தமிழ்த் தெய்வ வணக்கம் மனோன்மணியம் - பெ.சுந்தரனார் 1) நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே விளக்கம் நீர் நிறைந்த கடல் எனும் ஆடையை உடுத்திய நிலம் எனும் பெண்ணுக்கு, அழகு ஒழுகக்கூடிய சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கின்ற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்த...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்