முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மௌனம் சரணம் - அதிஷா

 

உலகிலிருந்து தற்காலிக விடுவிப்பு

மௌனம் சரணம் - அதிஷா

    மனித ஓட்டத்தின் நடுவே சிறு இளைப்பாறல் தேவைப்படுகிறது. அயர்ச்சிகள் மனிதனை ஆற்றாமை இருளுக்குள் தள்ளிவிடுகின்றன. யாருமற்ற வெட்டவெளிகளைத் தேடி ஓடுகிறான். மலையில் நடக்க வேண்டும், பைக்கை எடுத்துக்கொண்டு நெடும்பயணம் செல்ல வேண்டும். leave me alone என்று ஒருமுறையேனும் சொல்லிவிடத் தோன்றுகிறது. கல்விச்சுமை, பணிச்சுமை, குடும்பச்சுமை, உடற்சுமை, மனச்சுமை என்று மனிதன் பிறந்ததிலிருந்து எண்ணற்ற சுமைகளைக் கூடவே வைத்திருக்கிறான். இவற்றைச் சற்று இறக்கிவைக்க வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் இந்த ஓட்டம்? சரியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோமா? இறுதியாக எங்கு, எப்படி நிற்போம்? முதலான கேள்விகளைக் கேட்க சிறு நிழல்  தேவைப்படுகிறது. அந்த நிழல் அரவமற்றதாகவும் அடர்த்தியான அமைதிகொண்டதாகவும் இருந்தால் மனது நெருக்கமாகத் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு தன்னைச் சார்ந்தவைகளையும் சுற்றி வரத் தொடங்குகிறது. சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்பும் ஒருவர் செய்ய வேண்டியதுதான் இந்த விபாசனா.

விபாசனா தியான முறையைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. செல்வதற்கும் விரும்பியதுண்டு. ஒருவேளை சென்றால் நாம் பிடித்து வைத்திருக்கும் நம்மை இழந்துவிடுவோமோ? என்கிற அச்சத்திலேயே செல்லாமல் விட்டுவிடுவேன். இந்த எண்ணம் அனைவருக்கும் இருந்திருக்கும் என்பதை அதிஷாவின் வழியாகவே உணர்ந்துகொள்கிறேன். விபாசனா பற்றிய அறிவுறுத்தல் யார் வழியாகவோ எவற்றின் வழியாகவோ உங்களை வந்தடைந்தால் உடனே தயாராகிவிடுங்கள். அதற்கு அதிஷாவின் இந்த நூலை முன்கூட்டியே படித்துவிடுஙகள். 

பத்து நாட்கள் யாரும் யாருடனும் உரையாடக்கூடாது, தனிமையில் தனித்து இருக்க வேண்டும். நேரக்கட்டுப்பாட்டுடன் தியானம் இன்ன பிறவற்றைச் செய்ய வேண்டும் என்கிற வாழ்வியல் மாற்றத்தை ஏற்றுக்கொண்டால் விபாசனா உங்களின் இன்னொரு முகத்தை உங்களுக்கு அடையாளப்படுத்தும் என்பார்கள். மனிதனைக் கடந்து இயற்கையுடனான பரிசுத்த அன்பு, நிதானமான பேச்சு, நிதானமாக முடிவெடுக்கும் தன்மை, உற்றுநோக்கல் முதலான உள்ளொளிகள் வெளிப்படக்கூடும் என்பார்கள். இவற்றை அதிஷா வழியாக உறுதிப்படமுடிகின்றது. 

இந்நூலைத் தன்னனுபவமாக எழுதியிருந்தாலும் நாவலுக்கான விறுவிறுப்பும் காட்சிக்கோர்வைகளும் அழகியலும் இந்நூலில் தென்படுகின்றன. அதிஷாவின் ஹியூமர் சென்ஸ் இந்நூலை வாசிக்கத் தூண்டுகிறது. ஒரு ட்ரையான கான்செப்ட்டை இப்படிச் சொன்னால்தான் பலருக்கும் சென்றடையும் என்கிற வாசகநாடியை நன்றாகவே அறிந்திருக்கிறார். எங்காவது அயர்ச்சித் தோன்றுவதுபோல் இருந்தால் தோழியை இறக்கிவிடுகிறார், தவளையை இறக்கிவிடுகிறார். தோழியும் தவளையும் இந்நூலின் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களாக வலம்வருகின்றனர். 

விரட்ட நினைத்த தவளையை அரவணைத்துக்கொள்கிறார். தோழியின் துண்டுச்சீட்டை காதல்கடித்ததைவிட உன்னதமாக்குகிறார். பத்துநாட்கள் கலந்துகொண்ட சகதோழர்களின் பயிற்சிகாலத்து இன்னல்களை சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார். காற்றுப்பிரிதல், ஏப்பம், கொட்டாவிகளை ‘அனுபவித்து’ எழுதியுள்ளார்.கோயங்காவை பிக்பாஸாக மாற்றியுள்ளார். 

அதிஷா பத்துநாட்கள் நிறைவுசெய்துவிட்டு நான் மாறிவிட்டேன் என்று தம்பட்டம் அடிக்கவில்லை.  நாலு பேருக்குப் போய்ச் சேரட்டும் என்று நினைத்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்.  முதலில் விபாசனா என்றால் பத்துநாள் யாருடனும் பேசாமல் தியானம் செய்வது என்கிற சிறு புரிதலுடன் அதிஷாவின் இந்த நூலைப் படிக்கத் தொடங்குங்கள்.  மற்றதை அதிஷாவே நூலில் புட்டு புட்டு வைத்திருக்கிறார். எனக்குச் சந்தேகம் என்னனா ‘ஏம்ப்பா இப்படி எல்லாத்தையும் புக்குல சொல்லிட்டினா நாங்க என்ன பண்றது?’ னு தம்மசேது மையத்திலிருந்து வழக்கு தொடர்ந்துவிடுவார்களோ என்பதுதான். அந்த அளவிற்கு ஏராளமான தகவல்களை, முன்னேற்பாடுகளை மிகத்  தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதிஷா நூலில் சொல்லாத ஒன்று இருக்கிறது; அதுதான் அனுபவம். அதை நீங்கள் நேரில் சென்றுதான் அனுபவிக்க வேண்டும்.   

ஆசிரியர் - அதிஷா

வெளியீடு - சால்ட் பதிப்பகம்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழமொழி ஐந்நூறு

                                             பழமொழி 500 அனைவருக்கும்  தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து உதவியவர். ஏ.மேனகா, கணினி-வணிகவியல் துறை மாணவி, கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவி, திருச்செங்கோடு. 1)அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் 2)அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் 3)அடியாத மாடு படியாது 4)அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் 5 )அத்திப் பூத்தாற் போல் 6)அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா? 7)அரசனை நம்பி புருஷனைக் கைவிடலாமா? 8)அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் 9)அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் 10)அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும் 11)அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 12)அறிவே சிறந்த ஆற்றல் 13)அனுபவமே சிறந்த  ஆசான் 14)அன்பே கடவுள் 15)ஆசைக்கு அளவில்லை 16)ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம் 17)ஆணுக்கு ஒரு நீதி.. பெண்...

தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்

    தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள்  செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்               - முனைவர் ம.லோகேஸ்வரன்       கொங்குதேர் வாழ்க்கையுடைய அஞ்சிறைத்தும்பியைக் காமம் செப்பாமல் கண்டதைச் சொன்னதிலிருந்து தமிழாய்வு தொடங்கிவிட்டது என்பர். அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் ஒரு தமிழ்ப்படைப்பு வெளியிடப்பெற்றுச் சான்றோர் பலரின் முன்னிலையில் விவாதங்களுக்கு உட்பட்டு கருத்தறிந்து மேற்கொள்ளப்பெற்றுள்ளது. இதற்குத் தொல்காப்பியம் முதலான பண்டை இலக்கியங்கள் தக்கச் சான்றுகளாகும். சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம், உரைச்சிறப்புப் பாயிரம் என்ற வகைப்பாடுகளெல்லாம் பனுவல் மீதான  ◌ாவசிப்பு மரபினை வெளிப்படுத்துகின்றன. வகை தொகைப்படுத்துதல், துறைக்குறிப்பு, கூற்றுக்குறிப்பு, உரையாக்கம் என்கிற வகைப்பாடுகளும் வாசிப்புப் பின்னணியில் நேர்ந்தவைகளேயாகும். ஆகவே ஒரு பனுவலை வாசித்தல் என்கிற பாரம்பரிய முறைமை ககாலத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. அஃது இன்றளவில் வாசிப்பு, ஆய்வு என்கிற இருநிலைகளில் வெவ்வேறு பொருள்பட நிற்கின...

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்லூரியில் நிகழ்த்தப்பெற்ற பேராசிரியரின் நூல்கள் முன்னெடுக்கும் ஆய்வு முறையியல் பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் கட்டுரை அளிக்க  வாய்ப்பமைந்தது. வாழ்க்கையில் உண்டான வரலாற்றுத் தருணம்.         நன்றி பேரா சு.தமிழ்வேலு, பேரா.இரா.அறவேந்தன், பேரா.சிலம்பு நா.செல்வராசு)  கட்டுரை கீழ்வருமாறு     தமிழியல் ஆய்வு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்தேறியுள்ளன. அவை காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அமைந்தவை. அவ்வகையில் இக்காலத் தமிழியல் ஆய்வு வரலாற்றில் தவிர்க்கவியலா ஆளுமையாகத் திகழ்பவர் சிலம்பு நா.செல்வராசு. இவரது ஆய்வுப் போக்குகள் தனித்தன்மை வாய்ந்தவை. அத்தகைய தன்மைகள் வழியாகத் தமிழியல் ஆய்வு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதும் அடுத்தத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய ஆய்வியல் சிந்தனைகளை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். 1.தமிழாய்வுத்தடம் 1887 ஆம் ஆண்டு சி.வை.தா.வ...