ஒரு பனுவலை வாசித்தல் என்கிற பாரம்பரிய முறைமை ககாலத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. அஃது இன்றளவில் வாசிப்பு, ஆய்வு என்கிற இருநிலைகளில் வெவ்வேறு பொருள்பட நிற்கின...

செத்தான் சிதம்பரம்

அய்யோ சாகுற வயசா இது..? உன் தைரியத்த இனி யாருக்கிட்ட பாக்கப்போறேனோ..? சண்டாளன் எமனுக்கு அப்படி என்ன அவசரம்..? பாசக்கயிற வேற யாருக்காவது வீசியிருக்கக் கூடாதா..? மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து தெருவைச் சுத்திசுத்தி வந்து பெருங்கூட்டத்தையே கூட்டிவிட்டாள் சவுந்தியம்மா.. இந்தா எலவு வீட்டுல போய் அழுவாம ஊருக்குள்ள வந்து ஏன் ஒப்பாரி வைக்கிற..? கரகரத்த குரலில் பெரியகருப்பன் சத்தம் போட்டதும் சவுந்தியம்மா வாயை முந்தானையால் பொத்திக்கொண்டு அய்யோ ஒப்பாரி வைக்கக் கூட ஒசரம் இல்லாம போய்ட்டேனா என் ராசா… என்று புலம்பியபடி எலவு வீட்டை நோக்கிப் பறந்தாள் சவுந்தி.. யாருப்பா இந்தக் கெழவி ஒப்பாரி வச்சு ஊரையே கூட்டிப்புட்டா..? செத்துப்போயிருக்காரே சிதம்பரம,; அவரோட.. அவரோட..? அட சொல்லுப்பா அவரோட அத்த மவ ப்பா.. ப்ப்பூ அத்த மவதானா..? ஏன் நீ என்னனு நெனச்ச..? இப்படி பேச்சு வளந்து கொண்டே போனத முருகையாவால் பொறுத்திருந்து கேக்க இ~;டமில்ல.. வேகமாக நடயக் கட்டி வீட்டுக்காரங்களுட்ட பணம் வாங்கப் புறப்பட்டான்.. பாடை கட்ட மூங்கில், பானைமுட்டி, பாடை மாலை, அலங்காரப் பொருட்கள், வானவெடி, சுடுகாட்டுப் பொருட்கள் ...