முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செத்தான் சிதம்பரம்

அய்யோ சாகுற வயசா இது..? உன் தைரியத்த இனி யாருக்கிட்ட பாக்கப்போறேனோ..? சண்டாளன் எமனுக்கு அப்படி என்ன அவசரம்..? பாசக்கயிற வேற யாருக்காவது வீசியிருக்கக் கூடாதா..? மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து தெருவைச் சுத்திசுத்தி வந்து பெருங்கூட்டத்தையே கூட்டிவிட்டாள் சவுந்தியம்மா.. இந்தா எலவு வீட்டுல போய் அழுவாம ஊருக்குள்ள வந்து ஏன் ஒப்பாரி வைக்கிற..? கரகரத்த குரலில் பெரியகருப்பன் சத்தம் போட்டதும் சவுந்தியம்மா வாயை முந்தானையால் பொத்திக்கொண்டு அய்யோ ஒப்பாரி வைக்கக் கூட ஒசரம் இல்லாம போய்ட்டேனா என் ராசா… என்று புலம்பியபடி எலவு வீட்டை நோக்கிப் பறந்தாள் சவுந்தி.. யாருப்பா இந்தக் கெழவி ஒப்பாரி வச்சு ஊரையே கூட்டிப்புட்டா..? செத்துப்போயிருக்காரே சிதம்பரம,; அவரோட.. அவரோட..? அட சொல்லுப்பா அவரோட அத்த மவ ப்பா.. ப்ப்பூ அத்த மவதானா..? ஏன் நீ என்னனு நெனச்ச..? இப்படி பேச்சு வளந்து கொண்டே போனத முருகையாவால் பொறுத்திருந்து கேக்க இ~;டமில்ல.. வேகமாக நடயக் கட்டி வீட்டுக்காரங்களுட்ட பணம் வாங்கப் புறப்பட்டான்.. பாடை கட்ட மூங்கில், பானைமுட்டி, பாடை மாலை, அலங்காரப் பொருட்கள், வானவெடி, சுடுகாட்டுப் பொருட்கள் ...

சங்க ஏடு : உயிரும் மகளும்

சங்க ஏடு : உயிரும்  மகளும்             ஆணும் பெண்ணும் பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் கொள்ளுதல் என்பது உலகெங்கிலும் நடக்கின்ற ஒன்று. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ்ப் பாரம்பரியத்தில் தொடர்ந்து வருகின்றது. ஆனால் அன்று ஒரு நாகரிகம் இருந்தது, இன்பமும் துயரமும் கலந்து இருந்தது. எப்படியென்று அகநானூறு என்னும் பழந்தமிழ் நூல் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.    பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் தலைவி (பெண்). தலைவனும் தலைவியும் சந்தித்து உரையாடுவதற்கு ஏற்ற இடமில்லை. காரணம் பல இடையூறுகள் இருந்து கொண்டே வருகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்து அடைத்தும் விடுகின்றனர். இவ்வளவும் கண்டு பொறுக்க முடியாத பெண் தனது அன்பாளனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள். கடுமையான காடு வழியாக இருவரும் ஓடிவிட்டனர் என்ற செய்தி கிடைக்கிறது. இதைக் கேட்ட தாயின் மனது எப்படித் தாங்கும்? புலம்புகிறாள், அழுகிறாள். தாய் புலம்பிக்கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்து வீட்டார்கள். அழாதே! அழாதே! என்ற...

நானே பைத்தியம்,

முழுமனதாய் ஒப்புக்கொள்கிறேன் நான் கண்டிப்பாகப் பைத்தியம் தான்.. எப்படி சிந்தித்தாலும் நான் பைத்தியம் என்பதைவிட்டு   என்னால் மீள முடியவில்லை.. நிச்சயம் கனவல்ல பைத்தியத்திற்கான சாத்தியக்கூறுகள் என் கண்முன்னே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.. நடைபாதையில் கழிப்பறையில் பேருந்து பயணத்தில் மொட்டை மாடியில் கல்லூரி வளாகத்தில் சந்தையில் தியேட்டரில் மருத்துவமனையில் தியானக் கூடத்தில் எனக்கான அடையாளங்களை தொலைத்துவிட்டு எப்படி எப்படியோ திரிந்து கொண்டிருக்கிறேன் நிச்சயம் இது நானல்ல நானாகிப் போன நான்.. அவனைப் போல் ஆக வேண்டும் என்கிற என்னை முதலில் கொல்ல வேண்டும்.. அப்படியே என்னைப் போல் உருவாக்கத் துடிக்கும் எண்ணத்தையும்..

கொடூர வாழ்க்கை

           கொடூர வாழ்க்கை  கால் தவறி விழுந்தேன்  அம்மா என்று அழைக்க விடாமல்  தடுக்கிறது  பாலாய்ப் போன இந்த அரசியல்...  அடிபட்டுக் கிடக்கிறான்   உதவ முடியாமல் செய்கிறது  வெக்கங்கெட்ட இந்த சட்டம்...  கை இல்லாமல்  கை ஏந்துகிறான் காணாமல்  போகச்  சொல்கிறது  பொருளாதார நெருக்கடி... தெரியாமல் கை பட்டதற்கு  கேவலமாக திட்டுகிறான்  எதற்கு பிரச்சனை போ  என்கிறது மனசு... என்ன செய்வது? இதுபோல் கண்டும் காணாமலும்  சென்றால் தான்  குடும்பம் குடும்பமாக இருக்கிறது..!

சாயம் போன வீடு

சாயம் போன வீடு அ ந்த மஞ்சள் கலர் வீடு சாம்பல் நிறமாகச் சாயம்போயிருந்தது வெயிலுக்கு மனிதர்கள் கறுத்துப் போவார்களே அதைப்போல.. கரகரத்தக் குரலில் புறாக்கள் முணங்கிக்கொண்டிருந்தன.. வீட்டைச் சுற்றிலும் காய்ந்து கறுகிப்போன செடிகள்.. மொட்டைமாடியில் இடுப்பொடிந்த ஆண்டனா ஒன்று.. நூற்றுக்கணக்கான வௌவால்கள் எதனையோ கேட்டபடித் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தன.. தேனீக்கள் இல்லாத வெறும் தேன்கூடு மட்டும் வீட்டின் நிலைக்கதவு ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது.. வேறு எங்கோ புலம்பெயர்ந்துவிட்டன இந்த வீட்டு ஆட்களைப் போல தேனீக்களும்.. நிச்சயமாக வீட்டில் யாருமே இல்லை.. அதற்காக அது பேய்வீடும் இல்லை.. ஒரேயொரு பிச்சசைக்காரன் தினசரி தனது வசூலைச் சரிபார்த்துச் செல்கின்றான்.. அன்பு இல்லம் என்பது அவ்வீட்டின் பெயர்.. ஏழு குடும்பம் ஒன்றாக வாழ்ந்த சந்தோச வீடாம் இது என் அபத்தா சொல்லக் கேள்வி... என் வீட்டின் எதிர்ப்புறமாக அந்த வீடு இன்னும் சாயம் போய்க்கொண்டேயிருக்கிறது.. பெருமூச்செறிந்து கடந்துகொண்டிருக்கிறேன் வீடுகள் சாயம் போவது  விருப்பு வெறுப்புகளைச் சகிக்க முடியாத இருப்பின் கழிவுக்காட்சி..!

ஐங்குறுநூறும் முத்தொள்ளாயிரமும்

                                                                                                       சங்கப் பனுவலில் ஒன்றான ஐங்குறுநூற்றினையும் சங்க இலக்கியங்களுக்குப் பின்னர்த் தொகுக்கப்பெற்ற முத்தொள்ளாயிரத்தையும் அகப்புற நிலையில் ஒப்பிட்டு விளக்குவது இவ்ஆய்வுரையின் நோக்கமாகும் . இவ்ஆய்விற்கு ஐங்குறுநூறு முழுமையும் முத்தொள்ளாயிரத்தின் சேரர் பற்றிய பாடல்களும் ஆய்வு எல்லையாகக் கொள்ளப்பெற்றுள்ளன . படைப்பாக்கப் பின்புலமும் தொகுப்பாக்கப் பின்புலமும்    ஐங்குறுநூறும் முத்தொள்ளாயிரமும் வெவ்வேறு அரசுசார் நிறுவனங்களில் தோற்றம் பெற்றவை ; தொகுக்கப்பெற்றவையாகும் . ஐங்குறுநூறு ~ யாராலும் தொகுக்கப்பெறவில்லை . மாறாக , தனியொருவரால் அல்லது குழுக்களால் திட்டமிட்டு இயற்றப்பெற்றது ’( அ ...