உலகிலிருந்து தற்காலிக விடுவிப்பு மௌனம் சரணம் - அதிஷா மனித ஓட்டத்தின் நடுவே சிறு இளைப்பாறல் தேவைப்படுகிறது. அயர்ச்சிகள் மனிதனை ஆற்றாமை இருளுக்குள் தள்ளிவிடுகின்றன. யாருமற்ற வெட்டவெளிகளைத் தேடி ஓடுகிறான். மலையில் நடக்க வேண்டும், பைக்கை எடுத்துக்கொண்டு நெடும்பயணம் செல்ல வேண்டும். leave me alone என்று ஒருமுறையேனும் சொல்லிவிடத் தோன்றுகிறது. கல்விச்சுமை, பணிச்சுமை, குடும்பச்சுமை, உடற்சுமை, மனச்சுமை என்று மனிதன் பிறந்ததிலிருந்து எண்ணற்ற சுமைகளைக் கூடவே வைத்திருக்கிறான். இவற்றைச் சற்று இறக்கிவைக்க வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் இந்த ஓட்டம்? சரியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோமா? இறுதியாக எங்கு, எப்படி நிற்போம்? முதலான கேள்விகளைக் கேட்க சிறு நிழல் தேவைப்படுகிறது. அந்த நிழல் அரவமற்றதாகவும் அடர்த்தியான அமைதிகொண்டதாகவும் இருந்தால் மனது நெருக்கமாகத் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு தன்னைச் சார்ந்தவைகளையும் சுற்றி வரத் தொடங்குகிறது. சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்பும் ஒருவர் செய்ய வேண்டியதுதான் இந்த விபாசனா. விபாசனா தியான முறையைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்