தலைவியின் அடம்பிடிப்பு பழங்காலத்தில் கணவன் மனைவி இருவரும் உன்னதமான இல்லற வாழ்க்கையை நடத்தியுள்ளனர் என்பதற்குப் பல சான்றுப் பாடல்களைச் சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டலாம். இருப்பினும் காலத்தால் தனித்து நிற்கக் கூடிய பாடல்கள் சில இருக்கின்றன. அவற்றுள் ஒன்று கலித்தொகையின் பாலைக்கலியில் உள்ள மரையா மரல்கவர எனத் துவங்கும் ஐந்தாவது பாடல். இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் ஆன இரண்டொரு மாதங்களில் கட்டிய மனைவியை விட்டுவிட்டு சம்பாதிக்கும் பொருட்டு வெளிநாடு செல்கின்ற பழக்கத்தினைப் பெரும்பாலான ஊர்களில் காணமுடிகிறது. இக்காட்சி பழங்காலத்திலும் நிகழ்ந்தேறியிருக்கிறது. ஆம் தலைவன் தன் தலைவியைவிட்டுப் பொருள் தேடிச் செல்லும் சூழலைப் பொருள்வயிற் பிரிவு என்று குறிப்பிடுவர். அப்படி ஒருநாள், விடுமுறை முடிந்து, பொருள் தேடும் பொருட்டுப் பயணத்திற்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான். பரபரப்பாகவும் அதேசமயம் தலைவியைப் பிரிகிறோம் என்கிற வருத்தத்தோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். தலைவனின் இத்தகைய செயல்...
முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்