கொடூர வாழ்க்கை கால் தவறி விழுந்தேன் அம்மா என்று அழைக்க விடாமல் தடுக்கிறது பாலாய்ப் போன இந்த அரசியல்... அடிபட்டுக் கிடக்கிறான் உதவ முடியாமல் செய்கிறது வெக்கங்கெட்ட இந்த சட்டம்... கை இல்லாமல் கை ஏந்துகிறான் காணாமல் போகச் சொல்கிறது பொருளாதார நெருக்கடி... தெரியாமல் கை பட்டதற்கு கேவலமாக திட்டுகிறான் எதற்கு பிரச்சனை போ என்கிறது மனசு... என்ன செய்வது? இதுபோல் கண்டும் காணாமலும் சென்றால் தான் குடும்பம் குடும்பமாக இருக்கிறது..!
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்